செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பாஸ்போர்ட் - போஸ்ட் ஆபிஸ்- பேங்க் வேலை எல்லாம் முடிந்தது.

ஏங்க...

சொல்லு மா...

எங்க மாமா வந்து இருக்காரு இல்ல, அவர் இன்னும் மூணு நாளில் ஊருக்கு கிளம்புறாரு, அவரை இன்றைக்கு கொஞ்சம் பக்கத்தில் உள்ள மால் (கடை) கூட்டி கொண்டு போய் வேண்டியத வாங்கி கொடுங்க.

அய்யய்யோ, இன்றைக்கா? கொஞ்சம் வேலை இருக்கே...

என்று நான் சொன்னதும், மாமா பேச ஆரம்பித்தார்.

பரவாயில்லை விசு, வேற நாள் பார்த்துகொள்ளலாம்.

இல்லங்க... இன்றைக்கே முடித்து விடுங்கள். அது சரி, அப்படி என்ன வேலை?



எல்லாம் குடும்ப வேலை தான். முதலில் பாஸ் போர்ட் ஆபிஸ் போய் சின்னவளோட பாஸ்போர்டை புதுப்பிக்க வேண்டும், அப்புறம் பேங்க் போய் அங்கே சிலவற்றை டெபொசிட் செய்ய வேண்டும், பிறகு கொஞ்சம் பணம் எடுக்க வேண்டும், அது மட்டும் இல்லாமல் ஒரு டிமான்ட் ட்ராப்ட் வேறு ஒன்று வாங்க வேண்டும்,  அதை வாங்கி தபாலில் அனுப்ப வேண்டும். வேண்டும் என்றால் இதை எல்லாம் முடித்து விட்டு அவரை அழைத்து செல்லட்டுமா?

வேண்டாம்மா, விசு கொஞ்சம் பிசி இன்றைக்கு, வேறு ஒரு நாள் பார்த்து கொள்ளலாம்.

இல்லை மாமா, போய் வேலையை முடிங்க..

என்று மனைவி சொல்ல, அவரும் தயங்கி கொண்டே கிளம்பினார். நான் அவரிடம்,

சொன்ன எல்லா வேலையும் விரைவாக முடித்து விடுகிறேன் பின்னர் உங்களை கடைக்கு அழைத்து செல்கின்றேன்

என்றதும் அவர்...

பாஸ் போர்ட் ஆபிஸ், பேங்க், போஸ்ட் ஆபிஸ், வேலை மூன்றும் முடித்து வர நேரம் ஆகுமே..உங்களுக்கு தான் சிரமம் என்று தன்னை தானே நொந்து கொண்டார்.

இருவரும் கிளம்பினோம்... நேராக பாஸ்போர்ட் ஆபிஸிற்கு. அங்கே வண்டியை நிறுத்தியவுடன்,

விசு நீ போய் வேலைய முடித்து கொண்டு வா, நான் வண்டியிலேயே சற்று நேரம் தூங்குகின்றேன்

ஒரு 15 -20 நிமிடம்  கழித்து திரும்பி வந்து வண்டியில் நுழைந்தேன்.

என்ன விசு, இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாயே, ஏதாவது டாகுமென்ட்ஸ் வீட்டில் மறந்து விட்டு வந்தாயா?

இல்லை மாமா, வந்த வேலை சுபமாக முடிந்தது.  வாங்க நாம் உங்களுக்கான கடைக்கு போகலாம்.

அப்ப போஸ்ட் ஆபிஸ், பேங்க் வேலை எல்லாம். முதலில் உங்கள் வேலையை முடியுங்கள் விசு. என்னுடையதை பிறகு பார்த்து கொள்ளலாம்.

மாமா, பாஸ்போர்ட் - போஸ்ட் ஆபிஸ்- பேங்க் வேலை எல்லாம் முடிந்தது.

இனி உங்கள் வேலை தான்.

என்ன சொலுற விசு? நான் ரொம்ப நேரம் தூங்கிவிட்டேனா?

அப்படி இல்லை மாமா, ஒரு 20 நிமிடம் தூங்கி இருப்பீர்கள்.

எப்படி, இவ்வளவு வேலையை 20 நிமிடத்தில் முடித்தாய்?

என்று அவர் கேட்க்க, உள்ளே நடந்ததை கீழே சொல்கிறேன்.

வண்டியில் இருந்து இறங்கி நேராக பாஸ்போர்ட் ஆபிஸ்  உள்ளே சென்றேன். அங்கே ஏற்கனவே நேரம் குறித்து வாங்கி இருந்ததால், சென்ற வேலை 7-8 நிமிடத்தில் முடிந்தது. இங்கே பாஸ்போர்ட் ஆபிஸ் எல்லாம் போஸ்ட் ஆபிஸ் உள்ளே தான் இருக்கும். அந்த வேலையை முடித்து அடுத்த அறையில் உள்ள தபால் நிலையதிருக்கு வந்தேன், அங்கே எனக்கும் மூன்று பேர் இருந்தனர், டோக்கன் ஒன்று பெற்று கொண்டு அடுத்த அறையில் இருந்த   ATM சென்று முதலில் டெபொசிட் வேலைகளை முடித்தேன். பிறகு தேவையான பணத்தை பெற்று கொண்டு, மீண்டும் தபால் அறைக்கு வந்து அங்கு இருந்த ஒரு விண்ணப்பத்தை எடுத்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டிய காரியத்தை எழுதி முடித்தேன், என் முறை வந்ததும்  அங்கே இருந்தவர்களிடம் சென்று எனக்கு ஓர் டிமான்ட் ட்ராப்ட்  (இங்கே மணி ஆர்டர் என்பார்கள்) வாங்கி கொண்டு, எழுதி வைத்து இருந்த கவரில் அதை வைத்து கொடுத்தேன். அடுத்த நிமிடத்தில் அந்த வேலையும் முடிந்தது.

மொத்தமே 15-20 நிமிடம் தான். ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடித்தேன்.
இப்போது மாமவிடம் வரலாம்.

என்ன விசு சொல்ற... பாஸ்போர்ட் ஆபிஸ்-பேங்க்-போஸ்ட் ஆபிஸ் மூன்று வேலையும் 20 நிமிடத்திலா? நம்பவே முடியலையே...

இங்கே வந்த புதிதில் எனக்கும் அப்படி தான் இருந்தது மாமா... இது ஒரு இன்ப அதிர்ச்சி தான்.

விசு, நம்ம ஊரில் இந்த 3 வேலைக்கும் கிட்டத்தட்ட ஒரு காலை முழுவதுமே போய் விடும். இந்த மூன்றில் வேலை செய்யும் ஊழியர்கள் எதோ நேரா சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்து மனித ஜென்மங்களுக்கு உதவி செய்ய வந்தவர்கள் போல நடந்து கொள்வார்கள்..

எனக்கு தெரியும் மாமா... அது எல்லாம் தாண்டி தான் நான் இங்கே வந்தேன்,

சரி என்ன வாங்க வேண்டும் மாமா?

என்னத்த வாங்குறது.. கொஞ்சம் மன நிம்மதியா தான் வாங்கணும். நம்ம நாடு எப்ப இந்த மாதிரி ஆகா போதோ.

www.visuawesome.com

8 கருத்துகள்:

  1. முழு பதிவையும் படித்த பிரகு ஒரு டவுட்டு வருது சார்.

    ஆரம்பத்தில் நீங்கள் அய்யய்யோ, இன்றைக்கா? கொஞ்சம் வேலை இருக்கே...
    சொல்லி இருந்தீர்கல்... பட் எல்லா வேலைகலையும் 20 நிமிடத்தில் முடிச்சிட்டீங்க...

    எப்படி எல்லாம் சொல்லி இருந்தீர்கல். அதெல்லாம் உங்கலுக்கு அங்கு முடிவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
    இங்கு 20 நிமிடத்தில் முடிந்தால்தான் ஆச்சர்யம்.

    உங்கல் நாட்டை பற்றி உங்கலுக்கு எல்லாம் தெரியும் இல்லையா அப்போ எதுக்கு அந்த
    அய்யய்யோ, இன்றைக்கா? கொஞ்சம் வேலை இருக்கே... சொல்லிருந்தீர்கல்
    புரியல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன மகேஷ், இப்படி கேட்டு விட்டீர்கள். எந்த ஆண்மகன் கடைக்கு ஆசையோடு போய் இருக்கான்? ஏதாவது இப்படி வேலை அது இதுன்னு சொன்னா, மனைவியே அவங்க மாமாவை கடைக்கு அழைத்து கொண்டு போவார்கள் என்ற நப்பாசை தான். இருந்தாலும் அவங்களுக்கும் இது மொத்தமே 30 நிமிஷத்துக்கு மேல ஆகாதுன்னு தெரியும் இல்ல, அதனால தான் பரவாயில்லை, மாமாவ கூட்டி கொண்டே போங்கள் என்று ஒரு ஆணை இட்டாள். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. அடிக்கடி அங்குக்கும் இங்குக்குமான வித்தியாசத்தை உங்கள் தளத்தில் படித்துப் படித்து நம் நாட்டை நினைக்கும் போது வருத்தம் மேலொங்குகிறது சார்... நல்ல பதிவு, /

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்மை வருத்த படுத்துவது என் நோக்கம் அல்ல ஜெயசீலன், இந்த பேராசை பிடித்த அரசியல் வாதிகளின் அட்டூழியத்தினால் செழுமையான நம் நாடு சுடு காடு ஆகிவிட்டதே, அந்த வைத்தெரிச்ச்சலை தான் பகிர்ந்து கொள்கிறேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. அதனால தான் அங்கே போறவங்க திரும்ப இங்க வருவதற்கு யோசனை செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் சில பிடிக்காத காரியங்கள் இருக்கு, எழில், ஆனால் நம்ம ஊரை போல இல்லை. நீங்கள் சொல்வது சரி தான். கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. /// சரி என்ன வாங்க வேண்டும் மாமா?
    என்னத்த வாங்குறது.. கொஞ்சம் மன நிம்மதியா தான் வாங்கணும் ///

    இது எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காதே..........அதையும் வாங்கி கொடுத்தேன்னு சொல்லி எங்களை அதிர்ச்சி அடைய செய்யாதீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்.. மாது... வருகைக்கு நன்றி.

      நீக்கு