புதன், 29 அக்டோபர், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - முடிவு?

மாபெரும் தீபாவளி கவிதை போட்டி முடிவு...?




நண்பர்களே, தங்களோடு சேர்ந்து நானும் இந்த போட்டியின் முடிவிற்காக காத்து கொண்டு இருக்கின்றேன். இந்த போட்டியில் நிறைய பதிவர்களின் கவிதைகளை நான் படித்து எனக்குள் நானே வெற்றி பெற்றவரை தீர்மானம் செய்து கொண்டேன்.

இந்த போட்டி ஆரம்பித்த சில நாட்களிலே வந்த கவிதைகளை படித்து பார்த்து விட்டு, இது ஒரு சிறப்பான தமிழ் பதிவர்கள் பங்கேற்கும் அரங்கம், இங்கே நமக்கு வேலை இல்லை என்று போட்டி போடாவிட்டாலும், என்  அறிவிற்கு எட்டியது போல் அந்த படத்திற்கு மட்டும் ஓர் கவிதை அனுப்பி வைத்தேன்.  (இந்த போட்டியில் பங்கேற்க இரண்டு கவிதைகள் எழுத வேண்டும், ஒன்று எழுதவே நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்).

என் கணிப்பு சரியாக உள்ளதா என்ற ஒரு ஆவல். தீபாவளி போல் இந்த முடிவு வரும் என்று இருந்தேன், ஆனால் இன்னும் வரவில்லை. இந்த முடிவு வந்து என் பார்வையில் இருந்து தப்பி விட்டதா என்றும் தெரியவில்லை.


இந்த போட்டியை நடத்திய பெரியோர் அந்த முடிவை தருவார்களா? அப்படியே அவர்கள் ஏற்கனவே தந்து இருந்தால் அந்த தொடர்பை இங்கே யாராவது பின்னோட்டத்தில் போட்டால்  நன்றியாக இருப்பேன்.  .


www.visuawesome.com

9 கருத்துகள்:

  1. வெற்றி பெற்றவர் விவரம் இன்னும் அறிவிக்கப்பட வில்லை நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அந்தக் கவிதை என்ன உங்க குடும்பக்கதையை சொல்வதாக இருக்கிறது( இதெல்லாம் இவனுக்கெப்படித் தெரியுமா? :) குடும்பகதையெல்லாம் சொல்லி ஏமாத்தக்கூடாது. கற்பனை வளம் தெரியணுமாக்கும்..

    அதனால ஆறுதல் பரிசு வேணா ஏதாவது பெருசா முதல்ப் பரிசைவிட பெரிய தொகையாக் கொடுக்க நான் பர்ந்துரைக்கிறேன்.

    ஆனா ஒரு சிக்கல்.. " நான் சொன்னா எவன் கேக்கிறான்.. நாந்தேன் சொல்லிக்கிட்டு அலையறேன்" (16 வயதிதினிலே சப்பாணி (தன் பேரு "கோபால் கிருஷ்ணன்" சொல்வதுபோல் வாசிக்கவும்.) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனைக்கான தொகையை குறைத்து விட்டு மீதிய பைசல் பண்ண சொல்லுங்க வருண். அதுதானே, இது எப்படி இவருக்கு? இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் போல இருக்கே.

      நீக்கு
    2. கற்பனைக்கான தொகையை குறைத்து விட்டு// அஹ்ஹஹ இது நம்ம தருமி-நாகேஷ் சொல்லுவது போல ...சரி சரி....பிழை இருந்தால் என்ன அதற்கு கொஞ்சம் குறைத்துக் கொண்டு பரிசு வழங்கலாமே....ஹஹ்

      நீக்கு
  3. போட்டி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். பரிசில்களும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
    ஆனால்,
    இரண்டு கவிதைக்கும் முழுப்பரிசு உண்டாம்
    தனிக்கவிதைக்குப் பரிசு இல்லையாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா.. ஒரே ஒரு கவிதை எழுதின நான் போட்டியிலேயே பங்கு கொள்ளவில்லை என்று தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன். நான் முடிவை ஆவலோடு எதிர் பார்ப்பதே, எந்த கவிதை வெற்றி பெற்றது என்று அறிந்து கொள்ள தான். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. இந்த முறை நான் கலந்து கொள்ளவில்லை! முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை! நானும் காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அண்ணா.

    தீபாவளியை முன்னிட்டு கவிப் போட்டி நடத்தியது உலகறிந்த விடயம்... எல்லாமாக 100மேற்பட்ட கவிதைகள் வந்துள்ளது. முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் என்ன வென்றால் நாடுவராக அறிவிக்கப்பட்ட ஒரு நடுவர் வீதி விபத்தில் சிக்கிக் கொண்டார் அதனால் நான் மாற்று நாடுவர்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.. போட்டிகள் முடிந்த பின்.. மற்ற நடுவர் சில விழக்களை முன்னிட்டு நடத்திய காரணத்தால் உடல் சுகயினம்முற்ற நிலையில் இருந்தார் இப்போது சரியாவிட்டது குறிப்பிட்ட காலத்தில் புள்ளிகள் வந்தடையவில்லை

    போட்டி முடிவுகளை அறிவிக்காமல் இருப்பது. எனக்கும் நெஞ்சில் சுமையை சுமந்த வண்ணம் உள்ளேன். நான் மீண்டும் நடுவர்களுடன் பேசியபோது அவர்கள் விரைவாக அனுப்புவதாக சொல்லி யுள்ளார்கள்... இருந்தாலும் மிக விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்பதை தாழ்மையுடன் அறியத் தருகிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு