வியாழன், 4 செப்டம்பர், 2014

ரஞ்சித் சின்ஹா- சிபிஐ தலைவர்! ஒரு வெட்க கேடு.

ரஞ்சித் சின்ஹா- சிபிஐ தலைவர்! ஒரு வெட்க கேடு.

" If  you cant prevent rape, enjoy it". "கற்பழிப்பு கண்டிப்பாக நடக்கும் தருவாயில் அதை ருசித்து அனுபவிப்பதே மேல்" என்ற ஒரு கூற்றை சில மாதங்களுக்கு முன் கூறினவர். சிபிஐ தலைமை என்பது இந்தியாவின் நம்பர் 1  போலீஸ் அதிகாரி.

(I dont own this picture)

இவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இதை கூறுகையில் ஒரு சராசரி மனிதனின் இரத்தம் கொதித்தது. இவ்வளவு கேவலமாக யோசிக்க கூடிய இந்த மனிதர் நம் நாட்டின் முதன்மை காவல் அதிகாரியா? என்று நினைக்கையிலே நம் நாட்டின் காவல் துறை எவ்வளவு கீழ்த்தரமாக நடக்கும் என்பதை அறிந்து கொள்ளாலாம்
.
சரி, இது நடந்து இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டதே, இதை ஏன் இப்போது எழுதிகிறேனா? இந்த  அருமையான அதிகாரியின் பெயர் மீண்டும் தொலை காட்சியில் அடி பட்டு கொண்டு இருகின்றது.

கடந்த சில மாதங்களாக கோல்கேட், 2 G  மற்றும் 4 G  போன்ற ஊழல் நடத்திய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இரவு நேரங்களில் இவரின் இல்லத்தில் சென்று இவரை சந்தித்து வந்து இருக்கின்றார்கள். இவர்கள் சந்திப்பு ஒன்றும் நம் நாட்டின் நாணயத்தை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை.



இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், காங்கிரசும் சரி, பிஜேபி யும் சரி, இவரை இந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று சொல்ல முன் வரவில்லை.


இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.

பெண்கள் கற்பழிப்பை கிண்டல் அடித்த இவர் எதையும் செய்ய தயங்க மாட்டார். இவரை காக்க, இவர் வாயை மூட அரசாங்கம் எதுவும் செய்ய தயார். பாவம் இந்தியா... பரிதாபம் இந்தியர்கள்.


ஜெய் ஹிந்த்.

http://www.visuawesome.com/

3 கருத்துகள்:

  1. நான் எப்போதுமே சொல்வேன் காங்கிரசும் பாரதிய ஜனடாவும் பெயரைத்தவிர எல்லா விசயட்திலும் ஒரே குட்டையில் ஊறிய செருப்புகள் தான், சுப்பிரமணிய சாமிகள் தான் இவர்களுக்கு பிடித்தவர்கள், இப்போது சின்ஹா

    பதிலளிநீக்கு
  2. என்ன செய்வது இந்தியாவின் தலையெழுத்து இப்படி அமைந்துவிட்டது! எப்போது மாறுமோ தெரியவில்லை!

    பதிலளிநீக்கு