ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

பள்ளிக்கூடம் போகாமலே...

பள்ளி கூடம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஒரு வாரம் முடிவதற்குள் ஒரு வருடம் முடிந்தது போல் ஒரு உணர்வு. இன்று ஞாயிறு, மதியம் 1 மணி போல். நாளைக்கு பள்ளியில் அறிவியல், மற்றும் ஆங்கில தேர்வு. என்ன செய்வேன் இப்போது. அது மட்டும் இல்லாமல் கணக்கு வீட்டு வேலை இன்னும் முடிக்கவில்லை. எங்கே ஆரம்பிக்க போகிறேன் என்றே தெரியவில்லை.




இதையெல்லாம் முடித்து விட்டாலும், நாளை மாலைக்குள் ஒரு நான்கு மணி நேரம் விளையாட்டு பயிற்ச்சிக்கு வேறு போக வேண்டும். செவ்வாய் கிழமை எங்கள் பரம  எதிரி பள்ளி கூட்டத்துடன் முதல் போட்டி(Golf). யாரிடம் தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் இவர்களிடம் தோற்றால் எங்கள் பள்ளிகூட மாணவர்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள். என்ன செய்வேன் இப்போது.

சரி, முதலில் கணக்கு வீட்டு வேலையை முடித்து மூட்டை கட்டி வைக்கலாம். பாடப்புத்தகத்தை எடுத்து ஆரம்பித்தேன். கொஞ்சம் கடினமாய் தான் இருந்தது. இந்தியா போல் இருந்தால் பரிட்சைக்கு போகும் முன்னால் ஒரு சிறப்பு வகுப்பிற்கு போய் இறுதி பரீட்சையில் மட்டும் நல்ல மதிப்பெண் எடுத்தால் போதும். ஆனால் இங்கே அப்படி இல்லை. 9ம் வகுப்பில் இருந்து தினந்தோறும் நாம் படிக்கும் முறை வைத்து நம் மதிப்பெண்கள் நிர்ணயிக்க படும். 9 அல்ல 10 அல்ல 11ல் நன்றாக படிக்காமல் 12ம் வகுப்பில் நன்றாக படிக்கலாம் என்று இருந்தால், "கோவிந்தா கோவிந்தா தான்" .

(I dont own this picture)

சரி, இப்போது இன்றைய நிலைமைக்கு வரலாம். கணக்கு முடிந்து ஆகிவிட்டது, இப்போது அறிவியல், மற்றும் ஆங்கில பாடம். அடுத்த ரெண்டு - மூன்று மணி நேரம் அதற்கு செலவிட வேண்டும். அறிவியல் பரீட்சைக்கு தயார் ஆகிவிட்டேன், இன்னும் ஆங்கிலம் படிக்க வேண்டும். இரவு 8 மணி போல் ஆகிவிட்டது. காலையில் எழுந்து படிக்கலாம் என்றால் அதுவும் முடியாது. பள்ளி காலை 6:15க்கு ஆரம்பிக்கிறது. 5:30 மணிக்கு எழுந்தால் தான் பள்ளிகூடத்திற்கு நேரத்திற்கு போக முடியும். சரி, இந்த ஆங்கிலத்தை தூங்க போவதற்கு முன்னால் படித்து விட்டு தூங்கலாம் என்று இன்னும் ரெண்டு மணி நேரம் கடந்து விட்டது.

எல்லாம் முடித்து விட்டு, படுக்கைக்கு சென்று படுத்தால் தூக்கம் வரவில்லை. நாளை பள்ளியில் என்ன என்ன நடக்கும் என்று தான் தலையில் மீண்டும் மீண்டும் வருகிறது.

எப்போது தூங்க போனேன் என்றே தெரியாது. 5:30 அலாரம் அடிக்க, ஓடி பிடித்து எழுந்து பள்ளிக்கூடம் போக தயாரானேன். குளித்து எழுந்து மதிய உணவை தாயார் செய்து, காலை உணவை முடித்து வண்டியில் ஏறும் போது 5:50. நேராக பள்ளிக்கூடம் சென்று...

என் மூத்த ராசாத்தியை இறக்கி விட்டு விட்டு... கணக்கு வீட்டு  பாடத்தை கொடுத்து விடு. மற்றும் அறிவியல் - ஆங்கில பரீட்சையை நன்றாக யோசித்து எழுத்து. மற்றும் பள்ளி கூடம் முடிந்தவுடன் நேராக விளையாட்டு மைதானம் அழைத்து செல்கிறேன் என்று அறிவுரை கூறிவிட்டு நேராக என் அலுவலகத்திற்கு  வண்டியை விட்டேன்.

போகும் வழியில். வாழ்க்கை தான் எப்படி மாறிவிட்டது. 10ம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு இவ்வளவு பொறுப்பு தேவையா? என்று ஒரு  கேள்வி.

http://www.visuawesome.com/

4 கருத்துகள்:

  1. அமெரிக்கான்னாலே வித்தியாசம்தான் போல!

    பதிலளிநீக்கு
  2. அங்கேயெல்லாம் அவ்வளவா பிரஷர் கிடைக்காதுன்னு சொல்வாங்க.... அங்கேயும் அப்படித்தானா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ஊர் என்றாலும் பிள்ளைகளுடைய வாழ்க்கையை பார்த்தால் இப்படி தான் இருக்கு எழில் அவர்களே. அதுவும் இங்கே, இந்திய (என்னையும் சேர்த்து தான்) மற்றும் பிற ஆசிய பெற்றோர்களின் இம்சை இருக்கே . பாவம் பிள்ளைகள்.

      நீக்கு
  3. இந்தியாவில் தான் இப்படி என நினைத்தால் அங்கேயுமா, ஆனால் அந்த காரணம் இல்லாததால் தான் இங்கே படித்தது தேர்வு எழுதிய மறு நிமிடம் மறந்துவிடுகிறது போல... உங்களுக்காக என்பது போல‌ ஆரம்பித்து கடசியில் சூப்பராக முடித்துவிட்டீர்கள்.. அருமை

    பதிலளிநீக்கு