புதன், 3 செப்டம்பர், 2014

ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்!

என்ன கணேஷ்? ஆள் ரொம்ப டென்சனா இருக்க, என்ன விஷயம்?

ஒன்னும் இல்ல விசு

மாப்பு, +2ல இருந்து ரெண்டு பெரும் ஒன்னா படிக்கிறோம். இப்ப B.com கடைசி வருஷம், அதுவும் இன்னும் 3 வாரத்தில் முடிய போது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? என்ன காதல் பிரச்சனையா?



ஆமா விசு, 5 வருஷமா தொடர்ந்து லவ் பண்ணி தொலைச்சிட்டேன். B.com முடியும் முன்னே எப்படியாவது என் காதலை சொல்லிடும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.

அட பாவி, +2ல இந்நாள் வரை எவன் அவளிடம் பேசினாலும் "அவ என் ஆள், அவ என் ஆள்"ன்னு  சொல்லுவியே, இன்னும் உன் காதலையே சொல்லவில்லையா?

இல்லை விசு, எத்தனையோ முறை சொல்லலாம்னு போவேன், ஆனால் கடைசி நிமிடத்தில் சொல்லாமல் வந்து விடுவேன்.

எப்ப பாரு அவ கூடவே பேசி கொண்டு இருப்பாயே, அப்ப என்ன கணேஷ் பேசுவிங்க?.

பொதுவா , பாடத்தை பத்தி, இல்லாவிட்டால், வானிலை, ரொம்ப நல்ல மூடில் இருந்தால் சினிமா, இசை..அவ்வளவுதான்.

டேய் முட்டாள், அப்ப ஏன்டா எங்களிடம் "அவ என் ஆள்"ன்னு பில்ட் அப் கொடுத்த.

நீங்க எல்லாம் ஆளுக்கு ஒரு ஆள் வைச்சின்னு இருக்கீங்களே ... நமக்கும் இருந்தா நல்ல இருக்குமே.. அதுதான்.

டேய், மெதுவா பேசு, உன் பிரச்சனைக்கு வந்தா ஊர் கதை எல்லாம் எதுக்கு?

இப்ப என்ன செய்றது விசு?

நேர அவ வீட்டிற்கு போ, அவளிடம் நேரடியாக நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி விடு.

விசு, எனக்கு அவ்வளவு தைரியம் இல்ல, வேண்டும் என்றால் கடிதம் போடட்டுமா?

வேணா கணேஷ், கடிதம் வேண்டாம், வாய்  வார்த்தையில் சொல்லி பிரச்சனை வந்தால் அதை சமாளிப்பது எளிது. கடிதம் என்றால் பெரிய பிரச்சனை ஆகி விடும். பேசாமல் நேராக போய் சொல்லி விடு.

சரி விசு... இன்று மாலை இந்த விஷயத்திற்கு முற்று புள்ளி வைப்பேன்.

ஆல் தி பெஸ்ட், கணேஷ், நாளைக்கு சந்திப்போம்.

அடுத்த நாள் கல்லூரியில் கணேசை காணவில்லை. கூடவே அந்த அம்மணியும் காணவில்லை. ரெண்டு பெரும் இல்லை, கணேஷ் கொடுத்த வைச்சவன் தான், காதல் கை கூடி விட்டது போல் இருக்கின்றது என்று நினைத்தேன். அடுத்த நாளும் அவர்கள் இருவரையும் காணவில்லை. சற்று பொறுமை இழக்க ஆரம்பித்து விட்டு நேராக கணேஷ் வீட்டிற்கு சென்றேன்.

அம்மா கணேஷ் இல்லையா?

என்னானே தெரியல விசு, ரெண்டு நாளா பேய் அறைந்த மாதிரி இருக்கான் (பேய் அறைந்த கதையை மற்றொரு நாள் சொல்கிறேன்). நீ தான் போய் என்னன்னு விசாரி.

டேய், என்னடா.."வாழ்வே மாயம்" கமல் மாதிரி...தாடி... சோகம் எல்லாம்?

மோசம் போச்சு விசு... மோசம் போச்சு... 5 வருஷம் போச்சே விசு.

விவரமா சொல்லி தொலை.

விசு, நீ சொன்ன மாதிரி நேர போய் என் காதலை சொன்னேன். அப்புறம் என்ன நடந்தது என்பதை வெளிய சொல்ல முடியாது.

தலைக்கு மேல போச்சு, ஜான் ஆவது, முழம் ஆவது. சொல்லு,

இல்ல விசு, வெட்க்க கேடு.

என்னடா "அடி கிடி" ஏதாவது வாங்கினாயா?

அடியா இருந்தால் கூட பரவாயில்லை விசு, அதை விட மோசம் விசு.

"காரி கீரி" துப்பிவிட்டாளா?

அது கூட பரவாயில்லை விசு, அதை விட மோசம்.

வீட்டில் பெரியவர்களிடம் சொல்லி ஏதாவது... "நாட்டாமை.. தீர்ப்ப மாத்தி சொல்லு" என்ற ரேஞ்ச்க்கு போயிடிச்சா?

அது கூட பரவாயில்லை விசு...

வேற என்னடா...சொன்னா..

காதலா..நான் உங்களை அந்த எண்ணத்தில் பார்த்ததே இல்லை.. நீங்கள் எனக்கு...

"அண்ணன்" மாதிரின்னு சொன்னாளா?

அது கூட பரவாயில்லை விசு.

வேற என்னடா சொன்னாள்?

காதலா..நான் உங்களை அந்த எண்ணத்தில் பார்த்ததே இல்லை.. நீங்கள் எனக்கு "தம்பி" மாதிரின்னு சொல்லிட்டா...


8 கருத்துகள்:

  1. வணக்கம்

    கதையை நன்றாக சொல்லிய பின்
    வடிவேல் சொல்வது போல மாப்பு வைச்சித்தாடா ஆப்பு என்போது போலதான் முடிந்துள்ளது....
    நன்றாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அவ வைச்ச ஆப்பு இல்ல ரூபன். சொந்த செலவில் இவனே தனக்கு வைத்து கொண்ட ஆப்பு. சட்டு புட்டுன்னு சொல்லுறத விட்டு விட்டு ...5 வருஷம்...? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. ஹா ஹா, நல்ல காமெடி, இப்போதும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் தப்பிக்கின்றனர்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அந்த அம்மணியை தவறே சொல்ல மாட்டேன். இந்த முட்டா பையன், முதலிலே அவளிடம் சொல்லி இருக்க வேண்டும். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வட மட்டும் இல்ல...பஜ்ஜி, பக்கோடா... ஊத்தாப்பம், எல்லாம் போச்சு. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. ஆண்களே - தங்கள்
    காசுப்பை வெற்றுப்பை ஆனால்
    காதலா - நான்
    உங்களை - அந்த
    எண்ணத்தில் பார்த்ததே இல்லை
    நீங்கள்
    எனக்கு அண்ணை/தம்பி மாதிரின்னு
    பெண்களே - உங்களை
    கழட்டி விட்டிடுவாங்களென்று
    சொல்ல வாறியள்!

    பதிலளிநீக்கு