செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

"மூன்று முகம்" ரஜினி -செந்தாமரை மோதல்! அத சொதப்பாதிங்க ப்ளீஸ்.

"இல்லேங்க, நான் அப்படி சொல்லலீங்க...என்னை யாருன்னு கேட்ட முத மனுஷன் நீங்கதான்..அலெக்சு.. டி எஸ் பி அலெக்சு.."

என்ன குழம்பிடிங்களா? ஒன்னும் இல்ல. ரஜினி நடித்த "மூன்று முகம்" படத்த மீண்டும் எடுக்க போறாங்கன்னு எங்கேயோ படிச்சேன், நொந்து போயிட்டேன்.

அலெக்ஸ் பாண்டியன் பாத்திரத்த விடுங்க, வெளிநாட்டில் இருந்து வந்த பாத்திரத்த விடுங்க, ஏன் "ஜானி' என்று "ஜாலியான" பாத்திரத்தில் வந்த ரஜினியை விடுங்க. எந்த ஓர் நடிகர்னால இந்த செந்தாமரை பாத்திரத்தை செய்ய முடியும்?

"அலெக்சு, வெளிய எங்க ஆளுங்க பயங்கரமான ஆயுதங்களோடு ரெடியா இருக்காங்க. நான் ஒரு குரல் கொடுத்தேன், செங்கல் செங்கலா பிச்சி எடுத்துடுவாங்க" என்ற இந்த டயலாக்க அந்த காலத்தில் தியேட்டரில் கேட்கும் போதே உடம்பு நடுங்கும். அவ்வளவு கம்பீரம்.

சரி விடுங்க. இந்த ரோலை வேண்டும் என்றால் நம்ம "பிரகாஷ் ராஜ்" செந்தாமரையை போல செய்ய முடியாவிட்டாலும், தன்னுடைய பாணியில் எப்படியாவது கரை ஏத்திருவாருன்னு வைச்சிக்குவோம். இப்ப மெயின் விஷயத்திற்கு வரலாம்.

இந்த கால நடிகர்களில் எந்த நடிகர்க்கு அலெக்ஸ் பாண்டியன் ரோல் பண்ண "தில்" இருக்கு?அலெக்ஸ் பாண்டியன் ரோல் ஒரு சரித்திரம். அதை தொடவே கூடாது என்பது தான் என்னுடைய தனி பட்ட விருப்பம். இந்த ரோல் பண்றேன் என்று யாராவது முன் வந்தால் அது, 'சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளும்" கதை தான்.

"இன்ஸ்பெக்டர், வெளிய சந்தேகம் படும்படியா யாரு இருந்தாலும் "சூட் அட் சைட்" மேலே என்ன வந்தாலும் நான் பாத்துக்குறேன்... என்று சொல்லி, டேய், தீபெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனா தான் தீ பிடிக்கும், இந்த "அலெக்சு"க்கு எங்கே உரசுனாலும் தீ பிடிக்கும்னு சொல்லி லைட் பண்ற சீனை இந்த காலத்தில் எந்த நடிகரால செய்ய முடியும். அப்படியே செய்தாலும், அத சென்சர் கட் பண்ணிடுவாங்க.

இதனால் எல்லாருக்கும்  சொல்ல விரும்புவது என்னவென்றால்... சில கதாபாத்திரங்கள் மக்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்து நின்று விட்டது. அதை தொட வேண்டாம். அப்படியே விட்டு விடுவோம். இவ்வளவு சொல்லியும் இல்லை, இல்லை நாங்கள் "மூன்று முகம்" படத்தை மீண்டும் தொடுவோம் என்று கூறினால் ஒரு காரியம் பண்ணுங்கள்.

 ரஜினியின் அதே" மூன்று முகம்" படத்தை வேண்டுமானால்மீண்டும் ரீலீஸ் செய்யுங்கள். ஆனால், இந்த முறை இசையை "இளையராஜா' அவர்களிடம் கொடுங்கள். "மூன்று முகம்" படத்தின் ஒரே திருஷ்டி சங்கர் கணேசின் இசை தான்  (ரொம்ப மோசம் இல்லை, சுமரா தான் இருந்தது).

பின் குறிப்பு : இந்த காலத்து நடிகர்களுக்கு, இவ்வளவு சொல்லியும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தால், இது தான் நீங்கள் கதாநாயகனாக நடித்த கடைசி படமாக இருக்கும். இதற்க்கு பின்னால், உங்கள வைச்சி காமெடி தான் பண்ண முடியும்.

நான் மேலே குறிப்பிட்ட அந்த அட்டகாசமான காட்சியை பார்க்க இங்கே சொடுக்கவும்.

10 கருத்துகள்:

  1. வணக்கம்
    தாங்கள்சொல்வது சரிதான்.. எப்படி ரீமிக்ஸ் செய்தாலும் முன்பு நடத்த நடிகனைப் போல நடிக்க முடியாது.பகிர்வுக்கு நன்றி
    என்பக்கம் கவிதையாக
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....:      

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி, ரூபன் அவர்களே,,,

      நீக்கு
  2. நெத்தியடி தலைவா !! இவனுங்க திருந்தவே மாட்டானுங்க ! அருமையான பதிவு ! இனி தொடருவேன் ! இது என்னுடைய வலைப்பக்கம் ! நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்!!

    http://pudhukaiseelan.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி,தங்கள் எழுத்துக்களை கண்டிப்பாக படிப்பேன். தலைவன் என்று அழைக்க வேண்டாம். "அண்ணாத்தே" என்று அழைக்க பட்டால் தான் சுகமே.

      நீக்கு
  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. சிறந்த கருத்துப் பகிர்வு

    பதிலளிநீக்கு
  5. ரஜினியே திரும்ப வந்து நடித்தாலும் நிச்சயமா அந்த பழைய ஸ்டைல் வரவே வராது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே உங்கள் வார்த்தைக்கு மறுப்பே இல்லை. வருகைக்கு நன்றி.

      நீக்கு