புதன், 13 ஆகஸ்ட், 2014

அது சரி! பையனா, பெண்ணா?

என்ன  ரிச்சர்ட் ரொம்ப சோகமா டென்ஷனா இருக்க?

இல்ல பாஸ், என் மனைவி குழந்தை பெத்துக்க போறா. அதுதான் கொஞ்சம் டென்ஷன்.

மனைவி குழந்தை பெத்துக்க போறா, நீ இங்க என்னடா ஆபிஸ்ல.. உடனே வீட்டுக்கு போய் அவங்கள கவனி.



ரொம்ப நன்றி பாஸ். நானே லீவ் போடலாம்னு யோசித்தேன். ஆனால் எனக்கு லீவ் இல்ல, "லாஸ் ஆப் பெ' அதுதான் சம்பளம் இல்லாத லீவ் தான் இருக்கு.
இந்த நேரத்தில் எப்படி லீவ்ன்னு தான் நான் லீவ் எடுக்கவில்லை.

ரிச்சர்ட். நீ என் கம்பனியில் எவ்வளவு நாளா வேளை செய்யற? நான் அக்கொவ்ன்ட்ஸ் டிபார்ட்மெண்டில் சொல்லிக்கிறேன், நீ கிளம்பு.

பாஸ் , அட்வான்ஸ் ஏதாவது கிடைக்குமா?

அட்வான்ஸ் எதுக்கு ரிச்சர்ட், என்னுடைய அன்பளிப்பு.. இந்தா 500$, ஒரு வாரம் லீவ் போட்டு மனைவிய கவனி.

ஒரு வாரம் கழித்து..

என்ன ரிச்சர்ட், மனைவி எப்படி இருக்காங்க?

நல்லா இருக்காங்க பாஸ், உங்கள் எல்லா உதவிக்கும் நன்றி.

அது சரி, பையனா, பெண்ணா?

இவ்வளவு சீக்கிரம் அது எப்படி பாஸ் இப்ப தெரியும்? அதுக்கு இன்னும் 9 மாதம் இருக்கு இல்ல..


நேற்று ராஜ்ய சபாவில் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த மொத்த பார்லிமென்ட் சீசனுக்கு லீவ் அப்ரூவ் பண்ணி இருக்காங்களாம். ராஜ்ய சபாவில் சேர்ந்ததில் இருந்து உள்ளேயே போல. பார்லிமெண்டில் மக்களுக்கு உருப்படியா எதுவும் செய்யல... ஆனால் லீவ் அப்ரூவ். எங்கே போய் சொல்றது?



ஒட்டு மொத்தம்மா எல்லாரையும் முட்டாள் ஆக்குறாங்களே!

பின் குறிப்பு;
இது ஒரு விஷயமான்னு ஆச்சரிய படுறவங்க இந்த இடுகையை
(கை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு... ) படிங்க, அப்ப  என்  ஆதங்கம் புரியும்.

8 கருத்துகள்:

  1. வணக்கம்
    கதை நகர்வு நன்றாக உள்ளது.பகிர்வுக்கு நன்றி.
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி, ரூபன்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அண்ணாத்தே என்ற சொல் அழகாக இருக்கையில் ஆங்கிலேயத்தில் என்ன ஓர் சார்? வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி!

      நீக்கு
  4. பாஸ், என் மனைவி குழந்தை பெத்துக்க போறா
    அது சரி, பையனா, பெண்ணா?
    அதுக்கு இன்னும் 9 மாதம் இருக்கு இல்ல...
    நல்லாயிருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்த சொல்லுவேன் ஐயா... வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி!

      நீக்கு
  5. அடடா.... இப்படி ஒரு பாஸ் எல்லாருக்கும் கெடச்சா எவ்வளவு சந்தோசமா இருக்கும்

    பதிலளிநீக்கு