வெள்ளி, 8 ஜனவரி, 2021

"கணக்குக்கு எதுக்கு வாக்சின்"

சென்ற வாரம் முதல் இங்கே மக்களுக்கு வாக்சின் போட ஆரம்பித்துள்ளார்கள்.

என் குடும்பத்தில் என் அம்மா (வயதானோர் என்ற காரணத்தினால்) அம்மணி (மருத்துவ துறை) அண்ணன்   ( மருத்துவ துறை) அக்கா (மருத்துவ துறை ) என்ற காரணத்தினால்  முன்னுரிமை பெற்று வாக்சின் பெற்று கொண்டார்கள்.


பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் இரண்டு வாரத்தில் மூத்தவளுக்கு  அத்தியாவசிய துறை என்பதாலும் இளையவளுக்கு விளையிட்டு துறை என்பதாலும் வாக்சின் அளிக்கபடுமாம். இப்படி இருக்கையில் நேற்று, இல்லத்தில் அம்மணியிடம் ..

"வாக்சின் போட்டியே, ஏதாவது சைட் எபெக்ட், வந்ததா""

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, கொஞ்சம் அதிகமா தூக்கம் வந்துச்சி"

மனதில்...

அதுக்கு எதுக்கு வாக்சின். நமக்கெல்லாம் வாக்சின் போடாமலே ஏன் இன்னும் சொல்ல போனால் பொங்கல் சாப்பிடாமலே கூட அதிகமா தூக்கம் வரும்.

"சரி, மருத்துவ துறையில் இருக்க உங்க எல்லாருக்கும் போட்டாச்சு, பிள்ளைகளுக்கும் அடுத்த சில  நாட்களில், எனக்கு எப்ப ?"!!

"உங்களுக்கு எதுக்கு? "

இளையவள் அலறினாள்.

"ஹலோ.. நானும் மனுஷன் தான், எனக்கும் வேணும்"

"நீங்க என்ன படிப்பு?"

"தணிக்கை தான்"

"நீங்க என்ன வேலை!!?"

"தணிக்கை தான்"

அதுக்கு தான் உங்களுக்கு எதுக்குன்னு சொன்னேன்"

"ஏன் எங்களுக்கு வராதா?"

"வரும் வராது எல்லாம் இருக்கட்டும், ஆனா அது இப்ப உங்களுக்கு அவசர தேவை இல்லை "

"புரியல"

"முதலில் சமூகத்துக்கு முக்கியமான தேவையான அத்தியாசவமான ஆளுங்களுக்கு போடட்டும், அப்புறம் உங்களை மாதிரி முக்கியம் இல்லாத ஆளுங்களுக்கு போடலாம்"

"என்னை எப்படி முக்கியம் இல்லாதா ஆளுன்னு நீ சொல்லுவ"

"சரி. நாளையில் இருந்து ஒரு மாசத்துக்கு உங்களுக்கு வேலைக்கு போக முடியலைன்னு ஒரு பேச்சுக்கு வைச்சிக்கிங்க, அதனால யாருக்காவது தலை போற பிரச்சனையா"?

 "அப்படி சொல்ல முடியாது.. கணக்கு வழக்கு பார்க்கணும் தானே. எழுதாத கணக்கு அழுதாலும் வராது"

"அவன் அவன் இங்கே கொரோனாவில் உயிர் போகுதுன்னு அழுதுனு  இருக்கான் உங்களுக்கு கணக்கு எழுதுறது தான் முக்கியம், அது தான் உங்களுக்கு இப்ப வாக்சின் கிடையாது"

அப்ப எப்ப தான் எங்களுக்கு போடுவீங்க"

"முதலில், மத்தவங்க உயிரை காப்பாத்துறந்தவங்களுக்கு"

"ஹ்ம்ம்"

"அப்புறம், வயசானவர்களுக்கு "

"ஹ்ம்ம்"

"அப்புறம் வருங்காலத்தோருக்கு"

"உனக்குன்னு சொல்லு"

"ஹ்ம்ம்"

"அப்புறம், அதியவாசியா ஆளுங்களுக்கு "

"அது யார் ?"

"கார்பேஜ் குப்பை வண்டி ஓடுறவங்க, முடி வெட்டுறவங்க, பிளமிங், எலெக்ட்ரிஷியன் , காஸ் கம்பெனியில்  வேலை செய்யுறவங்க"

"ஹலோ, அவங்களோட நான் கொஞ்சம் அதிகமா படிச்சி இருக்கேன், நானும் அத்தியாவசியம் தான், குப்பை வண்டி காரானோடு நான் கம்மியா"

அவங்க ஒரு வாரம் வராட்டி  நாறிடும், நீங்க ஒரு வருஷம் வராட்டி கூட ஒன்னும் ஆகாது!!!"

"உங்க எல்லாருக்கும் வாக்சின்போட்டாச்சு, எனக்கு மட்டும்தான் இல்லை, இப்ப நான் என்ன பண்றது?"

"ஒன்னும் பண்ணாம இருந்தா போதும்"

"புரியல"

"வீட்டிலே உக்காந்து வெந்ததை தின்னுட்டு , அழாம கணக்கு எழுதுங்க, எங்க எல்லாருக்கும் முக்கியமான வேலை இருக்கு"

இளையவள் கிளம்பியவுடன் மனதை தேர்தல் நமக்கே ஆறுதலான பழைய தமிழ் சினிமா பாடல்களை கேட்கலாம் என்று யு டுயூப் சென்றேன், முதல் பாடலே..

"நான்  ஒரு  குமாஸ்தா"

பின்  குறிப்பு:

இந்த பதிவை வெளியிட்ட சில நிமிடங்களில் அருமை நண்பர் ஒருவர் படித்து விட்டு சொன்ன ஆறுதல்.

கவலையே படாத விசு. நமக்காக இல்லாட்டியும், நம்மள்ட்ட இருந்து அவங்கள காப்பாத்திக்க நமக்கும் தருவாங்க. 

நன்றி நண்பரே. 

5 கருத்துகள்:

  1. ஆஹா நீங்க அதிர்ஷ்டகாரர்தான் இன்னிமே ஊசி போடாதால ஷாப்பிங்க் நீங்க போக மாட்டீங்க ராசாத்திகளை இதுதான் சாக்குன்னு அனுப்பி வைத்திடுவீங்க..... இங்க பொதுமக்களோட தினமும் உறவாடுகிற எங்களுக்கு ஊசி போடலை ரிஜ்ஸ்டர் பண்ணுங்க கூப்பிடுகிறோம் என்று சொல்லீட்டாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் இல்லை மதுர. கடைக்கு போகும் போது மட்டும் ஆத்தா புள்ளைங்க மூணு பேரும் சேர்ந்து எகிப்சியன் மம்மி மாதிரி உடம்பு முழுக்க எதையாவது சுத்தின்னு போன்னு அனுப்பிடுறாங்க.

      போர்ந்தாலும் ஆம்பிளைய புறக்கக்கூடாது..

      அப்படி பொறந்து விட்டாலும் தண்ணிக்கையாய் பிழைக்க கூடாது.

      நீக்கு
  2. அங்கேயே அப்படி இருந்தால் இங்கே எப்படி இருக்குமோ....

    பதிலளிநீக்கு
  3. Aangal vaazhkaiye avlo than. Namma panra velai namakku mattum than important.

    பதிலளிநீக்கு