வியாழன், 7 ஜனவரி, 2021

புது மாப்பிள்ளைக்கு ... பா பா ஒப்பாரி...

 ஒரு மாசத்துக்கு முன்னால நல்ல ஒரு நாளா பார்த்து வீட்டுல இருக்க நாலு பெரும் சேர்ந்து குளிருக்கு  தலையில் இருந்து கால் வரை கம்பிளியை போத்திக்குனு மகிழ்ச்சியா கிளம்பினோம்.

வருசா வருஷம் பண்ற காரியம் தானே. இது ஒரு Family Tradition.


இந்த வருஷம் மூத்த ராசாத்தி வர கொஞ்சம் தாமதமானதால், இளையவளிடம்,

"நம்ம மூணு பேர் போய் வாங்கினு வரலாம், கிளம்புங்க"

"வாட்.. ஆர் யு மேட் ? இது ஒரு Tradition .  அவ வந்தவுடன் போகலாம்"

அன்று இரவு மூத்தவள் வர, அடுத்த நாள் காலை...

"சீக்கிரம் கிளம்புங்க, போய் வாங்கினு வரலாம்,"

மூத்தவள், " வாட், ஆர் யு மேட் ? சாயங்காலம் இருட்டியவுடன் குளிரில் Hot Choclatr குடிச்சினே போய் வாங்கணும். அது தான் tradition "

அம்மணியிடம் ," வருஷாவருசம் இந்த மாதிரி ட்ரெடிஷன் ன்னு சொல்லிட்டு 150  டாலர் போகுதே, இருபது வருசத்துக்கு முன்னாலே ஒரு பிளாஸ்டிக் வாங்கி வச்சி இருந்தா இந்நேரத்துக்கு 3000 டாலர் மிச்சம்"

அம்மணி, " வாட் ? ஆர் யு மேட் ?, பிரெஷா தான் வாங்கணும் , இது ஒரு ட்ரெடிஷன்".

என்னாடா இது என்ன பேசினாலும் " வாட், ஆர் யு மேட்? இது ஒரு ட்ரெடிஷன்ன்னு  என்னை திட்டுறதே இவங்க மூணு பேருக்கும் ட்ரெடிஷனா இருக்கு" என்ற நினைப்பு வர தான் செய்தது.

சரி, Hot Choclate போட்டு ஆளுக்கொரு கப் எடுத்து கொண்டு, "என் கார் வேண்டாம் , என் கார் வேண்டாம்ன்னு இவங்க மூணு பெரும் சொல்ல ( அடுத்த நாள் சுத்தம் பண்ண வேண்டுமே?) இவர்கள் சொன்ன ட்ரெடிஷன் மாதிரியே என் காரையே எடுத்து கொண்டு கிளம்பினோம்.

நூற்று கணக்கானவர்கள் இருக்கையில் இவர்கள் மூவரும் ஒவ்வொன்றாக பரிசோதித்து இருக்கையில், நானோ...

"ஐ.. இதை பாரு, சூப்பர்", இதையே வாங்கி கொள்ளலாம்" என்று சொல்ல

இளையவளோ, " அப்பா சொன்னா தப்பா தான் இருக்கும் ! வேணாம், நீங்க சொன்னா நல்லா இருக்காது, வேற பாக்கலாம்" என்று சொல்ல,

அம்மணியோ, " எப்ப பாரு அப்பாவை குறை சொல்லாத, நல்ல இருக்கா பாரு"

"இல்ல மம்மி, இவரு எது எப்படி இருக்குன்னு பாக்க மாட்டாரு. விலை மட்டும் சீப்பா இருந்தா போதும். வாங்கிடுவாரு" என்று சொல்லி கொண்டே அதன் விலையை பார்க்க, அதன் விலையும் அங்கே இருந்த அனைத்தையும் விட குறைவாக இருக்க,

"எப்படீங்க, நூத்து கணக்கா இருக்குறதுல விலை கம்மியா இருக்குறத எப்படி இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சிங்க?"

"அது, ... சீப்புன்னு எனக்கு தெரியாது, பாக்க நல்லா இருந்தது, அது தான்.." என்று நான் சொல்லுமுன்பே,

"கணக்கு பிள்ளை தானே அவரு வேலையே அதுதான்" என்று இளையவள் கொக்கரிக்க,

"சரி, நீங்க மூணு பெரும் செலெக்ட் பண்ணுங்க, அங்கே கேஷியர் எதிரில் பெரிய லைன். நான் அங்கே போய் நிக்குறேன். நீங்க செலெக்ட் பண்ணி வரும் பொது நாம அங்கே வெயிட் பண்ண தேவை இல்லைன்னு " சொல்லிட்டு கிளம்பினேன்.

அரை மணி நேரத்தில் அவர்களும் சிரித்து கொண்டே வர,  ஒன்றை வாங்கி வாகனத்தில் வைத்து இல்லத்தை அடைந்தோம்.

அடுத்த சில மணிநேரங்களில் அலங்கரிப்பு. திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளை போல் அலங்கரித்து வீட்டின் நடுவில் வைத்து அழகு பார்த்தார்கள். அலங்கரிக்கும் போதே ஜிம் ரீவ்ஸ் என்ற பாடகரின் கிறிஸ்துமஸ் பாடல்கள் வேறு .

அடுத்த ஒரு மாதம், இல்லத்தின் ஒரு அங்கம் தான் இந்த கிறிஸ்துமஸ் மரம்.  வந்த பரிசு பொருட்கள் எல்லாம் மரத்தின் அடியில் தஞ்சம் புகை,வீட்டிற்கு சொந்தம் பந்தம் யார் வந்தாலும் மரத்தை ஒரு சுற்று சுற்றி வந்து ஒரே புகழ்ச்சி. ஒவ்வொரு முறையும் வெளியே இருந்து வருகையில் மரத்தின் அடியில் நமக்கு ஏதாவது புதிதாக பரிசு வந்து இருக்கின்றதா என்ற ஒரு நோட்டம். 

இன்று ஜனவரி ஆறு.

"என்னங்க, இன்னைக்கு அந்த கிறிஸ்துமஸ் மரத்தை வெளிய வைக்கணும். கார்பேஜ் வண்டி வரும், மிஸ் பண்ணிடாதீங்க" 

என்று சொல்ல, 

மரத்தில் இருந்த அத்தனை ஆபரணங்களையும் கவனமாக எடுத்து வைத்துவிட்டு மரத்தை குப்பை தொட்டியில் போட்டு வெளியே வைத்தேன்.

தொட்டியில் தலை கீழ் இருக்கும் மரத்தை பார்த்தவுடன் மனம் கனத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரே மாதத்தில் இந்த மரத்தின் நிலைமை எப்படி தலை கீழாக மாறிவிட்டது,

சென்ற மாதம் மாப்பிள்ளை போல் வீட்டிற்கு வந்த இந்த மரம் ஒரே மாதத்தில்  தலை கீழாக குப்பைத் தொட்டியில் என்று நினைக்கையில்..

மாப்பிள்ளை..

வீட்டுக்கு நடுவில்..

அலங்கரித்து..

ஆர்ப்பரித்து.

கொண்டாடப்பட்டு..

பரிசுகளோடு...

ஒரு மாதம் கழித்து ...

குப்பை தொட்டியில்...

தலை கீழாக,...


அட பாவி, பல வருடங்களுக்கு முன்னால என்னை வச்சி செஞ்சாங்களே அது தான்  இந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு வருசா வருஷம் நடக்குது இதுவும் ஒரு வித ட்ரெடிஷன் தான் போல இருக்கு என்ற  எண்ணம் வந்தது !

5 கருத்துகள்:

  1. அட பாவி வீட்டுல ராஜகுமாரன் மாதிரி நடத்துறாங்க ஆனால் வெளியிலே இவரை வைச்சு செய்யுறாங்களாமே. நாலு நாளைக்கு மீனும் மட்டனும் கண்ணுல காட்டக் கூடாது அப்பதான் இவரு சரியாக எழுதுவாறு

    பதிலளிநீக்கு
  2. Haha Vish. India la always plastic than. But matha traditions ellam same than. June July la antha tree paakave paavama irukkum.

    பதிலளிநீக்கு