வியாழன், 10 செப்டம்பர், 2020

NFL - காத்திருந்து காத்திருந்து! (The Wait is Over )

அப்பாடா.. .2020 - 21 உதயமாகிறது. 

இன்னாது? 2020 உதயமாகுதா? இன்னா சொல்லுற என்று கேட்போர்களுக்கு !

இன்று .. அதாவது செப்டம்பர் பத்தாம் தேதியான இன்று National Football League என்று அழைக்கப்படும் அமெரிக்க Football  ஆட்டம் ஆரம்பிக்கின்றது. முதல் ஆட்டமான இன்று நடப்பு சூப்பர் பௌல் சாம்பியன் கான்சாஸ் சிட்டி Chiefs அணிக்கும் ஹூஸ்டன் டெக்சன் அணிக்கும் இன்று துவங்க இருக்கின்றது.

இந்த ஆட்டம் ஒரு சாதாரண ஆட்டமாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை   ஒரு குடும்ப நிகழ்ச்சி தான். 

இன்று முதல் இல்லத்தில் அம்மணி மற்றும் மகள்களுடன் போட்டி வாய் சவடால் என்று இருக்கும்.

                                                       2019 -20 Season at a RAMS Game
அலுவலகத்திலும் சரி, இந்த ஒரே போட்டி மயம் தான்.

நமக்கு என்னமோ, வாழ்வோ தாழ்வோ எப்போதுமே லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்ஸ் ( LA RAMS) அணி தான் பேச்சு மூச்சு. 



                                             (If you dont drink Beer dont get to a Baseball Game) 

இந்த அணிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிக பெரிய நவீன ஸ்டேடியம் இந்த வருடம் கட்டப்பட்டது. அதில் நடக்க இருக்கும் முதல் ஆட்டத்திற்கான டிக்கெட்களை குடும்பத்திற்காக பல மாதங்களுக்கு முன்பே வாங்கி இருந்தாலும் சென்ற மாதம் இந்த வருடம் இந்த போட்டிகள் பாரவையாளர்கள் இல்லாமல் நடத்த படும் என்று அறிவித்து பணத்தை திருப்பி அனுப்பிவிட்டார்கள். 



அருமையான ஸ்டேடியம். புது ஸ்டேடியம், புது அனுபவம் என்று காத்து கிடந்த அனைவருக்கும் மிகவும் வருத்தமே. என்ன செய்வது.


இன்று முதல் அடுத்த பிப்ரவரி வரை .. Football.. Football  Football மட்டுமே. 

நடுவில் எப்போதாவது நேரம் கிடைத்தால் பதிவு எழுத வருகின்றேன். 

GO RAMS  !!!!

2 கருத்துகள்:

  1. Rams were lucky to win the first game! lol

    McCarthy should have tied the the game to 20-20. It was a stupid decision by him to go for 4th down in 25-yard line!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Rams were lucky to win the first game! lol//

      We will take it Varun. Then again, to put on across COWBOYS takes a lot, and you would know that.

      The play that you refer to is during the third Qtr right (4 and 3)?

      Well, cut some slack for the First time coach. :)

      This RAMS looks like a 2018-29 RAMS Varun, I am excited about the season?

      What a first week though!

      Colts, Eagles, 49ers.. starting with a loss!

      GO RAMS.

      நீக்கு