திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ஐம்பதிலும் வீட்டுக்கு வீடு வாசப்படி !

நேத்து ஞாயிறும் அதுவுமா, மதியம் காலிங் பெல் அடிக்க..

"தண்டம், கொரோனா நேரத்துல இங்க என்ன பண்ற, தான் பெற்ற இன்பம் வையகத்துன்னு எதாச்சம் இடக்கு முடக்கா பண்ணிடாத தண்டம்"


"வாத்தியாரே ... கொரோனா எனக்கும் உனக்கும்? நாம ரெண்டு பெரும் தான் கூவம் பக்கத்துலே கருவாடையே கொளம்பு கிண்டி   கொட்டிக்கினவங்க, நம்மை பாத்து கொரோனா தான் பயப்படும்"

அதுவும் சரி தான்.. என்ன விஷயம்"

"நான் வந்த விஷயத்தை விடு.. நீ செத்த வாத்தியாரே.."

"என்னடா சொல்ற"?

"காலையில் இருந்து வீட்டை விட்டு வெளிய வரலை போல இருக்கு!!?"

"இல்ல, கோயில் கூட இப்ப எல்லாம் ஆன் லைன் தானே.,. அதனால வீட்டுக்கு உள்ளேயே தான் இருந்தேன் , என்ன விஷயம்"

"வெளிய வந்து பாரு"

வந்தேன் .. பார்த்தேன்.. 

தண்டம், " பக்கத்து வீடு  வெள்ளைகார மச்சான் தன் அம்மணிக்கு ஐம்பதாவது பிறந்த நாளை எப்படி ஊரறிய கொண்டாடுறான் பாரு..."

"வாவ்.. ஆயிரம் தான் சொல்லு வெள்ளை வெள்ளை தான் தண்டம். அனுபவிச்சு வாழுறான் பாரு"

"நூத்துல ஒன்னு சொன்ன வாத்தியாரே., இருந்தாலும் இப்ப இதை எப்படி சமாளிக்க போற?"

"புரியல"

"அம்மணி வெளிய வந்து இதை பார்த்தா "?

"பார்த்தா?"

"ஹ்ம்ம்.. நான் கொடுத்து வைச்சது , எனக்கு வாய்க்கலை, இது எல்லாம் அமையனும்.. வீடு வரை உறவு, கண் போன போக்கிலே, வாராயோ நீயே வாராயோ . கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரும் அப்படின்னு கண்ணதாசன் வாலி TMS SPB  ரேஞ்சுக்கு பொங்குவாங்களே.. "

"தண்டம்.. எனக்கு பிரச்சனையே இல்லை.. இன்னும் ரெண்டு வாரத்துக்கு இவன் இந்த அலப்பறை எல்லாததையும் எடுக்குற வரைக்கும் நீ சுந்தரியை இந்த பக்கம் கூட்டின்னு வந்துடாத.."

"புரியல, வாத்தியாரே.."

"டே .. அம்மணியோட ஐம்பதாவத நான் வைச்சி தாக்கிட்டேன். அவங்க இன்னும் அதை பத்தி சந்தோசமா பேசுவாங்க."

"ஆமா இல்ல"

"சுந்தரியோட ஐம்பதாவது பிறந்தநாளில் நடந்த விஷயத்தை மறந்துட்டியா "

"எப்படி மறப்பேன் வாத்தியாரே"

தண்டத்தின் பிளாஷ் பேக் ..

இடம் : தண்டத்தின் இல்லம்

நேரம்: தண்டத்திற்கு ராகு காலம்

"என்னங்க, இன்னைக்கு என்ன நாள் தெரியுமா"

"வியாழ கிழமை"

"ரியலி.. நாளைக்கு என்னன்னு கேட்டாக்கூட..!!"

"வெள்ளின்னு  சொல்லுவேன்"

"ரொம்ப சமத்து, இன்னைக்கு என்ன நாள் சொல்லுங்க.."

"ஓ சாரி. .நேத்து ராத்திரி தூங்க போகும் போதுகூட  நினைச்சேன், இப்ப மறந்துட்டேன்.. "

"பரவாயில்ல.. இப்பவாது ஞாபகம் வந்ததே சொல்லுங்க"

"ஆமா இல்ல.. ஒவ்வொரு வியாழனும் குப்பை வண்டி  வரும் இல்ல, குப்பையை வெளியே வைக்கணும்.. இரு, ஒரே நிமிஷம்.."

குப்பையை வைத்து விட்டு, மீண்டும்..

" இன்னைக்கு என்ன நாளுன்னு உங்களுக்கு உண்மையா தெரியல"

"என்னாவா இருக்கும்" 

என்று தண்டம் நினைக்கையில்.. என்னுடைய அலை பேசி அலற..

"ஹலோ தண்டம்.. குட் மார்னிங்.. சுந்தரி இருக்காங்களா.. ? "

"இருக்கா.. என்ன விஷயம்?"

"ஸ்பீக்கரில் போடு "

போட்டான்...

"ஹாப்பி ஐம்பதாவது பிறந்த நாள் சுந்தரி.. "

"தேங்க்ஸ்.."

"தண்டம் செம்ம பிளான் ஏதாவது  வைச்சி இருப்பானே.. எத்தனை  மணிக்கு  எங்க வரணும்ன்னு சொல்லு.."

என்று சொல்லும் போதே லைன் கட் ஆக

அரை மணி நேரம் கழித்து, அலை பேசி..

"அறிவு கெட்டவாத்தியாரே., இந்த மாதிரி விஷத்தை இப்படியா ஸ்பீக்கரில் போட்டு சொல்லுவ.. முதலில்  என்கிட்டே சொல்றது இல்லையா? "

"என்னாச்சி!!?"

"பிறந்த நாளை மறந்துட்டேன் வாத்தியாரே"

"அட பாவி.. இப்ப என்ன பண்ண போற?"

"நான் என்ன பண்ண போறேன்னு என்பது முக்கியம் இல்ல வாத்தியாரே.. நீ என்ன பண்ண போற.. அதுதான் முக்கியம்"

"புரியல "

"மறந்துட்டேனு ஆக்டிங் கொடுத்தேன்.. சர்ப்ரைஸ் பார்ட்டிக்கு ரெடி பண்ணி இருக்கேன்னு சொல்லி மழுப்பிட்டேன்"

"ஓகே.. எப்ப சர்ப்ரைஸ் பார்ட்டி?"

"எனக்கு எப்படி தெரியும், எல்லாத்தையும் நீ தான் அரேஞ் பண்ணுறேன்னு சொல்லிட்டேன்"

"அட பாவி"

"வாத்தியாரே.. என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது.. ஆறு மணிக்கு அஞ்சப்பர் இல்லாட்டி தந்தூரி ரெஸ்ட்டாரெண்டுக்கு  நம்ம ஆளுங்கள  வர சொல்லு.. ஏன் கடைசி நிமிசம்ன்னு கேட்டாங்கனா... நீ தான் சுந்தரி பிறந்த நாளை மறந்துட்டேனு சொல்லு."

"டே, சுந்தரி உன் மனைவி.. அவங்க பிறந்தநாளை நான் எதுக்கு ஞாபகம் வைக்கணும்" 

"சரியா சொன்ன.! பின்ன எதுக்கு ஸ்பீக்கரில் போட சொல்லி வாழ்த்துன,  நீ ஆரம்பிச்சி  வைச்ச, நீயே முடிச்சி வை.

"ட்ரை பண்ணறேன்.."

"வாத்தியாரே , இன்னொரு விஷயம்.. பார்ட்டிக்கு வரவங்கள்ட .. கிப்ட்டு லொட்டு லொசுக்குன்னு எதுவும் எடுத்துனு வர வேணாம்னு சொல்லிடு"

"பெரிய மனசு தண்டம் உனக்கு "

"பொறுமை.. கிப்ட்ன்னு லொட்டு லொசுக்குனு வேணாம்னு தான் சொன்னேன்.. ரொக்கமா கையில் கொடுத்துட்டு சொல்லு"

"புழைக்க தெரிஞ்ச ஆளு தண்டம் நீ"

எப்படியோ சமாளித்து சுந்தரியின் ஐம்பதாவது அன்று கொண்டாடினோம்.

பின் குறிப்பு :

உங்களில் சில, அது என்ன உங்க வீட்டு அம்மணியின் ஐம்பதாவது பிறந்தநாளுக்கு என்னமோ வைச்சி தாக்கிட்டேன்னு சொன்ன.. அப்படி என்ன பண்ண ? என்ற கேள்விக்கு..

தங்கம் வைரம் வைடூரியம் என்று எதுவும் தரவில்லை. ஒரு குறும்படம் தயாரித்து ஒளிபரப்ப, அதை கண்டஅம்மணி.. 

"எனக்கு நீங்க இதுவரை கொடுத்த பரிசில்இது தான் பெஸ்ட் என்று இன்றும்  சொல்வார்கள். நீங்களும் கண்டு கழிக்க.. இதோ...


அம்மணியின் ஐம்பதாவது பிறந்தநாள் பரிசு 




3 கருத்துகள்:

  1. Youtube காலம்... அதனால் அதையும் தொடரலாம்...!

    பதிலளிநீக்கு
  2. அடடா இந்த ஐடியா அப்பவே தெரிஞ்சிருச்சா , சீப்பா முடிச்சிருப்பேன் .எனக்கெல்லாம் அவ்வளவு விவரம் பத்தாது .ஏற்கனவே பாத்திருந்தாலும் சுவையா இருந்துச்சு.அதிலும் ரீ ரெக்கார்டிங்கல இளையராஜாவை மிஞ்சிறுவ போல தம்பி .

    பதிலளிநீக்கு