புதன், 19 ஆகஸ்ட், 2020

பாடகர் SPB க்கு தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்யும்.

பதிவை துவங்கும் முன்.... First thing first.. 


 பாடகர் SPB பூரண உடல்நலம் பெற்று இல்லம் திரும்பவேண்டும் என்று வேண்டி கொண்டு ... 

 நேற்று ஒரு செய்தி படித்தேன். 

"பாடகர் SPB யின் மருத்தவ மற்றும் அனைத்து உதவிகளையும் தமிழக அரசு எடுத்து கொள்ளும்"

என்ன ஒரு அறிவுகெட்ட தனமான செயல். 

SPB ஒரு கோட்டீஸ்வரன். அவரிடம் பணத்திற்கும் மற்றும் சமூக அந்தஸ்திற்கும் ஏதாவது குறைச்சல் இருக்குமா? அவரை பரிமார்த்துக்கொள்ளும் திறன் அவரிடம் உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஆடிட்டர் வக்கீல் ஆலோசர்கள் என்று பலரும் இருக்க நல்ல இன்சூரன்ஸ் பாலிசி எல்லாம் வைத்து இருப்பார். நீங்கள் ஒன்றும் அவருக்கு ஓன்று சேவை செய்ய தேவை இல்லை. 

நீங்கள் ஒன்றும் அவருக்கு செய்யவேண்டாம். உண்மையாகவே அவருக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்றால்....இந்த கொரோனா காலத்தில் வேலை இழந்து உணவிற்கு தவிக்கும் வளரும் பாடகர்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் மற்றும் திரை துறையில் உள்ள மற்ற நலிந்தோருக்கும் மூன்று வேளை  சாப்பாட்டிற்கு வழி செய்யுங்கள். 

அதை விட்டு விட்டு இப்படி வசதியானோருக்கு அனைத்தையும் செய்வதை SPBயே அனுமதிக்கமாட்டார். SPB க்கு உதவி என்ற உங்களின் உள்நோக்கம் கொடூரமானது. இதையும் வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தான் தேடுவீர்கள். 

 
உங்களை எல்லாம் எங்களை ஆள தேர்ந்தெடுத்த எங்களை நாங்களே...
_______________     _____________         அடிச்சிக்கணும்! 



பின் குறிப்பு :

ப்ளீஸ்!கோடிட்ட இடத்தை நிரப்பவும்.

2 கருத்துகள்:

  1. விசு இந்த தொற்று பரவும் காலத்தில் எஸ் பி பி க்கு தொற்று வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகும் முன் அவரே பலபேருக்கு உதவி செய்து வந்தார். எனவே நீங்க்ள் சொல்லியிருப்பது போல் அவரே கூட மற்ற நலிந்த கலைஞர்களுக்கு உதவத்தான் விரும்புவார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஒரு பெரிய பண மூட்டையை அடிக்கலாம் என்று தான் இவையெல்லாம்...

    பதிலளிநீக்கு