திங்கள், 6 ஜூலை, 2020

எங்க அப்பா மட்டும் இருந்து இருந்தா? - தொடர்ச்சி

சென்ற பதிவில் அம்மணி " எங்க அப்பா மட்டும் இருந்து இருந்தா" (அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்)  என்று ஒரு பிட்டை போட நானோ அவரு இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பாருன்னு கூகுளை தட்டி..

"Gardening ideas for small patios" என்று கேட்க பல பதில்கள் வந்தது.

பிளாஸ்டிக் பைப்பை இரண்டாக வெட்டி, முதல் வகை.


மரக்கட்டையினால் செய்து வேலியில் / சுற்றில் தொங்க விடுவதை போன்ற அடுத்த வகை.

"எவ்வளவு செலவு பண்ணீங்க.. எங்க அப்பா இருந்து இருந்தாருன்னா, ஒரு கால்குலேட்டர் எடுத்து எல்லாத்தையும் கணக்கு போட்டு சரியா பண்ணி இருப்பார் "

என்ற அசரீரி கேட்க

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பிளாஸ்டிக் கிட்டத்தட்ட 3 மடங்கு விலை என்று அறிந்து அருகில் உள்ள "ஹோம்  டிப்போ" கடைக்கு சென்று உள்ளே நிலைய முயலுகையில் முக வசம் இல்லை என்று அவர்கள் திருப்பி அனுப்ப, அடித்து பிடித்து இல்லத்திற்கு வந்து, முககவசத்தை அணிந்து கொண்டு மீண்டும் செல்கையில்...

அலை பேசி அலறியது..

"என்னங்க.. ?"

"சொல்லு!"

" வெண்டை காய், , கத்திரிக்காய், தக்காளி, பச்ச மிளாகாய்"

"ஒரு ஐட்டம் மட்டும் செய்யுறேன்.. ஒரே வேளைக்கு இத்தனை வகை காய் சமைச்சா வயித்துக்கு ஒத்துக்காது"

"ஐயோ , அது இல்ல.. என் தோட்டம்"

"யு மீன் நம்ம தோட்டம்?"

"எங்க அப்பா இருந்து இருந்தாருன்னா.?."

"உங்க அக்காட்ட நானும் கேட்டேன்"

"என்ன கேட்டீங்க?"

"உங்க அப்பா இருந்து இருந்தாருன்னா இந்த நேரத்துல என்ன செஞ்சி இருப்பாருனு?"

"என்ன சொன்னாங்க!!!?"

"அவரு ஒரே தொட்டியில் இம்புட்டு போட்டு இருக்க மாட்டாராம்.., தனி தனியா தான் போட்டு இருப்பாராம் "

"அங்கே நிறைய நிலம், இங்கே தான் இல்லையே.."

"நான் சொன்ன அதே பாய்ண்ட்!!!"

"எனக்கு என்ன பண்ணுவீங்க தெரியாது, எங்க அப்பா இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பாரோ அதை மாதிரி ஏதாவது  பண்ணுங்க.."

"சரி.. முயற்சி செய்றேன்"


கடைக்கு மீண்டும் சென்று கட்டை சில வாங்கி கொண்டு, உதவிக்கு ஒரு மெக்சிக்கன் ஆளையும் அழைத்து கொண்டு அடுத்த சில  மணி நேரத்தில்.. 

தக்காளி, கத்திரி, வெண்டை, மிளகாய் அனைத்தையும் பிரித்து வைத்தேன்.



"பரவாயில்லை .. வடிவா பண்ணி இருக்கீங்க"

"தேங்க்ஸ், உங்க அப்பா இருந்து இருந்தா இப்படி செஞ்சி இருப்பாரா?"

"இப்படி  தான் செஞ்சி இருப்பாரு. இருந்தாலும் அந்த மெக்சிகனுக்கு காசை கொடுக்குறதுக்கு பதிலா அவரே செஞ்சி இருப்பாரு.."

"அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?"

"அவரு கவர்ன்மென்ட் ஆர்க்கிடெக்ட் , ஆக்கும்"

என்று அம்மணி சொல்கையில்..

இளையவள் அலை பேசி அலற, அவள் யாரிடமோ பதில் சொல்லி கொண்டு இருந்தால்..

"ரியலி, கவலைய விடு"

.....!!!

"இது எங்க அப்பாவுக்கு ஒரு பிரச்சனையே இல்லை"

.....!!!!

"ஐயோ சொன்னா நம்ப மாட்ட, அரை மணிநேரத்தில் செஞ்சிடுவாரு, ஹி இஸ் குட்"

....!!!!

"போன மாசம் இந்த மாதிரி தான் இன்னொரு விஷயத்தில் அவ்வளவு கரெக்ட்டா பண்ணாரு."

..!!!!

"நோ ப்ராப்ளம், எங்க அப்பா பாத்துக்குவாரு"

என்று அலைபேசியை துண்டிக்க..

அம்மணி..

"என்னடி.. எங்க அப்பாற் பாத்துக்குவாரு.. எங்க அப்பா பாத்துக்குவாருன்னு என்னமோ ஊரிலே உனக்கு ஒருத்திக்கு தான் அப்பா  இருக்க மாதிரி.."

"என் அப்பாக்கு தான் எல்லாம் தெரியுமே.. "

என்று பதில் அளித்து விட்டு என்னை பார்த்து.. பெருமையுடன்,

"ரைட் டாடா!!!! ?"

என்று சொல்ல.. நானோ..

"நீ எப்ப மக தப்பா பேசி இருக்க.. எப்போதுமே கரெக்ட் தான்.. வா , உன் ப்ரெண்டுக்கு உதவி செய்ய போகலாம்.."

என்று கிளம்புகையில், அம்மணி..

"அவ என்ன மனசுல இவ்வளவு பெருமையா பேசுறா.. நீங்க கொஞ்சம் கூட அவளை கண்டிச்சி திருத்தாமா.. எங்க அப்பா மட்டும்  இருந்து இருந்தா?!!!!"

"இருந்து இருந்தா!!!?"

"அவ்ள்ட்ட அப்பாவாவே இருந்தாலும் எப்பப்பாரு அவரை பத்தி பெருமையா பேசக்கூடாதுன்னு சொல்லி இருப்பாரு."

மனதில்..

"அய்யகோ.. உங்க அப்பா மட்டும் இப்ப இருந்து இருந்தா என்று நினைத்து ஒரு பெரு மூச்சு விட்டேன்! 

9 கருத்துகள்:

  1. நல்ல ஐடியா... உங்க வீட்டுல வாழை மரத்துல எல்லா காய்களையும் பிடிங்கி சாப்டாச்சா? வாழைப்பூவை மட்டும் விட்டு வச்சிருக்கீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மரத்து குலை சரியாக காய்க்கவில்லை. மொத்தமே நான்கு சீப்புகள் தான் உள்ளன.

      நீக்கு
  2. உங்க அப்பா மட்டும் இப்ப இருந்து இருந்தா …..

    பதிலளிநீக்கு

  3. அருமையாக ஆரம்பித்து மிக நன்றாக முடித்து இருக்கீங்க வீசு

    பதிலளிநீக்கு
  4. விசு நீங்க வாங்கி உபயோகித்து இருப்பது Severe Weather Pressure Treated Lumber‎ தானே? படத்தை பார்த்தால் ரெகுலர் வுட் மாதிரி இருக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுர..

      மெக்சிக்கன் கட்டை விஷயத்தில் சொதப்பிட்டான் மதுர. ரெண்டே நாளில் வாய் பிளந்து வயித்த தள்ளின்னு நிக்குது. விசாளக்கிழமை வரேன்னு சொல்லியிருக்கான்.

      நீக்கு
  5. மகள்களுக்கு எப்பவுமே அப்பா மேல் பாசம்தான்...  
    வாழை குலை தள்ளிய பிறகு அதிலிருந்து வாழைத்தண்டு எடுக்காமல் வாழையை படுக்கை வாக்கில் வைத்து அதில் துளைகள் இரு அதில் செடிகள் நடலாம்.  அருமையாக வரும்.  வரிசையாக தனித்தனியாக...

    பதிலளிநீக்கு