வெள்ளி, 17 ஜூலை, 2020

ஒரு ஆணி(யி)ன் மனது இன்னொரு....!!

இரண்டு நாட்களுக்கு முன்பு " இல்லத்தரசிகளுக்கு ஒரு சலாம்" என்று ஒரு பதிவிட்டேன். அதில், இந்த கொரோனா காலத்தில் அடியேனின் இல்லத்தில் உள்ள மூண்டு மகாராசிகளும் வேலைக்கு தம் தம் நிறுவனத்திற்கு சென்று விடுவதும் நான் மட்டும் இல்லத்திலேயே 24 மணிநேரமும் இருப்பதை பற்றியும் எழுதி இருந்தேன்.

குறிப்பாக, இந்நாள் வரை .. 

வீட்டில் இருக்கும் அம்மணிகள், கணவன் மற்றும் பிள்ளைகள் வெளியே சென்றவுடன் புத்தகம் படிப்பது மற்றும் டிவி பார்ப்பது என்று   இருப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் சுக்கு நூறாகியது. 

இல்லத்தில் தான் எத்தனை வேலை? எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று எழுதி...

மற்றும், 

இவர்கள் மூவருக்கும் நான் பகல் நேரத்தில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு  என் அலுவலக வேலையையும் செய்துவருகிறேன் என்பதையும் விளக்கினேன்.

இறுதியாக, அந்த தலைப்பே சொன்னதை போல், இவ்வளவு  வேலைகளை "அசால்ட்டாக" செய்து கொஞ்சமும் அலப்பறை இல்லாமால் இருக்கும் "இல்லத்தரசிகளுக்கு ஒரு சலாம்  " என்று பதிவை முடித்தேன்.

இதை படித்த கிழக்கு சீமை தென்மதுரை தமிழ் கிரேஸ், 

"நாய்க்கு பேர் வச்சியே , சோறு வச்சியா"

 என்ற பாணியில் ...

//வேலை முடிச்சுட்டீங்களா என்று உங்கள் பாஸ் கேட்கலையா :))//

என்று ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.

என்ன கிரேஸ், இப்படி வெள்ளந்தியா இருக்கீங்க!!!? 

அது எப்படி கேப்பார்..? 

அவரும் ஒரு ஆண்  மகன் தானே.. 

ஒரு ஆணின் மனது இன்னொரு ஆணுக்கு தானே புரியும்...

பாம்பின் கால் பாம்பறியும்...

வீட்டுக்கு வீடு வாசப்படி ...

உன் கண்ணில் நீர் வழிந்தால் ...

தண்ணீரிலே மீன் அழுதால் .. 

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு ...

என்று அறிந்தவர் தானே.. அதனால் அப்படி ஒரு கேள்வி கேட்கமாட்டார்!

ஏன் தெரியுமா?

அவரும் இல்லத்தில் இருந்து தான் பணி புரிகின்றார். அங்கேயும் இதே நிலைமை தான்!

4 கருத்துகள்:

  1. ஹாஹாஹா
    நீங்கள் சொன்ன விசயங்கள் அவருக்குத் தெரிந்தாலும் உங்கள் திறமையும் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். இல்லத்தரசிகளைப் போல் மல்டி டாஸ்க்கிங் கற்றுக்கொண்ட இல்லத்தரசர்களுக்கு சலாம் சலாம்.

    தொடர் பதிவை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஹலோ நீங்க மனுசனா நீங்க உங்க முந்தையை இல்லத்தரசிகளுக்கு ஒரு சலாம்" பதிவை படித்துவிட்டு கிரேஸ் அவ்ங்க வூட்டுகாரரிடம் பாத்தீங்களா இந்த மில்லியனர் விசு மனைவிக்கு காபி போட்டு தருகிறார் நீங்கள் எனக்கு இப்படி தருவதில்லை என்று ஒரே சண்டையாம்.... பாத்தீங்களா நல்லா இருந்தமனுசன் வாழ்க்கையில உங்கள் பதிவு எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா தமாஷா பேசுற மதுர. உன் வாய்க்கு சக்கரை தான் போடணும்!

      நீக்கு