வெள்ளி, 22 மே, 2020

கார்த்தி டயல் செய்யாமலே இருந்து இருக்கலாம்!


நேற்று நண்பர் ஒருவர்,

"விசு, நீ கண்டிப்பாக பாக்கணும். கவுதம் மேனன் ஒரு குறும்படம் எடுத்து இருக்கார் "

"டே .. நான் இது வரை கவுதம் மேனன் எடுத்த முழு படம் எதையுமே பார்த்தது இல்ல.. குறும்படத்தை எங்க பாக்குறது?"

"அட பாவத்த, விண்ணை தாண்டி வருவாயா, படத்தை நீ பாக்கல?"

"நோ, ஏதாவது மிஸ் பண்ணிட்டேனா?"

"செமம படம் விசு .. அட்டகாசமான லவ் ஸ்டோரி"

"லவ் ஸ்டோரி? ஆளை விடு..வர வர காதல் கசக்குது"

"நீ இன்னும் 80-90 லேயே இருக்க விசு. வெளிய வா "

"அதுவே நல்லா சுகமா இருக்கு, அங்கேயே இருந்துடுறேன்.. அங்கே இல்லாத லவ் ஸ்டோரியா?"

"சரி, நீ இந்த குறும்படத்தை பாத்தே ஆகணும். விண்ணை தாண்டி வருவாயின் தொடர்ச்சி!"



"நான் இன்னும் விண்ணையே தாண்டலை , அதை தாண்டாம  இதை பார்த்தா ஏதாவது புரியுமா?"

"கொஞ்சம் சிரமம் தான், இப்படி பண்ணேன்.. அதை பாத்துட்டு அப்புறமா இதை பாரு.."

"சான்ஸே இல்ல, குட் பை.."

"விசு, என்னமோ பெரிய தாசில்தார் போல நேரம் இல்ல நேரம் இல்லனு..."

"டே.. நான் நேரம் இல்லைனு எப்ப சொன்னேன்.. விடிஞ்சா விட்டத்தை பார்த்துன்னு இருக்கேன், நேரம் எல்லாம் நிறைய இருக்கு, படம் பாக்குற அளவுக்கு பொறுமை இல்ல"

"சரி,  இது பத்து நிமிஷம் போல தான் பாரு.."

"பேரு என்ன சொன்ன?"

"கார்த்தி டயல் செய்த எண்"

"ஓகே "

பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன்..பார்த்தேன்!

அடுத்த பத்து நிமிடம்...என்னடா இது? "டார்ச்சர்" என்ற நிலைக்கு தள்ள பட்டுவிட்டேன் . குறும்படத்திற்கான என்ன தகுதியும் இல்லை. பிரிந்த காதலனும் காதலியும் பல வருடங்களுக்கு பின்னர் தொலைபேசியில் உரையாடுகிறார்கள்.  உரையாடுகிறார்கள் என்பதை விட அறுத்து தள்ளி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு வேளை, விண்ணை தாண்டி படத்தை பார்த்தவர்களுக்கு இந்த குறும்படம் ஏதாவது சொல்லியதா என்று தெரியவில்லை. ஆனால் பத்து நிமிடத்தை தாரை வார்த்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

நடுவில் மார்க்கெட்டிங் மற்றும் ஏதாவது  ஒரு விவாத பொருளாக வரவேண்டுமென்று , நாயகன் நாயகியை  "பிச்" என்று சொல்ல நாயகி நகைக்கின்றாள். இருவருக்குமே அதற்கான அர்த்தம் தெரியவில்லை போல இருக்கின்றது.   தேவை இல்லாத இந்த வார்த்தை ஒரு விவாத பொருளாக்க வேண்டுமென்றே  செயற்கையாக புகுத்த பட்டுள்ளது.

பத்தே நிமிடங்களுக்கான இந்த படத்தை எத்தனைநாள் ஷூட் செய்தார்கள் என்று தெரியவில்லை. நாயகனின் தாடி வெவ்வேறு நாள் எடுத்ததுபோல் தெரிகின்றது.  படத்தை சார்ந்தோருக்கு கொஞ்சமாவது கமிட்மென்ட் வேண்டாமா என்று நினைக்க தோன்றுகின்றது .


ஆரம்ப காட்சியில் நாயகன் எதோ கதையை எழுத முயன்று எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்.  அழித்து அழித்து எழுதுகிறார். படம் முடியும் போது அந்த கதையைஅவர் முடித்து வைத்ததை போல் ஒரு காட்சி. அந்த முடிவிலாவது ஒரே ஒரு "வாக்கியத்தை " வைத்து படத்தை மனதில் நிற்கும்படி செய்து இருக்கலாம்.

மற்றபடி, விசேஷம் எதுவும் இல்லை., இசை ARR என்று போட்டு இருந்தது.  காதலன் படத்து பேக்-கிரௌண்ட்  இசையை இன்னொரு முறை கேட்க வாய்ப்பு. ஜென்டில் மென் குஞ்சுமோன் கோர்ட்டுக்கு செல்லாமல் இருந்தால் சரி.

பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திப்பதை வார்த்தை இல்லாமலே, இசை இல்லாமலே பார்வையாலே ( இங்கே கூட வீடியோ கால் போட்டு இருக்கலாமோ?)  இன்னும் அழகாக சொல்லி இருக்கலாம்.

Hmmm.. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இன்று காலை ஒரு சிறிய கவிதை படிக்க நேர்ந்தது. உமா என்ற பதிவாளர்
தனது சில கவிதைகள் என்ற தளத்தில்இருந்து எழுதி இருந்தார்.
இந்த படத்தை பார்த்ததும் சில நிமிடங்களில் அதை படித்ததால் மனதில் ஒரு சிறிய பாதிப்பு.

பிரிந்த காதலர் பல வருடங்களுக்கு பின்னர் சந்தித்தால்..

நடக்காத நாடகம்
முடியாமல் தொடர்கிறது...
பேசாத வார்த்தைகள் 
மௌனத்தில் கரைகிறது...

இல்லாத ஓர் உணர்வை 
உள்நெஞ்சம் உணர்கிறது...
சொல்லாத செய்திகளைச்
சுகமென்றே சுமக்கிறது...

பொல்லாத நிஜங்களையோ
பொய்யென்றே சொல்கிறது...
பொழுதெல்லாம் புதிதான
கற்பனையில் திளைக்கிறது...

புரியாத மொழியெல்லாம்
பூவிழிகள் பேசிடவே...
வாய்பேசும் மொழியெல்லாம் 
வசப்படாமல் போகிறது...

நில்லாத நாடகத்தில் 
நிஜமெல்லாம் கனவாக...
கலைந்திடாத கனவெல்லாம்
கற்பனையில்  நிஜமாகும்...

மேலே உள்ள இந்த கவிதை முழுதாக படித்தால் ஒரு மல்லிப்பூ  மாலை . ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துக்கொண்டால் முகர பல முல்லை.

இது ...கவுதம் மேனன்.. சொல்ல வந்த விஷயத்தை இப்படி சொல்லணும். நடுவுல மானே தேனே பிச்ன்னு எல்லாம் போட தேவை இல்லை.

5 கருத்துகள்:


  1. உம்ம மாதிரி படிச்ச ஆட்களுக்கு கவிதை படிச்சா காதல் புரியும் ஆனால் எங்களுக்கு.....??

    பதிலளிநீக்கு
  2. // நான் இன்னும் விண்ணையே தாண்டலை //

    ஹா... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  3. படம் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் நகைச்சுவை கலந்து உங்கள் பதிவை ரசித்தேன். உமா அவர்களின் கவிதை அருமை.

    துளசிதரன்

    விசு இந்த கா ட செ எ ஷூட்டிங்க் அவங்கவங்க வீட்டுலருந்து ஷூட் செய்து கொடுத்த படம்னு ஏதோ செய்தி வந்துச்சு. லாக்டவுன் இல்லையா அதனால. படம் எனக்கு எதுவும் புரியலை ஹிஹிஹிஹி. ஏன்னா விதாவ நான் பார்த்தது இல்லை. அது பாக்காட்டாலும் இந்தக் குறும்படம் எதுவும் சொல்லலை. உமாவின் கவிதை செம. ஆப்ட் நீங்க இங்க கொடுத்திருப்பது. படம் சொல்ல வேண்டியதை சொல்லலை ஆனா கவிதை சொல்லுது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நகைச்சுவை நுண்ணறிவின் உச்சம்

    பதிலளிநீக்கு
  5. மகிழ்ச்சி கலந்து நன்றி...

    பதிலளிநீக்கு