செவ்வாய், 26 மே, 2020

அன்புள்ள மகளுக்கு, வருடம் 2025 என்று நினைக்கின்றேன்

"டாடா...!!!!!!?"

சிறிது எதிர்பார்ப்போடு அறையில் நுழைந்தாள் இளையவள். அவளை பார்க்கவே மனது சற்று விசனமாகிறது.

இங்கே அமெரிக்காவில் ஒவ்வொரு பள்ளிக்கூட பிள்ளையும் பள்ளிக்கூட நாட்கள் முழுவதும் காத்து கொண்டு இருப்பது அவர்களின் இறுதியாண்டில் நடைபெறும் " Gradutation  Day "! இந்த நாளுக்காக அவர்கள் காத்து கொண்டுஇருப்பதை போலவே இந்நாளும் பொதுவாக மிக சிறப்பாக நடக்கும்.

என் மகளின் பள்ளியில் இவ்வருடம் கிட்டட்டத்தட்ட 900 பிள்ளைகள் தங்கள் உயர்நிலை பள்ளியின் இறுதியாண்டை முடித்து கொண்டு கல்லூரி செல்ல தயாராகி இருக்கின்றார்கள்.

கொரோனாவினால் இந்தவருடம் நடக்க இருந்த விழாக்கள் ஏற்பாடுகள் கொண்டாட்டங்கள் என்று அனைத்தும் ஏறக்குறைய ரத்தான  நிலையில்  பிள்ளைகள் அனைவரும் மிகவும் சோகமாக காண்கிறார்கள்.

"டாடா"

"சொல்லு மகள் "



"இப்ப 2020 .."

"ஆமா, உன் Graduation  வருஷம், எல்லா ப்ரொக்ரம்ஸ் கான்செல் ஆயிடிச்சு .. ரொம்ப சாரி.."

"வாட்எவர்..!! நான் சொல்ல வந்தது அது இல்ல "

"வேற என்ன"?

"எங்க டீச்சர் ஒருத்தர் எங்க எல்லாரையும் ஆளுக்கொரு லெட்டர் எழுதினு வர சொன்னாங்க.. "

"என்ன லெட்டர்"?

"எனக்கு நானே எழுதிக்கணும்.. ஆனா ஒன்னு, அந்த லெட்டரை 2025 ல் தான்  போஸ்ட் பண்ணுவாங்க?"

"ரியலி, ஏன்?"

"நாங்க எல்லாரும் ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் போறோம் தானே.. அடுத்த நாலு வருசத்துல எங்க கிட்ட இருந்து நாங்க என்ன எதிர் பாக்குறோம்னு  நாங்களே எழுதணும். எங்க பிளான், அஞ்சி வருசத்துல அதை சாதிச்சமான்னு  அந்த மாதிரி"

" ஓ நல்ல காரியம் மகள், எங்க காலத்துல இந்த மாதிரி எல்லாம் இல்லை"

"நாளைக்கு காலையில் ஒரு கவரில் ஸ்டாம்ப் ஒட்டி வாங்கிக்குன்னு வாங்க.."

"மக, 2025ல்  ஸ்டாம்ப் எவ்வளவு ஆகும்னு...?

"ஐயோ.. Forever  ஸ்டம்ப்ஸ் ன்னு ஒன்னு இருக்கு. அதை ஓட்டினா எதனை வருஷம் கழிச்சு கூட அனுப்பலாம்"

"ஓ.. ஓகே.. அந்த லெட்டரில் என்ன எழுத போற? "

"சீக்ரெட், யாருக்கும் சொல்ல மாட்டேன், இன்னொரு விஷயம்?"

"சொல்லு"

' நீங்களும் அம்மாவும் கூட எனக்கு எழுதி தரலாம்... லெட்டர் எழுதி ஒரு கவரில் போட்டு அதை ஒட்டி இந்த கவரில் கொடுங்க. அது கூட அஞ்சு வருஷம் கழிச்சி இதே கவரில் வரும்."

"ஓ நைஸ்"

"ரெண்டு பக்கம் போதும்.. அம்மாகிட்டையும் இரண்டு பக்கம் போதும்னு  சொல்லுங்க "

"ஓகே"

" வாட் அபௌட் கிராண்ட் மா.. பாட்டி எழுதவங்களா?"

"எழுதுவாங்க மக.. சொல்லட்டுமா? "

"எழுத சொல்லுங்க.. 2025 ல் இந்த லெட்டர் வரும் போது பாட்டிக்கு 98 வயசாகி  இருக்கும். ப்ளீஸ் எழுத சொல்லுங்க "

"ஓகே மகள்.. நாங்க எல்லாம் எழுதுறோம்.. எப்ப வேணும்?

"நாளைக்கு காலையில் டீச்சரிடம் தரணும்... சில ஸ்டுடென்ட்ஸ் இதுல  டாலர் நோட் கூட வைப்பார்களாம்.. பீல் பிரீ டு கீப் மணி.."

"ஓகே, யோசிச்சி செய்யறேன்."

"நல்லா எழுதுங்க.,.அஞ்சு வருஷம் கழிச்சி படிக்கும் போதே அவ்வளவு நல்லா இருக்கணும்"

"ஓகே"

எழுத ஆரம்பித்தேன்...

" அன்புள்ள மகளுக்கு...

வருடம் 2025 என்று நினைக்கின்றேன். இந்த கடிதத்தை நீ பிரிக்கையில் உன் அருகில் உன் அம்மா பாட்டி அக்கா மற்றும் நானும் இருப்பேன் என்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன்...


இன்னும் நிறைய எழுதினேன். 

4 கருத்துகள்:

  1. ஞாபகம் வந்தது :-

    நண்பர் கில்லர்ஜி அவர்கள், தனது பெயர்த்திக்கு 07.11.2039 அன்று ஒரு பகிர்வு எழுதி இருப்பதாக, தகவல் ஒன்று அவர் தளத்தில் ஓடுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி நானும் பார்த்தேன். அவரும் அதைப்பற்றி சொன்னார்

      கீதா

      நீக்கு
  2. நல்ல விஷயம். உங்கள் செல்ல மகள் 2025லும் உங்கள் பெருமைப்பட வைப்பார்!

    துளசிதரன், கீதா

    விசு, என்னெல்லாம் அங்க யோசிக்கறாங்க! இதில் நிறைய விஷயம் அடங்கியிருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நீங்க,அம்மா, பாட்டி எல்லோரும் எழுதிக் கொடுத்திருக்கிறீர்களா .
    awesome.

    பதிலளிநீக்கு