வெள்ளி, 1 மே, 2020

இன்னாது!!! தாமஸ் வாத்தியார் இந்துவா!!!?

நேற்று "சண்முகம் சார் கிறிஸ்டியனா" என்று ஒரு பெரு பதிவை வெளியிட்டு இருந்தேன். அதை படித்த நல்லவரோ நல்லவர் டி என் முரளிதரன்

 "அடுத்த வாரம் போனீங்களா? சுண்டல் கிடைத்ததா?" என்ற ஒரு கேள்வியை  பின்னூட்டத்தில் விட்டு சென்றார்கள். ரொம்ப நல்லவராயிற்றே. பதில் சொல்லலாம் என்று அங்கு செல்ல, பதிலுக்கு பதிலாக இன்னொரு பதிவையே போட்டு விடலாம் என்று நினைத்ததின் பலன் இந்த பதிவு.

அடுத்த வாரம்...அந்த நாளும் வர, காலை எழுந்தவுடனே, ஹாக்கி கேப்டன் அணி தலைவன் முருகா ...

"விசு, போன வாரம் மழையாலே கான்செல்  ஆன போட்டியை இன்னைக்கு சாயங்காலம் ஆடணும். நேரத்துக்கு வந்துடு"

அவன் மழை என்று சொன்னது தான்.. இந்த மாதிரி மழை நாட்களில் அந்த பச்சை மிளகாய் போட்ட சுண்டல் தான் என்ன ஒரு சுவை என்று நினைத்து கொண்டே..

"முருகா...நான் சாயங்காலம் கொஞ்சம் பிசி"

"ஐயோ.. ஆள் பத்தாது விசு.. வந்துடு.."


"கோயில்பட்டி ஸ்கூல் மேல தான முருகா.. அவங்கள பதினொண்ணுக்கு பதிலா பாதி பேரை வைச்ச ஜெயிக்கலாம்.. சப்ஸ்டியூட் வைச்சி ஆடிக்கோ . நான் ரொம்ப பிசி"

"அப்படி என்ன பிசி?!!"

"அப்பர், சுந்தரர் சம்பந்தர் மாணிக்க வாசகர்.. இந்த முருகனுக்கு நான் எப்படி பதில் சொல்வேன்...!"

"டே.. விசு.. நீ கிறிஸ்டியன் தானே.. இது என்ன மந்திரம் எல்லாம் ஓதுற?"

"அப்படிதான்.. அடுத்த மேட்சில் பாப்போம், ஆல் தி பெஸ்ட்"

அவன் கிளம்ப.. பள்ளி சென்றேன்.. மனது முழுக்க அந்த பதமான சுண்டலும்  முறுக்கும் தான். பள்ளி முடிய.. ஹாஸ்டல் செல்வதற்கு பதிலாக அதன் வழியில் இருக்கும் சண்முகம் வாத்தியார் வீட்டுக்கு செல்லும் வழியில்..எதிரில் ஹார்மோனிய பெட்டியோட  வந்த ராபர்ட்  கென்னடி (சத்தியமா அவன் பேர் அதுதான்)

"விசு , எங்க போற!!?"

"முக்கியமா ஒரு வேலை.."

"டே, தாமஸ் வாத்தியாரோட ரெட்டை பசங்களுக்கு பிறந்தநாளாம் , வரியா பாடலாம்"

"வரலாம், இருந்தாலும் நான் சண்முகம் வாத்தியார் வீட்டுக்கு கமிட் ஆகிட்டேன், சாரி "

"அட பாவத்த, ஆட்டுக்கறி பிரியாணியும் கோழி கறி கொழம்பும் அங்கே  கொதிக்குது. நீ கொடுத்து வைக்கல, சரி பார்க்கலாம்"

"இன்னைக்கு வியாழன் தானே..?"

"புதன் விசு"

"அட சே.. சண்முகம் வாத்தியார் வீட்டு பிளான் வியாழன், நான் உன்னோடவே வரேன்."

தாமஸ் வாத்தியார் வீட்டில்...

கென்னடி பெட்டியை தட்ட...நானோ மனதில் இருந்த குற்ற உணர்ச்சியில்..

"அப்பர் சுந்தரர் சம்பந்தர் அருள்மிகுவாகிய மாணிக்க வாசகர் " என்ற ஆரம்பிக்க, சுற்றி இருந்த அனைவரும்..

"இன்னாது? தாமஸ் வாத்தியார் இந்துவா கன்வெர்ட் ஆகிட்டாரா"

 என்று முழிக்க..

தாமஸ் வாத்தியாரோ

"நம்ம பாட்டை பாடு விசு "

என்று அதட்ட..

நம்ம பாட்டு.. அவருக்கு பிடித்த நம்ம பாட்டு.. சந்திரபாபுவின் பாட்டுதான்..

"கென்னடி.. நாலாவது கட்டையில் இருந்து ஆரம்பி"

என்று சொல்ல அவனும் ஆரம்பிக்க..

"பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே.."

என்று ஆரம்பித்த பாடல்..

"நான் ஒரு முட்டாளுங்க.. குங்கும பூவே.. சிரிப்பு வருது.. புத்தியுள்ள மனிதரெல்லாம்"

என்று பிரியாணி மற்றும் கோழி கறி குழம்போடு முடிய...

அடுத்த நாள், சண்முகம் வாத்தியார்...

"நேத்து நீ வருவேன்னு எதிர் பார்த்தேன், பரவாயில்லை விடு, இந்தா உனக்கு பிடிக்கும்ன்னு சுண்டல் எடுத்துன்னு வந்தேன்"

என்று தர,

"தேங்க் யு சார்"

என்று சொல்லி வாங்கி அதை சாப்பிட திறக்கையில்..

நேற்று சாப்பிட்ட பிரியாணி கோழி கறி வாசம் இன்னும் என்னையே சுற்றி வர.. அந்த சுண்டல் போன வாரம் போல சுவையாக மணமாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

பின் குறிப்பு:

நண்பர் டி என் முரளிதரன் அவர்களே... இதை படித்தவுடன் உடனே அடுத்த வாரமாவது போனீயா என்று கேட்காதீர்கள். நம்ம ராசி பிரகாரம் பள்ளிக்கூடம் மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டதால்.. அடுத்த வாரம் வேறொரு பள்ளி .. வேறொரு ஊர்... வேறொரு நண்பன்.. என் அதிஷ்டம்.. புதிய ஊரில்  ஊரில் எனக்கு கிடைத்த நண்பனை பெயர் அமீர். அப்பாவின் தொழில் "பிரியாணி கேட்டரிங் "!

அந்த பள்ளியிலும் வழிபாட்டில்  பாடிக்கொண்டு இருந்த என்னை பார்த்து  அமீர்..."

"நல்லா பாடுரீயே விசு.. கவாலி கூட பாடுவியா ?"

"கவாலியா, அப்படினா "

சாயங்காலம் வீட்டுக்கு வா என்று அழைத்தவன் வாழ்க்கையில் முதல் முதலாக காவாலி பாடலை அறிமுக படுத்தினான்.. என்ன ஒரு அருமையான பாட்டு..

ஷோலே படத்தில் வரும் ஹே.. மெஹபூபா ஓ மெஹபூபா.. "

அதையும் கற்று கொண்டேன் , பின்னாளில் உதவும் என்று.. பல வருடங்கள் கழித்து பாம்பே நகரில் குப்பை கொட்டி கொண்டு இருக்கையில் அந்த பாடல் தான் எம்புட்டு பெரிய உதவி..! ஹ்ம்ம்..! 

4 கருத்துகள்:

  1. அடுத்த பதிவு

    பாம்பே நகரில் குப்பை

    வருமா...? வராதா...? ஹா... ஹா... நாங்க விடமாட்டோமில்லே...

    பதிலளிநீக்கு
  2. பிரியாணி பற்றியும் ஒரு பதிவு வரும் போல எனக்குத் தோணுது.

    பதிலளிநீக்கு
  3. என்னதான் மாங்கா , தேங்கா பட்டாணி சுண்டல் , காய் கறிகள் இருந்தாலும், கொஞ்சம் கவிச்சை இல்லாட்டி நமெக்கெல்லாம் சோறு இறங்காதே . ஆமா இந்த மெஹபூபா பாட்டை நீ பாடி நான் கேட்டது இல்லையே ? அந்தப்பொண்ணு மெஹபூபா யாரு ? இன்னொரு தோழியா ?

    பதிலளிநீக்கு
  4. நீங்க .மதத்த பற்றி எழுதியிருக்கிங்க...நல்லது.. ஆனா இந்தீ ..யாவுல....எந்த மதத்துக்கு மாறினாலும் ..தாவினாலும் சாதி மட்டும் மாறமாட்டுது நண்பரே...

    பதிலளிநீக்கு