வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மதுவந்தி - ஏன் இந்த அளவுகடந்த மோடி புகழ்ச்சி?!

மதுவந்தி..

மேலே செல்லுமுன் ..

விக்கிபீடியாவில் இவர் பெயரை போட்டால் " இன்னாரின் மகள் என்றும், இன்னாரோடு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்றும் மற்றும் ஒரு பள்ளி நிர்வாகத்தில் அதிகாரியாக உள்ளார் என்றும் உள்ளது. தொழில்  முறையில் நடிகை மற்றும் நாடக தயாரிப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி இவரின் படிப்பு தகுதி என்று எதுவும் இல்லை.!

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களில் நாடகம் என்று ஒரு அழைப்பிதழ் வந்தது. அதில் YG மதுவந்தி குழுவினர் என்று போட்டு இருந்தார்கள். அதை பார்த்தவுடன் YG குடும்பத்தை சார்ந்தவர் என்று அறிந்து கொண்டேன். 80களில்  தமிழ் நாடகங்களில் தரத்தை கண்ட நான் அவற்றை முற்றிலும் ஒதுக்கி வைத்து விட்டேன். அதை பற்றி வேறொரு இடத்தில பார்க்கலாம்.

அதற்கு பிறகு, சென்னையில் ஸ்வாதி என்ற இளம்பெண் வெட்டி கொலை செய்ய பட்ட போது அதை பற்றி YG மஹேந்திரன் இஸ்லாமியர்களை  பற்றி பேசியது பல எதிர் வினையாற்ற தகப்பன் கூறியதை நியாய படுத்தி ஒரு காணொளி இட்டு இருந்தார்.  பிறகு இவரை பற்றி எதுவும் தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாக (இரண்டு வருடம்? ) இவரும் இவரின் தகப்பனும் BJP கட்சியையும் அதன் தலைவர் மோடியையும்  மிகவும் ஆதரித்து பேசி வந்தார்கள்.  அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம், உரிமை! அங்கே இங்கே கேட்க நேர்ந்தது.

பின்னர் கடந்த வருடத்தில், YG மதுவந்தி குழுவினரின் நாடகம் என்று மீண்டும் ஒரு அழைப்பிதழ்   வர அதில் அமெரிக்காவில் கிட்ட தட்ட  ஐம்பது நகரில் இவர்கள் நிகழ்ச்சி நடக்கின்றது என்று எழுதி இருந்தது. நான் அறிந்த தமிழ் சங்கத்தில் தலைவராக இருக்கும்  நண்பர் ஒருவரை அழைத்து..

"இவர்கள் நாடகத்திற்கு இவ்வளவு டிமாண்டா ? ஐம்பது நகரம் அடேங்கப்பா என்று கூற"

அவரோ ...

"விசு ,அழைப்பிதழை மீண்டும் பார், இதில் எதுவும் தமிழ் சங்கம் கிடையாது, இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேண்டபட்ட சிலர் செய்யும் ஏற்பாடுகள் இது"

அது சரி, உங்கள் சங்கத்திற்கு விண்ணப்பம் வந்ததா...

"அதை ஏன் கேக்குற ... ஒரு வருடத்திற்கு முன்பு, பணமே வேண்டாம், டிக்கட்  மற்றும் தங்கும் வசதி மட்டும் செய்து கொடுத்தால் போதும் என்று சொல்லி நாங்களும் அழைத்து மட்டும் கொடுத்தால் போதும் என்று அவர்கள் சொல்ல நாங்களும் அழைக்க, சரி வேண்டாம் விடு "

என்று சொல்ல... சென்ற வருடம் அக்டோபர் போல், ஒரு செய்தி.

"இவரும் இவர் குழுவை சார்ந்த  சிலரும் சிகாகோ விமானநிலைய குடிவரவு அதிகாரிகளால்  விசாரிக்கபட்டு  சரியான அனுமதி பெறாமல் இங்கு நாடகம் போட்டு பணம் பெற  வந்ததால் விமான நிலையத்தில்  இருந்து மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப பட்டார்கள்"

இந்த செய்தி வந்த சில நாட்களில் YG மதுவந்தி அமெரிக்காவில் கைது நாடு கடத்த பட்டர் அவமானம் என்று பல செய்திகள் அங்கும் இங்கும் வந்து கொண்டு இருந்தன.

இவர் மட்டும் அல்ல... தமிழ் வளர்க்கிறேன் என்று பலரும் தமிழ் நாட்டில் இருந்து வருடாவருடம் அமெரிக்கா வந்து சரியான வசூல் செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மதுவந்தி திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சங்கங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து வரும் பிரபலங்களின் விசாவை சரி பார்த்து கொள்கின்றார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

மதுவந்தி நாடு திருப்பி அனுப்பப்பட்ட பிறகு மீண்டும் அமெரிக்கா வரவில்லை என்று நினைக்கின்றேன். என் அறிவிற்கு எட்டியபடி ஒரு முறை  நாடு திருப்பப்பட்டால் ( deportation ) மீண்டும் அமெரிக்காவில் நுழைய  பல வருடங்கள் ஆகும் என ஒரு விதி உள்ளது. அதனால் இங்கே வர மீண்டும் பல வருடங்கள் ஆகும் என நினைக்கின்றேன்.

இப்படி இருக்கையில்... இவர்களின் மோடி ஆதரவு மோடியின் ஆதாரவாளர்களையே  இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மோடி .. நல்லவர் வல்லவர் என்று மீண்டும் மீண்டும் பேசி இவர் பிஜேபி தமிழக அரசிய வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த மாதம், ஒரு நாள்,  ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடம் கை தட்ட வேண்டும் என்று மோடி சொல்ல, இவர் அதற்கு அளித்த விளக்கம், அடேங்கப்பா.. அருமை அருமை.. ஒன்பது கோள்  .. ஒன்றரை பில்லியன்  கை தட்டு.. என்று சொல்லிவிட்டு மோடி கை தட்ட சொன்னதின் அறிவியல்  பின்னணி என்று  ஒரு அற்புத காணொளி.

இந்த காணொளி வந்த சில நிமிடங்களில் இந்திய அரசாங்கம் இந்த கை தட்டு நன்றிக்காகவே இதில் அறிவியல் விடயம் எதுவுமில்லை என்று சொல்ல அடுத்த காணொளி வந்தது .

அது தான்..

மொத்த  காணொளியும் மிகவும் அபத்தமானது. ஒருவர், அதுவும் ஒரு பள்ளியின் நிர்வாகி இவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பார்கள் என்று  நான் நினைக்கவில்லை. இந்த பிதற்றல் வேண்டும் என்றே வைரலாக வேண்டும் என்று  நடத்த பட்ட நாடகம்  என்று தான் நான் நினைக்கின்றேன். சென்ற காணொளியில் "ஒன்னரை பில்லியன் மக்கள்" கை தட்டினால் என்று  சொல்லியவர்கள் ஒரே வாரத்தில் 8,000  கோடி மக்கள் , 3,000 கோடி வயதானோர், மாற்று திரானோர், 20,000  கோடி பெண்கள்...8,000  கோடி மக்களுக்கு 5,000  கோடி நேரடியாக (ஆளுக்கு 62 பைசா என்பது வேற விஷயம்) வங்கியில் செலுத்த பட்டது என்று பல பிதற்றல்கள். அவர்கள் எதிர்பார்த்த படியே வைரலாகிற்று, இவர்களின் இந்த அளவற்ற மோடி புகழ் மோடியின் காதிற்கு கண்டிப்பாக  எட்டும் என்று தான் நினைக்கின்றேன்.

எட்டி என்ன பயன்?

என் அறிவிற்கு எட்டியபடி தமிழக BJP யில் எந்த பதவியும் கிடைக்காது. அதற்கு ஒரு டசன் மக்கள் ஏற்கனவே காத்து கொண்டு இருக்கின்றார்கள்.  பின்னர் எதற்கு இப்படி ஒரு தத்து பித்து?

Let me take a long shot! (In the words of John Lenon, "You may think I am a dreamer, but I am not the only one).

மோடியின் காதிற்கு எட்டி என்ன பயன்?

ரிமெம்பர் யுனைடெட் நேஷன் பாரத  நாட்டிய புகழ் "ஐஸ்வர்யா ரஜினிகாந்த்" !  அதுபோல தான். யுனைட்டட் நேசனில் அல்ல ஏதாவது ஒரு சர்வதேச  NGO  நிறுவனத்தில் இவருக்கு கண்டிப்பாக ஒரு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. 

அதனால் இவருக்கு என்ன பயன்?

அப்படி ஒன்னும் பெரிதாக இல்லை. மீண்டும் ஐம்பது நகரில் நாடகம் என்று    ஒரு அழைப்பிதழ் வர இந்த பதவி  வழி வகுத்து  தரும்.

I sincerely hope I am proved wrong, for the sake of Tamils in USA! 

3 கருத்துகள்:

  1. பதவி ஆசையாலும் தான் நடத்தும் பள்ளிக்கு சில சலுகைகள் பெறவும் இப்படி ஒளறிக் கொண்டிருக்கிறது அது ஒன்றும் முட்டாள் அல்ல ஈப்படி முட்டாள் தனமக பேசி நாட்டு நடப்புகளை திசை திருப்ப அல்லது முக்கியமான நிகழவுகளை மூடி மறைக்க இந்த பேடி இப்படி பேசி திரிகிறது

    பதிலளிநீக்கு
  2. இவர் நடத்தும் பள்ளிக் குழந்தைகள் பாவம்...

    பதிலளிநீக்கு
  3. ஓ அதான் விஷயமா , எங்க தமிழ்ச் சங்கத்திலும் அதேதான் நடந்ததா கேள்விப்பட்டேன் .

    பதிலளிநீக்கு