வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ரமதான் நோன்பும் மறவாத பண்பும்.. (சமையல் குறிப்பு : அசைவம்)


யார் செய்த புண்ணியமோ, பிரம்மச்சாரியாய் வாழ்ந்த நாட்களில்  சில காலம் அருமை இஸ்லாமிய நண்பன் அப்சர் ரூம் மெட்டாக அமைந்தான். என்னே ஒரு மனிதன். அவனுடன் பழகிய அந்நாட்களில் வாழும் முறையை பற்றி நிறையவே கற்றுக்கொண்டேன்.

அப்படி வாழ்க்கையில் ஒரு முறை ரமதான் நோன்பு காலம் ஆரம்பிக்க... (அதை ஏன் கேக்குறீங்க.. ? அப்சர் பாயின் குணத்தை அறிய இந்த பதிவையும் தயவுகூர்ந்து படியுங்கள்..     "நாலு பேருக்கு நல்லதுன்னா .. ராமதானின் நாயகன்"!)
அந்த காலத்தில் அடியேன், அப்சர் மற்றும் தீபக் 

அந்நாட்கள் முதல் இந்நாள் வரை நோன்பு கடைபிடிக்கா விட்டாலும் சாயங்காலம் நோன்பை முறிக்கும் நேரத்தில்  நிற்பன நடப்பன பரப்பன என்று வைச்சி தாக்குவது வழக்கமாகிவிட்டது.

நேற்று நோன்பிற்கான முதல் நாளாயிற்றே. நண்பன் அப்சரை அழைத்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்ட பிறகு, அந்நாட்களையே நினைத்து கொண்டு இருக்க..

"டாடா.. அம்மா வர கொஞ்சம் லேட் ஆகுமாம்.. சாயங்காலம் என்ன டின்னர்"

என்றாள் இளையவள்.

இன்றைக்கு நோன்பை முறிக்கும் முதல் நாளாயிற்றே என்று பிரிட்ஜை திறந்து பார்க்க.. எதிரில் .. அருமையான நெஞ்செலும்பு ஆட்டுக்கறி..


"இன்னைக்கு மட்டன் சாப்ஸ் சாப்ஸ் .. "

"எவ்வளவு நேரமாகும்..?"

"ஒரு இருபது நிமிஷம் கொடு .. "

என்று சொல்லி அந்த கறியை கத்திரி மற்றும் கத்தி கொண்டு லாவகமாக வெட்ட மொத்தம் கிடைத்தது எட்டு துண்டு. இல்லத்தில் நால்வர் அல்லவா.. ஆளுக்கு ரெண்டு என்று சொல்லி விட்டு..


ஆறு பூண்டு பற்கள் (?)  பத்து பதினைந்து கிராம்பு  பத்து காய்ந்த மிளகாய்   எடுத்து அதை கொஞ்சம் நற நற வென்று இடித்து (மிகவும்  முக்கியம்.. ரொம்பவும் மைய அரைத்து  விட கூடாது)  மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி மிளகாய் தூள் அளவான உப்பு கொஞ்சம்   மிளகாய் தட்டி  அதை அந்த கறியில் போட்டு சிறிது நீரும் ஊற்றி ஊறவைத்து ..

அடுப்பில்  அனைத்து துண்டங்களை அடித்தட்டில் இருப்பதற்கான அளவில் ஒரு வாணலி வைத்து அது சூடாகும் வரை  சும்மா நேரத்தை வீணடிக்காமல்    மற்றவரை கழுவி  வைத்தேன். என்னதான் சமையல் சூப்பரா இருந்தாலும் சமையலறை அழுக்கா இருந்தால், அம்புட்டும் வீணே.!

சூடான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஸ்பிரே (கறியில் கொழுப்பு   அதிகம் இருப்பதால் எண்ணெய் தேவையில்லை, அதனால் கொஞ்சம் மட்டும்.. அந்த காலத்தில் தோசை சுடுகையில் ஒரு எண்ணெய் தோய்த்த துணி வைத்து துடைப்பார்களே அம்மாதிரி)  அடித்து .. நன்றாக சூடாக..

அப்படியே அந்த கரி கலவையை  அதில் கொட்டி..மூடி போட்டு ஐந்து நிமிடத்தில் ஒரு முறை அனைத்தையும் திருப்பி போட்டு இன்னொரு ஐந்து நிமிடம் விட்டு..

அந்த நேரத்தில் மஞ்சள் மிளகாய் உப்பு பெட்டிகளை எல்லாம் மூடி அதனதன் இடத்தில வைத்து திரும்புகையில்...

"அல்மோஸ்ட் டுவெண்ட்டி மினிட்ஸ் " என்று இளையவள் அலற...

"இட்ஸ் ரெடி.. "

"அம்மா வர லேட் ஆகும்.. நம்பள சாப்பிட சொன்னாங்க.. "

என்று மூத்தவள் சொல்ல..

கொஞ்சம் சாலட்.. கொஞ்சம் சோறு ..ஒரு சப்பாத்தி வித் மட்டன் சாப்ஸ் 



வைத்து அருமையான நோன்பு முறிப்பு. "ரமதான் கரீம்" நண்பர்களே..!

பின்குறிப்பு:

"மட்டன் சாப்ஸ்  ரொம்ப நல்லா இருந்ததுங்க. பசியில் வந்தேன். தேங்க்ஸ்."

"வெல்கம் "

"கிச்சனும் சூப்பரா க்ளீனா இருந்தது.!!ஆனா?"

"ஆனா, ஆனா.. என்ன ஆச்சி..!!!?"

"அந்த மசாலா டப்பாங்களை தான் சரியாய் திருப்பி வைக்கல.."

"எல்லாத்தையும் சரியா தானே வைச்சேன்.."

"திருப்பவும் போய் அந்த மஞ்சள் மிளகு டப்பாவை ஒரு முறை பாருங்க"

பார்த்தேன்.. இதில் என்ன தவறு செய்தேன்? அறிந்தோர் கூறவும்!

3 கருத்துகள்:

  1. அருமையாக செய்து உள்ளீர்கள்...

    மூடி மாறி விட்டதோ...?

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போல் அருமையான பதிவு.

    சமையலிலும் வெளுத்து வாங்குகிறீர்கள் விசு.

    துளசிதரன்

    விசு ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் எல்லாம் செய்துவிட்டு பாருங்க என்ன செய்தாலும்....கடைசில...ஹிஹிஹி

    அங்க நல்லா பாருங்க மிளகு டப்பா வாய் ஏன் இப்படிப் பிளந்துட்டு இருக்கு??!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தம்பி , பல சமயங்களில் உன் பதிவுகளை என் மனைவியிடம் படித்துக்காண்பித்து அவள் ரசிப்பதை நான் ரசிப்பதுண்டு .ஆனால் சிலவற்றை மறைத்து விடுவேன் .அதில் இதுவும் ஒன்று .ஆனால் எச்சில் ஊறியது என்னவோ உண்மைதான் .

    பதிலளிநீக்கு