வியாழன், 30 ஏப்ரல், 2020

அதோ அந்த பறவை போல் காற்று வாங்க போனேன்.!

கொரோனா தாக்கத்தினால் "ஒர்க் ப்ரம் ஹோம் " என்று ஆரம்பித்து தற்போது எட்டாவது வாரம் ஓடி கொண்டு இருக்கின்றது.

சென்ற வாரத்தில் இந்த ஊரடங்கு சற்று தளர்த்தப்பட மாலை நடையை மீண்டும் தொடர வாய்ப்பு கிடைத்தது.  அடியேனின் இல்லத்திற்கு மிக அருகில் ஒரு பெரிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மலை மடு காடு என்று அனைத்தும் உண்டு. பல வகை பறவைகளையும் காணலாம். சென்ற மாதத்தில் மக்களின் வரவு அதிகம் இல்லாதால் பறவைகள் அதிகமாக வெளியே சுற்றித்திரிவதை காண முடிந்தது.

சென்ற வாரம் ஒரு நாள் இங்கே நடந்து கொண்டு இருக்கையில் ஒரு அருமையான காட்சி பார்க்க நேர்ந்தது. அதை படம் பிடிக்கும் வாய்ப்பும் அமைய இதோ அந்த காணொளி.  கடைசி வரை பாருங்கள்.  என்ன அருமையான முடிவு.



கடற்கரை அருகே தானே என் இல்லம் அமைந்துள்ளது. கொரோன ஊரடங்கில் கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது என்ற விதி அமலுக்கு வர பசிபிக் பெருங்கடலை பார்த்து ஒரு மாதமாகி விட்டது.

சரி, விதிகள் சற்று தளர்ந்துள்ளதே என்று நேற்று கடற்கரை பக்கம் போகலாம் என்று வண்டியை விட..

காற்று வாங்க போனேன் வெறும் கையேடு வந்தேன் என்ற கதை தான். இதோ பாருங்கள்.




என்று தணியும் இந்த கொரோனாவின் தாக்கம்! 

3 கருத்துகள்:

  1. ஹையோ choooo ஸ்வீட் .நான் Canada goose   இப்படி குட்டிப்பாப்பாக்களோட பார்த்ததில்லை இங்கே மல்லார்ட் டக்ஸ் மூர் ஹென்ஸ் பிரிட்டிஷ் ஸ்வான்ஸ் தான் வதவதன்னு  குழந்தைங்களோட இருக்கும் .நாளைக்கே canal பக்கம் போகணும் இப்போ அவங்களும் பிறந்திருப்பாங்க .stay safe anna.

    பதிலளிநீக்கு
  2. ஏஞ்சல் ...

    நான் வருஷ கணக்கில் இந்த பறவைகளை பார்த்து இருந்தாலும் இப்படி பொறுமையோடு நின்று பார்த்தது இல்லை. எப்பவுமே காலில் சூடு தண்ணி ஊற்றி கொண்டு தான்.

    இனிமேல் இவைகளையும் கண்டு ரசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு