புதன், 21 ஆகஸ்ட், 2019

"Poppins" இல்ல "Pop Sins"

கென்னடியிடம் பாப்பின்ஸ் கடன்  வாங்கி அதை காட்டி சண்முகம் ஸ்டோர்ஸில் ஆட்டையை போட்டு இன்னொரு பாப்பின்ஸ் எடுத்து வந்தது தெரிந்த கதை.. (படிக்காதவர்கள், மஞ்சுளா பாப்பின்ஸ் ! இங்கே சொடுக்கவும் ).

சரி, அந்த பாப்பின்ஸின் தொடர்கதையை பார்ப்போம்.

Total :48
Present :46

ஏற்கனவே கூறியது போல அடியேன் லீடர் தானே, கரும்பலகையில் இதை எழுதும் போதே, கடன்காரன் லிங்கன் அருகில் வந்து,

"என்ன விசு நேத்து 48க்கு 48 ன்னு எழுதுனே, இன்னைக்கு 2  பேர் லீவா"

"ம், 2 பேர் தான், லீவ் இல்ல, சிக், உடம்பு சரி இல்ல "

"சரி, நேத்து மஞ்சுளா வந்தா தானே, அவளுக்கு  எதிரில் ஸ்டைலா முழு பாப்பின்ஸை பிரிச்சி இருப்பியே.. என் பங்கை தா!"

"டே , நேத்து  மஞ்சுளா வந்தா, ஆனா நான் பாப்பின்ஸை பிரிக்குறதுக்குள்ள  கென்னடி முந்திட்டான்"

"அவன் தான் ஒரு வாரமா பாக்கெட்டில் வைச்சினு சுத்தின்னு இருக்கானே"

"சரி, அவன் கொடுத்தவுடன் நீ கொடுக்க வேண்டியது தானே?"

"அப்படி தான் பிளான் பண்ணேன், ஆனா அதுக்குள்ள"!?

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

முள்ளை முள்ளால தான் !

Attention all 8th Std Students, please assemble at the football grounds at 4 PM this evening.

தலைமை ஆசிரியரின் அறிவுப்பு மொத்த  பள்ளியிலும் ஒலித்தது.

புது பள்ளி கூடம்...மனதிலோ..

அடே டே.. ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு ஸ்பீக்கர்! என்ன ஒரு அறிவிப்பு என்றாலும் வகுப்பறையிலேயே நமக்கு சொல்லிடுறாங்களே என்று
ஆச்சரிய படும் போது..

"விச்சு...புதுசா 8th  ஸ்டாண்டர்ட் வந்தது நீ தானே..?!"?

"புதுசா "?

"ம்"

8th  ஸ்டாண்டர்ட்"?

"ம்"

"விச்சு"

 "ம்"

"நான் தான்.. பட் தி நேம் இஸ் விசு, நாட் விச்சு "

"வாட்ஸ் தி டிஃபரென்ஸ்.? பை தி வே , ஐ அம் கபிலன்"

அனைத்துமே அறியா முகங்கள், மீண்டும் வழக்கம் போல் தலையை புத்தகத்தில் நுழைத்து நான் உண்டு என் வேலை உண்டு என்று  இருக்கையில்..

'விச்சு, கிளம்பு.. "

"விசு, மை  நேம் இஸ் விசு"

"வாட்டவர், கிளம்பு, 4  மணிக்கு  கிரௌண்டில் இருக்கணும். பி டி மாஸ்டர் பயங்க ஸ்ட்ரிக்ட்.?

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

புவனா ஒரு ஆச்சர்ய குறி

"உன் பேரு தான் விசுவா?"

மேலே செல்லும் முன்,

வருடத்திற்கு ஒரு பள்ளி என்ற முறை ஆறாம்ப்பை (6th Std) முடித்து  ஏழாம்ப்பிலும் (7th Std) தொடர்ந்தது. புது விடுதி, புது பள்ளி, அறிந்த முகங்கள்  அரிதானதால், நான் உண்டு என் வேலை உண்டு என்று அமர்ந்து இருந்து என்னிடம்  ..

"உன் பேரு தான் விசுவா? "             

என்றாள் ஒரு சக மாணவி.

"எஸ், ஐ அம்விசு"

"ஐ.. இங்கிலீஷ் , பேசுவீயா, நான்  கூட இங்கிலீஷ் பேச கத்துக்க டியூஷன் போறேன், மை நேம் இஸ் புவனேஸ்வரி"

"நைஸ் நேம்"

"தேங்க்ஸ்"

"யு ஆர் வெல்கம்"

"டோன்ட் மேன்ஷன் இட்னு சொல்லணும்னு தானே டுயூஷனில் சொல்லி தந்தாங்க"

"ஐ மீன் டோன்ட் மேன்ஷன் இட்"

மீண்டும் நான் உண்டு என் வேலை உண்டு என்று  தலை குனிய...அவளோ..

"நீ தான் இந்த வருஷம் ஏழாம்ப்புக்கு அசிஸ்டன்ட் மானிட்டராம்"

"அப்படினா?"

"வைஸ் கேப்டன் போல .. இந்த க்ளாஸுக்கு"

புதன், 14 ஆகஸ்ட், 2019

மஞ்சுளா பாப்பின்ஸ் !


9வது வகுப்பு, மற்றும் ஒரு நாள், 80களின் ஆரம்ப நாட்கள்!

Total: 48
Present:47

என்று நான் எழுதும் போதே (நம்ம முகராசி அந்த காலத்தில் நம்மை க்ளாஸ் மானிட்டரா போட்டுடுவாங்க) அருகில் இருந்த ராபர்ட்  கென்னடி,

இன்னாது..ராபர்ட் கென்னடியா ? இன்னா கதை வுடுற விசுன்னு உங்களில் சிலர் சொல்றது கேக்குது. அதனால, மேலே போகும் முன் ஓர் சிறிய விளக்கம்.

60  மற்றும் 70களில் கிறித்துவ  குடும்பங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு  அமெரிக்க அதிபரின் பெயர் வைப்பது வழக்கம். இன்னும் சொல்ல போனால், என் வகுப்பில் கென்னடி, லிங்கன், வாஷிங்டன், நிக்ஸன்
என்ற நான்கு அமெரிக்க அதிபர்களும் இருந்தார்கள்.

சரி கதைக்கு வருவோம்.

Total  :48
Present  :47

என்று நான் எழுதியதை பார்த்த ராபர்ட் கென்னெடி மிகவும் சோகமாக,
"இன்னைக்கும் மஞ்சுளா வரலையா?"

 என்று என்னிடம் கேட்க, நானோ ஆமா என்று சொல்ல, கென்னடியோ ...

"ஹ்ம்ம்"

 என்று ஒரு பெரு மூச்சு விட்டான்.

"என்ன ஆச்சி கென்னடி"?

"என்னத்த ஆகனும்?, இன்னும் எத்தனை நாளுக்கு தான்"

"என்னாடா ஆச்சி, இப்படி அழுவுற "

"நாலு நாளா அவள் வரல விசு, உருகிடும் போல "

"அவ வராதத்துக்கு நீ எதுக்குடா உருகுற"

"நான் இல்ல...இது"

என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து ஒரு "Poppins" உருளை எடுத்தான்.

"கென்னடி...முழு பாப்பின்ஸ், 95  காசு, எப்படிடா"