ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

முள்ளை முள்ளால தான் !

Attention all 8th Std Students, please assemble at the football grounds at 4 PM this evening.

தலைமை ஆசிரியரின் அறிவுப்பு மொத்த  பள்ளியிலும் ஒலித்தது.

புது பள்ளி கூடம்...மனதிலோ..

அடே டே.. ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு ஸ்பீக்கர்! என்ன ஒரு அறிவிப்பு என்றாலும் வகுப்பறையிலேயே நமக்கு சொல்லிடுறாங்களே என்று
ஆச்சரிய படும் போது..

"விச்சு...புதுசா 8th  ஸ்டாண்டர்ட் வந்தது நீ தானே..?!"?

"புதுசா "?

"ம்"

8th  ஸ்டாண்டர்ட்"?

"ம்"

"விச்சு"

 "ம்"

"நான் தான்.. பட் தி நேம் இஸ் விசு, நாட் விச்சு "

"வாட்ஸ் தி டிஃபரென்ஸ்.? பை தி வே , ஐ அம் கபிலன்"

அனைத்துமே அறியா முகங்கள், மீண்டும் வழக்கம் போல் தலையை புத்தகத்தில் நுழைத்து நான் உண்டு என் வேலை உண்டு என்று  இருக்கையில்..

'விச்சு, கிளம்பு.. "

"விசு, மை  நேம் இஸ் விசு"

"வாட்டவர், கிளம்பு, 4  மணிக்கு  கிரௌண்டில் இருக்கணும். பி டி மாஸ்டர் பயங்க ஸ்ட்ரிக்ட்.?



"அங்கே என்ன நடக்க போது?"

"நடக்க போது இல்ல, புடுங்க  போது.. "

"டே, அட்மிசனில் ஸ்கூல்  காம்பௌண்டில் யாராவது கெட்ட வார்த்தை பேசினா பைன் போடுவாங்கன்னு சொன்னாங்க.. ஜாக்கிரதை!"

"நான் எங்க கெட்ட வார்த்தை சொன்னேன்.. நடக்க போறத தான் சொன்னேன், அங்கே வந்து பாரு தெரியும்"

குழப்பத்தோடு நடந்தேன். கிரௌண்டில்.


"அட்டென்ஷன்..அடுத்த வாரம் இன்டெர் ஸ்கூல் புட் பால்  பால் மேட்ச் நடக்க போது. ஆறு ஸ்கூல் வராங்க. நம்ம கிரௌண்ட் சுத்தமா பச்சை பசேல்ல்னு இருக்கணும். இந்த வாரமுழுக்க தினமும் 4 மணிக்கு உங்கள் க்ளாஸ் கிரௌண்ட்க்கு வந்து கிரௌண்டில் இருக்க சின்ன சின்ன  முள் எல்லாத்தையும் புடுங்கனும்"

கபிலன், " இந்த புடுங்குறத தான் நான் அப்பவே சொன்னேன். இது வருசா வருஷம் நடக்குறது"

"கிரௌண்ட் நல்லா இருக்குதே கபில், இதுல முள்ளை   எங்கே தேடுறது?

"கபிலன், கபில் இல்ல"

"வாட் இஸ் தி டிஃபரென்ஸ்", புதுசா இந்தியா கிரிக்கெட் டீமுக்கு ஒரு ஆல் ரவுண்டர் வந்து இருக்கான்.. நல்ல பௌலர் அதை விட சூப்பர் பேட்ஸ்மேன், பேரு  கபில். உன் பேரை கூட கபிலனில் இருந்து கபில்ன்னு  மாத்திக்கோ.  !"

"சரி, வா சேர்ந்து புடுங்களாம்"

"எங்கேடா.. முள்ளையே காணோமே.."

"இதோ!"

 என்று கண்ணில்  விளக்கெண்ணெய் ஊத்தி ஒரு சிறிய முள் செடியை புடிங்கினான்.

"எவ்வளவு நேரம் புடிங்கனும்"!?

ஒரு கை புடி , புடுங்கிட்டு அந்த பி டி மாஸ்டார்ட்ட காட்டிட்டு போயிடலாம்"

"கை புடி புடுங்காட்டி.."

"அஞ்சு மணிக்கு இந்த கிரௌண்டை சுத்தி மூணு ரவுண்டு ஓடணும்.."

பேசி கொண்டே இருக்கையில், ஒவ்வொரு மாணவனாக கை பிடி முள்ளை காட்டி விட்டு இல்லம் செல்ல.. அடியேன் வெறுங்கையோடு நிற்க..

"எங்க முள் ?"

"எதுவும் கிடைக்கல சார்"

"எல்லாருக்கும் கிடைச்சி இருக்கு, உனக்கு மட்டும் எப்படி கிடைக்கல?"

"நான் புது ஸ்டுடென்ட்!"

"எக்ஸ்குயூஸஸ் , எக்ஸ்குயூஸஸ், போ, போய் மூணு ரவுண்டு அடிச்சிட்டு போர்டிங்க்கு போ..?

மூன்று ரவுண்டு ஓடி விட்டு போர்டிங், அங்கே ஸ்டடி ரூமிற்க்கு தாமதமாக போக,
அதே  பி டி மாஸ்டர் தானே போர்டிங் வார்டன்..

"ஏன்டா ஸ்டடி ரூமிற்க்கு லேட்டா வந்த ?"

"நீங்க தானே மூணு ரவுண்டு ஓட சொன்னீங்க... அதனால தான்.."

"ஓ , அப்ப  நான் பி டி மாஸ்டர். இப்ப வார்டன், அங்கே ஓடுனது அங்கே பண்ண தப்புக்கு, இப்ப லேட்டா வந்ததுக்கு அரை மணி நேரம் முட்டி போடு.. "

ஏற்கனவே ஓடி சோர்ந்த கால்கள் இப்போது முட்டி போட்டு கொண்டு.. என்னடா இது வாழ்க்கை என்று நொந்து  கொள்கையில்... மனதோ ..!


அடுத்த நாள்.. அதே நான்கு மணி அளவில்... அனைவரும் புபுல்ள் புடுங்கி கொண்டு இருக்கையில், முதலாதவனாக கை பிடி முள்ளை பி டி மாஸ்டரிடம்  கொடுத்து விட..

"வெரி குட், ஒரு நாள் மூணு ரவுண்டு ஓட விட்டா, கண்ணுல புல்லே  தெரியாது முள் மட்டும் தான் தெரியும் "

என்று ஆர்ப்பரிக்க...போர்டிங்கை நேரத்தில் சேர்ந்தேன்.

மற்ற மூன்று நாளும் இதே போல் முதல் மாணவனாக முள்ளை பி டி மாஸ்டரிடம் கொடுத்து விட்டு செல்ல, வெள்ளி மாலை கபில்..

"எப்படி விச்சு.. இவ்வளவு சீக்கிரமா புடுங்குற... ?!"

"அவரு தான் சொன்னாரே.. ஒரு முறை கிரௌண்டை மூணு ரவுண்டு சுத்தி ஓடி  வந்தா , கண்ணுல புல்லே  தெரியாது.. முள்ளு தான் தெரியும்னு, அது தான்.."

"பி சீரியஸ், சொல்லி கொடு..."

"அது தாண்டா உண்மை"

"எது?"

"திங்கள் கிழமை  மூணு ரவுண்டு ஓட  சொன்னாரு இல்ல,"

"ஆமா?"

"ஓடும் போது பார்த்தேன். அந்த கிரௌண்ட் வாட்ச்மென் வீட்டுக்கு பின்னால கொத்து கொத்தா முள் "

"அது எனக்கும் தெரியும், ஆனா நாம புடுங்க  வேண்டியது கிரௌண்டில் இருக்க முள்"

"வெளிய போய் புடுங்குனது தெரிஞ்சாதானே..?

"புரியல!!"

"டேய்.. காலையில் எழுந்தவுடன் யாருக்கும் தெரியாம அங்கே போய் ஒரே நிமிசத்துல ஒரு கை புடி புடிங்கிக்கோ, அதை பையில் போட்டுட்டு சாயங்காலம் கொடுத்துடு"

"காஞ்சிடுமே , கண்டு பிடிச்சிடுவாரே.."

"கர்சீப் எதுக்கு இருக்கு, அதை தண்ணி போட்டு நனைச்சி அதுல சுத்திக்க"

"அட பாவி, அது சரி, காலையில் அஞ்சு மணிக்கு நீ ஏன் வெளிய போறேன்னு  வார்டன் கேட்டாருன்னா.?"

"கேட்டாரே...!"

"எப்படி தப்பிச்ச?"

"சார், திங்கள் கிழமை என்னை மூணு ரவுண்டு ஓட விட்டிங்க இல்ல, அப்ப.."

"அட பாவி , உண்மையா சொல்லிட்டியா?"

"ஓட விட்டிங்க இல்ல அப்பத்தான் யோசிச்சேன் ... இம்புட்டு நல்ல கிரௌண்ட் , இம்புட்டு நல்ல பி டி மாஸ்டர்.. எப்படியாவது நல்லா முயற்சி பண்ணி அடுத்த வருஷம் எப்படியும் புட் பால் டீமில் சேரணும்னு காலையில் சீக்கிரம் எழுந்து கிரௌண்டை சுத்தி ஓட போறேன் சார்"

"தட்ஸ் மை பாய்... அப்படி தான் இருக்கணும். வாழ்க்கையில் தவறு நடக்கும், தண்டனை கிடைக்கும் . அந்த தண்டனை எல்லாத்தையும் மனசுல போட்டு வருத்த படாம அதையே வாய்ப்பா  மாத்திக்கணும், நைஸ்!, மற்ற மாணவர்களும் உன்னை மாதிரி எப்ப திருந்துவாங்களோ?"


4 கருத்துகள்:

  1. மாணவப்பருவம் முதல் மணமான பருவம் வரை எப்படி நல்ல பையனாக நடந்துகொள்வது என்பதை உன்னிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் தம்பி விசு.

    பதிலளிநீக்கு

  2. மைக்கு உள்ள படிச்சு இருக்கீங்களா அப்ப நீங்க பெரிய ஆளுதான் எங்க ஸ்கூலில் ஆண்டுவிழா அப்போதுதான் மைக் பார்க்க முடியும்

    பதிலளிநீக்கு
  3. நேசமணி (ஜோக்ஸ்) நடுவில் வந்து போனார்...! ஹா... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  4. உங்கட கதை வாசித்து சிரிப்பை அடக்க முடியல...

    பதிலளிநீக்கு