வியாழன், 27 டிசம்பர், 2018

இன்னைக்கு என்ன விசேஷம் சொல்லுங்க?

"என்னங்க"!

"சொல்லு"

"இன்னைக்கு என்ன விசேஷம்"" ? சொல்லுங்க..

"ஹாப்பி பர்த்டே டு யு! காலையிலே சொல்லணும்னு நினைச்சேன், நீ கொஞ்சம் பிசியா இருந்த சாரி.."

"ஐயோ..!

"வெரி சாரி..திருமண நாள் இல்ல.. 20 வருஷம் போனதே தெரியல!வாழ்த்துக்கள் "!

"உங்க அறிவுல ., எதுக்கு இப்படி பயப்புடறீங்க. இந்த வருஷம் தான் சமத்தா பிறந்த நாளையும் கண்ணால நாளையும்  மறக்காம சொன்னீங்களே.. இன்னைக்கு கிறிஸ்துமஸ்".

"ஆமா இல்ல.. எதோ நினைப்பில் இருந்தேன். மெரி கிறிஸ்மஸ்."

"மெரி கிறிஸ்மஸ் டு  யு டூ..  சீக்கிரம் கிளம்புங்க.. லஞ்சுக்கு பிரென்ட் வீட்டுக்கு போறோம்"

"ஓ.. ஆமா இல்ல... "



"எனக்கு ஒரு உதவி பண்ணுங்க"

"சொல்லு"!

"அங்கே வந்து ..சாப்பாட்டை தவிர வேற எதுக்கும் வாயை திறக்காதிங்க"

"அதுக்கு கூட எதுக்கு திறக்கணும்.. பிரியாணியை மிக்சியில் போட்டு கூழு  மாதிரி அரைச்சி  ஒரு ஸ்ட்ரா வைச்சி கொடு, அப்படியே உரிஞ்சிக்கிறேன்"

"இந்த கிண்டல் தான் .. இத இங்கேயே மூட்டை கட்டி வச்சிட்டு அங்கே வந்து அமைதியா இருங்க. ஏதாவது எடக்கு முடக்க சொல்லி, அங்க யாராவது தப்பா நினைச்சிக்குவாங்க"!

வண்டியை கிளப்பி நண்பரின் இல்லத்திற்கு சென்றோம் ...உள்ளே சென்றவுடன் முதலாக அன்னாசி பழசாறு ஒன்றை பார்த்து , குடித்தேன் சும்மா சொல்ல கூடாது. ருசியாக இருந்தது.

பின்னர் மதிய உணவிற்கு வெட்டு குத்து எல்லாம் முடிந்த பின்பு கொஞ்சம் வெள்ளை சோறும் ரசமும் பரிமாற .. ரசம் ஒரு வித்தியாசமாக இருந்தது. என்ன வென்று கேட்டேன்... அன்னாசி பழத்தில் செய்தது என்றார்கள்.

பின்னர் விருந்து முடிந்து இனிப்பு ஒன்றை மேசையில் பார்த்தேன். புதிதான ஒன்று (காரம் சேர்ந்த இனிப்பு) .. அன்னாசி பழத்தில் செய்து இருந்தார்கள் . வித்தியாசமாக இருந்தாலும் நன்றாக இருந்தது.

வீட்டிற்கு வந்து அம்மணியிடம்.. பழசாறு - ரசம் - இனிப்பு மூன்றுமே அன்னாசி பழத்தில் செய்து இருந்தார்கள், அருமை அருமை என கூற, அம்மணியோ...

"நாசமா போச்சி"..

"ஏன்"!?

"மூணுமே ஒண்ணுதான்"

"இல்லையே,.. அந்த இனிப்பு கூட கொஞ்சம் கெட்டியா இருந்ததே"

"கெட்டியா , இனிப்பு"?

"ஆமாம்"

"அது ரசம் மண்டி"


பின்குறிப்பு :

"இப்படி ஒரே ஐட்டத்தை மூணு ஐட்டம்ன்னு நினைச்சு வச்சி இருக்கீங்களே, சாப்புட்றதுக்கு முன்னாடி யாருட்டையாவது விசாரிக்க கூடாதா"?

"நீ தானே, சாப்பாட்டை தவிர எதுக்கும் வாயை திறக்க கூடாதுன்னு சொன்ன"!

"அதுவும் சரிதான்.. அங்கே போய்.. இது பழசாரா - ரசம்மா - இனிப்பானு கேட்டு வச்சி இருந்திங்க.. என் மானம் போய் இருக்கும்"!

"ஏன்.."?

"இதுக்கு கூட வித்தியாசம் தெரியலையே.. இந்த ஆளோட வூட்டுக்காரிக்கு சமைக்க தெரியாது போல இருக்குன்னு பேசி இருப்பாங்க"!

2 கருத்துகள்: