செவ்வாய், 13 நவம்பர், 2018

பதிவர் வருணுக்காக இந்த பதிவு.

வருண்,

ஒரு மின்னஞ்சலாக வரவேண்டிய இந்த எழுத்துக்கள் பதிவாக வர காரணமே, தங்களின் தொடர்பு விவரங்கள் அடியேனிடம் இல்லாதது தான். 
தாம் ஏற்கனவே அறிந்தது போல் அடியேன் ஒரு NFL சாவுக்கடினவிசிறி. ( Diehard Fan).

கடந்த சில வருடங்களாக ராசாதிக்கள்இருவரின் படிப்பை பாதிக்கும் என்று தொலைகாட்சியில்  பார்ப்பதை கூட இயன்ற வரை தவிர்த்தேன்.

ஒன்றுமில்லை.



நான் பார்க்க அமர்ந்தால்இருவரும் வந்து கூடவே அமர்ந்து  விடுவார்கள். அவர்களுக்கும் இது பிடித்தமான ஆட்டம்.

இந்த வருடம் மூத்தவள் கல்லூரியில் இருப்பதால், இளையவள் நான் படும் அவஸ்தையை கண்டு.. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், நான் அதில் கவனம் செலுத்தமாட்டேன் என்று உறுதி கூறியதால், முழு சீசனையும் ரசித்து வருகிறேன்.

ஆஹா.. லாஸ் அஞ்சேல் ஆட்களுக்கு தான் என்ன ஒரு சீசன். RAMS and CHARGERS ... எங்கள் நகரத்திற்கு  ஒரு அணிக்கு  பதில் இரண்டு அணி.  அதுவும் இந்த வருடம் RAMS ஆட்டத்தை சொல்லவும் வேண்டுமா?

8 - 0 என்ற கணக்கில் SAINTS அணியை கடந்த வாரம் எதிர்கொள்ளும் போது.அடியேனின் விண்ணப்பமே , அடேடே ..இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று 9 - 0 என்று வந்தால் எவ்வளவு சந்தோசம் என்று.

அது என்ன அப்படி விசேஷம்.. ஒன்றும் இல்லை.. RAMSன்  பத்தாவது ஆட்டம் எங்கள் நகரிலேயே SEAHAWKS அணிக்கு எதிரான  ஆட்டம் .  இந்த ஆட்டத்திற்கு முன்பு  யாரிடமும் தோற்காத அணி என்ற களிப்போடு காணலாம் என்ற அற்ப ஆசையின் மேல் SAINTS அணி மண்ணை வாரி போட்டது. அப்படி ஏன் ஒரு ஆசை?

ஒன்றும்மில்லை..

இந்த ஆட்டத்தை மைதானத்தில் சென்று பார்க்க நண்பர்களோடு அடியேன் சில மாதங்களுக்கு  முன்பே திட்டமிட்டு இருந்தேன்.

1984 ம் வருடம் தமிழகத்தில் வசித்து கொண்டு இருக்கையில், லாஸ் அஞ்செல்ஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் நடத்த Colesium என்ற அரங்கம் உருவாக்கப் பட்டது தமக்கும் தெரியும்  என்று நினைக்கின்றேன். அந்த காலத்தில் இந்த மைதானத்தை தொலை கட்சியில் பார்த்த பிரமிப்பு அன்றும் நினைவிற்கு வந்தது.

ஆட்டம் 1 : 25 க்கு ஆரம்பிக்ககிட்டதட்ட 80,000 ரசிகர்கள் வருவார்கள் என்று அறியா நாங்கள் முதல் சில நிமிடங்களை தவறிவிட்டோம்.  உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமரும் போது முதல் குவாட்டரில் 6  நிமிடம் பாக்கி இருந்தது. இரு அணியும் ஆளுக்கொரு டச்டௌன் எடுத்து பிரீகிக் கன்வெர்ட் பண்ணதால் தலா 7 புள்ளிகள் எடுத்து இருந்தனர்.

அடுத்த சில மணிநேரங்கள் என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியையும் மிகவும் ரசித்தோம்.

கடைசி இரண்டு நிமிடம் இருக்கையில் RAMS அணி  இன்னொரு முறை எல்லை  கோட்டை வெற்றிகரமாக கடக்க 5  புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னே சென்றது. 

இன்னும் இரண்டு நிமிடம் என்று இருக்க முடியாதே. SEAHAWKS அணியின்  Quarterback Russel Wilson ஒரு சகலகலாவல்லவன் ஆயிற்றே.. எதுவும் நடக்கலாம் என்று இருக்க.. அடுத்த சில நொடிகள் அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று "DE FENCE  DE FENCE" என்று கூச்சலிட... கடைசி ஆட்டம் 4th Down and 11 என்று நினைக்கின்றேன்.

RAMS வெற்றி பெற்றது  என்று சொல்வதை விட SEAHAWKS போராடி தோற்றது என்று தான் சொல்லவேண்டும்.

அருமையான ஒரு ஆட்டம்.

பல  ஜோஸ்யக்காரர்கள் இந்த வருடம் Superbowl  RAMS VS CHARGERS என்று கணித்து வைத்துள்ளார்கள். லாஸ் அஞ்செல்ஸ் நகரமே சற்று திகைத்து  உள்ளது என்று தான் சொல்லவேண்டும்.  சில வருடங்களுக்கு முன் வரை எங்களுக்கு எந்த அணியும் இல்லை, ஆனால் தற்போது இரண்டு அணி.

இந்த வருடம் மொத சீஸனும் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கின்றது. தாமும் ரசித்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தமக்காக  காணொளி.


வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு:

சென்ற மாதம் ஒரு நாள் LAKERS அணி SPURS அணி மேல் ஆடிய ஆட்டத்தை  காண நண்பர்களோடு சென்றோம். Lebron  ஆட்டத்தை ஒரு முறையாவது காணவேண்டும் என்ற ஆசை தான்.

ஆட்டம் முடிய மூன்று நொடிகள் இருக்கையில் லேப்ரான் ஒரு Three Pointer போட ஆட்டம் Extra Time சென்றது. அதில் கடைசி நொடிகளில் அதே லேப்ரான் இரண்டு Free throws தவறவிட LAKERS அணி ஒரு புள்ளியில் தோற்றது.  அதுவும் நல்ல சிறப்பான ஆட்டம்.

Its good to be a Sports Fan this year.. and lets not forget Dodgers ...  :( as well. Almost there, yet so far away!


7 கருத்துகள்:

  1. Sorry Visu I just noticed your post. I love Rams because the young coach made a HUGE difference once they relocated from St Louis. The former coach, Fisher was good but the owner instructed him not to win more than 8 games because he decided to move to LA to make more money in a bigger city.

    Will write more soon!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dude,

      Too good to be true. RAMS VS CHIEFS Game is Moved LA Coliseum and yours faithfully has got an invitation for the game. GO RAMS!

      நீக்கு
  2. It is going to be a great game. Mahomes is an amazing young QB! Rams have the home-field advantage. It is going to be 50:50! Let us see!

    பதிலளிநீக்கு
  3. Visu, ithu namma ooru football illa unga ooru Rugby .... Kaanoli pakka mudiyala athanala intha maathiri oru kelvi !

    பதிலளிநீக்கு