திங்கள், 6 ஆகஸ்ட், 2018

காற்று வாங்க வந்தேன்.. கதை தான்!

ஐம்பதை தாண்டிய ஆண்மகன் பலருக்கு கொடுத்து வைக்காத அதிர்ஷ்டத்தை ஆண்டவன் அடியேனுக்கு கொடுத்துள்ளான். இன்னும் எத்தனை நாளுக்கு என்று தெரியாது, இருந்தாலும் இருக்கும் வரை அதை சீராக வைப்போம் என்று நினைத்து கொண்டே தலை முடியை கோதினேன்.

வாலிப வயதில் இருந்ததில் பாதி இருந்தாலும் பாதியாவது இருக்கிறதே  என்று எண்ணுகையில்.... இளையவள் அலறினாள்...

ரொம்ப வளந்துடிச்சி .. இந்த வாரம் ஒரு மீட்டிங்கில் பேச போறீங்க, போய் நல்லா கட் பண்ணிட்டு வாங்க...

நமக்கு எப்பவுமே இந்த வேலை, சனி காலையில் தான்..

எழுந்தேன் ... அருகில் உள்ள "சூப்பர் கட்" என்ற இடத்திற்கு சென்றேன். எட்டு மணிக்கு திறக்கும் என்ற பலகை இருக்க... எனக்கும் முன்னால் ஒரு வெள்ளைகாரர்.

அவருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு ...அலை பேசியில் நுழைய.. அவரோ..



அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டிங்களா?

எதுக்கு?

ஹேர் கட்..

இல்லையே.. தேவையா...

ஐயோ.. வாங்கிடுங்க... இல்லாட்டி ரொம்ப நேரம் காக்க வேண்டி இருக்கும் ... சனி கிழமை காலை பாருங்க..

ரொம்ப நன்றி என்று சொல்லி அவர்கள் தளத்தில் நுழைந்து 8  :15  கிடைத்த பதினைந்து நிமிடத்தை பெற்று கொண்டேன்.

ரொம்ப தேங்க்ஸ்....

எத்தனை மணிக்கு கிடைச்சது..

8  : 15 ..

யு ஆர் லக்கி...யாராவது கடைசி நிமிடத்தில் கேன்சல் பண்ணி இருப்பாங்க...

எட்டு மணிக்கு கதவு திறக்க, ஒரு வெள்ளை அம்மணி அவரை அழைக்க நான் அங்கே நாற்காலியில் அமர்ந்தேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் ஆறு பேர் வந்து இருப்பார்கள். சிலர் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தவர்கள், சிலர்  Walk in.

மீண்டும் மனதில் அவருக்கு ஒரு நன்றி சொல்லிட்ட்டு... என் முறை வர அந்த நாற்காலியில் அமர..

அந்த பெண்ணிற்கு 23  - 25  வயது  இருக்கும். ஒரு துணியை மேலே போர்த்தி விட்டு...எந்த ஸ்டைல் என்று கேட்க... உங்க சிஸ்டத்தில் இருக்கும் பாருங்க என்று சொல்ல .. அவள் கணினியில் வரலாற்றை தட்டி,

சேம்  திங், லைக் லாஸ்ட் டைம்?

எஸ்..

ஆரம்பித்தாள்.. வெட்டுவதையும், பேசுவதையும்.

இந்தியாவிலும் சரி, உலகின் எந்த மூலையிலும் சரி, முடி வெட்ட சென்றால், அவர்கள் பேச்சு கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.(வளை குடா பகுதியில் இருக்கும் போது, முடி வெட்டி கொண்டு இருந்த மலையாள நபரிடம் நான் கேட்டே விட்டேன்..

எங்க.. எப்ப யார் வந்தாலும் பேச்சு கொடுக்குறீங்க...

இல்லாட்டி நிறைய பேர்  தூங்கிடறாங்க.. அப்புறம் எங்களுக்கு வெட்டுவது பிரச்சனை.. என்றார்.

Makes sense)

சோ, எனி Plans  பார் டுடே..

எஸ்... மதியம் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு போறேன்..

பசங்க என்ன பண்றங்க...?

மூத்தவ காலேஜ் ரெண்டாவது வருஷம்..சின்னவ 11வது போக போறா...

எந்த பள்ளி..?

என்று அவள் கேட்க.. நானும் சொல்ல..

OMG  நானும் அந்த ஸ்கூல் தான் போனேன். கிரேட் ஸ்கூல்.

அப்புறம் காலேஜ் எங்க போனீங்க?

இங்க தான் பக்கத்தில் ...Cal State, Fullerton

ஓ .. நல்ல கல்லூரி, என்ன மேஜர்...

என்று நான் கேட்க்கையில் அம்மணி.. நாம தானே கேள்வி கேப்போம், இவரு என்ன வித்தியாசமா இருக்காரு.. என்று நினைத்து கொண்டே..

அக்கவுண்ட்ஸ்..

ஓ நைஸ்..

அப்புறம் எப்படி.. இங்கே வேலை.. அக்கவுண்ட்ஸ் பிடிக்கலையா?

ஓ நோ.. ஐ லவ் அக்கவுண்ட்ஸ். நான் இங்கே பக்கத்துல வங்கியில் தான் வேலை செய்றேன்..

இது என் வீக்கெண்ட் ஜாப். இன்னும் ஆறு மாசத்தில் கல்யாணம். அதுக்கு வி நீட் சம் மணி, அதனால தான். And more over, this is my passion.

ஐ அம் சோ ப்ரௌட் ஆப் யு..

தேங்க்ஸ்.. இது எல்லாரும் செய்ய முடியாது. காலேஜ் போய் லைசென்ஸ் வாங்கணும். உன் பசங்களுக்கும் சொல்லு குட்  மணி.

அலறியே விட்டேன்.

அட பாவீங்களே.. முடிவெட்டுறவங்களுக்கு ஒரு ஜாதிய கொடுத்து அவங்கள இதுக்கு தான் லாயக்குன்னு சொல்லி, அது மட்டும் இல்லாம அவங்கள கேவல படுத்துற மாதிரி சில பல மொழி சொல்லி...

என்று இந்திய ஜாதி வெறி பிடித்த சனியங்களை திட்டிவிட்டு, அந்த அம்மணிக்கு நன்றி கூறி விட்டு பணத்தை கொடுத்து விட்டு கிளம்பினேன்.

3 கருத்துகள்:

  1. பாராட்டப்பட வேண்டிய பெண்மணி... வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. seiyum thozhilay deivam , athil thiramai than nam selvam appadinnu sollikittay , hair cut, cobblig, washing, even driving ippadi pala velaigalai naam kevalamana velai solli vechirukkom !

    that gals passionate about hair styling reminded a movie called You dont mess with zohan !

    பதிலளிநீக்கு