வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

விடிந்ததை அறிந்தேன்!

குடுகுப்புக்காரன்
நல்ல காலம் என்று
சொல்லும்
முன்னே..

சூரியன் மேகத்தை
கிழித்து கொண்டு
வெளிவரும்
முன்னே..



கோழி.. இல்லை இல்லை..
சேவல் கொக்கரக்கோ
என்று ஆர்ப்பரிக்கும் முன்னே..

பால் காரன்.
அம்மா பால்
என்று அலறும்
முன்னே...

தினமணியும்
The Hinduவும் 
வாசலில் விழும்
முன்னே...

பள்ளி வாசலிலும்
கோவிலும்
பாடல்கள் கேட்கும்
முன்னே..

காலை கனவில்
அவள் வந்தது
பலிக்கும்
என்று எண்ணும்
முன்னே..

மூன்றே முக்காலுக்கு
கடக்க வேண்டிய
மதராஸ் மெயில் ரயில்
நான்கே முக்காலுக்கு
கடக்கும்
முன்னே ...

அருகே உள்ள
தொழிற்சாலையின்
ஐந்து மணி
சங்கு
அடிக்கும்
முன்னே...

அடுத்த அறையில்
அன்னையின்
பிரார்த்தனை
செவியில் விழும்
முன்னே..

விடிந்ததை அறிந்தேன்..

எப்படியா?

டாலர் விலை மீண்டும் விழுந்தது..
பெட்ரோல் விலை மீண்டும் எழுந்தது...
என்ற செய்தியினால்.

நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது....

அச்சா தீன் ஆகையா..
அச்சா தீன் ஆகையா..
இந்த நிலை கெட்ட
 மாந்தர்களை நினைத்து
கொண்டு இருக்கையிலே..
அச்சா தீன் ஆகையா!

2 கருத்துகள்:

  1. சிறப்பான கவிதை. விடியலை அறிவிக்கும் உலக அரசியல். உண்மைதான். உங்கள் பதிவு எங்கள் தளத்தில்...
    "விசுAwesomeமின்துணிக்கைகள்" | கவிதை | விடிந்ததை அறிந்தேன்! : சிகரம்
    தொடருங்கள். தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கவிதை. விடியலை அறிவிக்கும் உலக அரசியல். உண்மைதான். உங்கள் பதிவு எங்கள் தளத்தில்...
    "விசுAwesomeமின்துணிக்கைகள்" | கவிதை | விடிந்ததை அறிந்தேன்! : சிகரம்
    தொடருங்கள். தொடர்வோம்.

    பதிலளிநீக்கு