செவ்வாய், 24 ஜூலை, 2018

பிள்ளையை பெத்தா இளநீரு...

என்ன ஒரு அற்புதமான நாள் இன்று.

காலை எழுந்து முகநூல் திறக்கையில் என் அருமை நண்பனின் பதிவு.ஆண்டவனின் அருளால் என் மகன் தணிக்கையாளர் தேர்வில் வெற்றி பெற்றான் என்று.
என் நண்பனும் தணிக்கையாளனே.
நான் தணிக்கையாளனாவதற்கு பல பேர் உற்சாக படுத்தி இருந்தாலும், இந்த நண்பனின் உந்துதலை மறக்கவே இயலாது.

ஒரு முறை பரீட்சைக்கு செல்லும் போது, கடைசி நிமிடத்தில் ஒரு சந்தேகம் வர, நேரமின்மை காரணமாக புத்தகத்தை எடுக்காமல், ஒரு இன்டர்நெஷனல் ( அந்த காலத்தில் அந்த கால் ரொம்ப அரிது) கால் போட்டு அவன் சந்தேகத்தை விளக்க .. அதே கேள்வி தேர்வில் வர..
விட்ட குறை தொட்ட குறை தான் போங்க.

வளைகுடா பிரதேசத்தில் கடைசியாக பார்க்கும் போது அவன் மகனிற்கு நான்கோ ஐந்தோ வயது. விடை பெரும் போது,
நல்லா தானே இருக்கே.. நீ ஏன் அமேரிக்கா போற? இன்னும் கொஞ்சம் வருடம் இங்கேயே இரு..
இல்லே...மொத்த குடும்பமே அமெரிக்காவில் இருக்காங்க.. என் பொண்ணுக்கு (அப்ப ஒரு ராசாத்தி தான்) அவளோட கசின் மற்றும் சொந்தம் பந்தம் எதுவுமே தெரியாம வளருறா.. நான் அங்கே போறது தான் சரி...
ஓகே..


நீ இன்னும் எவ்வளவு நாள் இங்கே இருக்க போற...
இவன் படிச்சி முடிக்கிற வரை.
சூப்பர்..
இப்படி பண்ணு.. இவனை தணிக்கையாளர் படிப்பை படிக்கச் வைச்சி உன் வேலையை இவனிடம் கொடுத்துட்டு நீ ரிட்டையர் ஆயிடு..
சிரித்து விட்டு பிரிந்தோம்.
கடந்த பல வருடங்களில் நண்பனை சந்திக்க முடியாவிட்டாலும், அம்மணியையும் புதல்வனையும் சந்திக்கும் பாக்கியம் கிட்டியது. அவனுக்கு 12 வயது போல் இருக்கும் போது, ஒரு முறை சந்தித்தேன்..
மறந்துடாத, ஒழுங்கா படி.. உனக்கு வேலை தயார்.. படிச்சி முடிச்சவுடன் நேரா சேர்ந்துடலாம்.உற்சாக படுத்தினேன்.
இன்னும் சில வருடங்கள் போனது.
விசு..
சொல்லு..
இவன் +2 முடிச்சிட்டான்.. என்ஜினீயரிங் படிக்குறேன்னு சொல்றான்.
அட பாவி.. , அதெல்லாம் நமக்கு எதுக்கு ? அகௌண்ட்ஸ் படிக்க தானே சம்மதிச்சான்.
என்ன சொல்றது.. நானும் பேசி பார்த்தேன்.. வேலைக்கு ஆவலை..
சரி விடு...
மனதில் சிறிய சோகம்.
சில நாட்கள் கழித்து..
விசு , கிச்சனில் போய் வாய்க்கு ஒரு ஸ்பூன் சக்கரை போட்டுக்கோ..
ஏன்..
என்ஜினீயரிங் வேண்டாம் .. அகௌண்ட்ஸ் படிக்கிறானாம்.
யு ஆர் வெல்கம்.
ஏன்..
அவனுக்காக இங்கேயும் சில பிரார்த்தனைகள் நடக்குதே..
அதுக்கு?
பல வருடங்கள் கழித்து இன்று காலை வந்த செய்தி..
நம் பிள்ளைகள் நல் வழியில் சீராக வரும் போது என்ன ஒரு இன்பம் .. என்ன ஒரு மகிழ்ச்சி.
இன்னும் நாலு வருடம் கழித்து இதே பதிவை நானும் போட வேண்டும் ... அது ஒன்று மட்டுமே அடுத்த நான்கு வருட பிரார்த்தனை.
பின் குறிப்பு :
நம் பிள்ளைகள் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் பிற்காலத்தில் என்னவாறு வாழ வேண்டும் எந்த பணியில் இருக்க வேண்டும் என்று நாம் ஒரு கற்பனை செய்வோம். அந்த கற்பனை பல வருடங்களுக்கு பின் நிஜமாகும் போது...என்ன ஓர் ஆனந்தம்..

2 கருத்துகள்: