திங்கள், 6 நவம்பர், 2017

கடலோரம் வாங்கிய காற்று..

சரி.. பிறந்தநாள் நாளைக்கு ஆனாலும் பரவயில்லை, சனிக்கிழமையே   பரிசு எதுவும் வேணாம் .. சமையல் போதும்னு அம்மணி சொல்ல.. அதையும் செஞ்சி குடும்பத்தோட டின்னர் முடிச்சிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து  குடும்பத்தோடு கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த பின்னர்..

ரெண்டு ராசாத்திக்களும்    அவங்க வங்கியாந்த பரிசை கொடுக்க.. நானோ விழி பிதுங்கி அமர்ந்து இருக்கையில்...

San Clemente Pier


டாடா.. எங்க உங்க கிப்ட்?



அம்மா வேணாம்னு சொல்லிட்டாங்க?

நைஸ் ஜோக்.. சீக்கிரம் எடுங்க...

நோ.. அம்மா சீரியஸாவே வேணாம்னு சொல்லிட்டாங்க..

வாட்.. உண்மையாவே எதுவும் வாங்கலையோ?

அவங்க தான் வேணாம்னு சொல்லிட்டாங்களே..

என்னாலே நம்பவே முடியலை.  எப்ப சொன்னாங்க?

வெள்ளி கிழமை சாயங்காலம் கேட்டேன்..

யாராவது .. யாருட்டையாவது கிப்ட் என்னா வேணும்ன்னு கேப்பாங்களா? இல்ல கேப்பாங்களா?

இல்லை.. போன நாலு வருஷம் வாங்கி கொடுத்த எதுவும் அவங்களுக்கு ஒத்து வரல..

கல்யாணம் ஆகி இம்புட்டு நாள் ஆகியும் அவங்களுக்கு என்ன புடிக்கும்னு தெரியல...

அவங்களுக்கு என்ன புடிக்கும்னு தெரியாது, ஆனா என்னை புடிக்கும்னு தெரியும் ..

என்று நான் மூத்தவள் அடாவடி கேள்விக்கு  பதில் சொல்லும் போது இளையவள் குறுக்கிட்டு.. இட் ஐஸ் அரேஞ்ட் மேரேஜ் . அம்மாவை போர்ஸ் பண்ணி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க.

எனக்கு என்ன குறைச்சல்..?

அவங்களுக்கு என்ன கிப்ட் வாங்கி தர்ரதுன்னு கூட தெரியல.. வேற என்ன குறைச்சல் வேணும்?

அம்புட்டையும் கேட்ட அம்மணி.. கடைசியாக குறுக்கிட்டு..

போர்ஸ் யாரும் பண்ணல.. நானே தான் கொஞ்சம் அவசர பட்டுட்டேன் .. Judgement Error..  பட் இட்ஸ்  ஓகே.. என்று சொல்ல..

இன்னாடா இது... என்று நினைத்து ஒரு பூனை தூக்கம் போட நினைக்கையில்..

அம்மணி...

எனக்கு ஒரே கிப்ட் தான் வேணும்.. என்னோட வாக்கிங் வாங்க..

என்று சொல்ல..

நோ என்று நான் அலறியது.. ஊருக்கே கேட்டு இருக்கும்.

எது வேணும்னாலும் கேளு.. பிரச்சனையே இல்லை..உன்னோட வாக்கிங்.. தனியா நடந்தா 300  கலோரி மட்டும் போகுதுன்னா.. உன்னோட நடந்தா 3000  கேலரி காணாமல் போயிடும். .. காலை தூக்கி வைச்சி நடுங்க.. வேகமா நடங்க... நிமிந்து நடங்க.. நேரா நடங்க.. கையை வீசி வீசி நடங்க... இப்படி நடையா இது நடையா ஒரு நாடகமா இங்கே நடக்குது ரேஞ்சுக்கு கூட்டினு போயிடுவேயே..

சரி.. பிறந்த நாளுக்கு கூட இது செய்யாட்டி பரவாயில்லை.. நான் கொடுத்துவைச்சது ...

என்று சொல்லி முடிக்கும் முன்..

மூத்தவள்.. "கெட் அவுட் ஆப் ஹியர் .. டேக் ஹேர் அவுட்.. பி எ மேன் " என்று அலற..

எங்கே போறோம்?
கடற்கரை ஓட்டிய ரயில் நிலையம்..

நீங்களே சொல்லுங்க..

மீண்டும் கரும்பு தின்ன கூலியா?

வீட்டின் அருகில் உள்ள... பசிபிக் கடற்கரையில் அமைத்துள்ள Pier  (பாலம்? ) போய் நடக்கலாம் என்று கிளம்பினோம்.

Best Climate Under the Sun

இது எனக்கு மிகவும் பிடித்த இடம். இன்னும் சொல்ல போனால்..இந்த ஊரை..Best Climate Under the Sun என்று கூட சொல்வார்கள்..

ராத்திரி பெய்த மழையினால் குளிர் காற்று சற்று அதிகமாக வீச.. காலை வெய்யில் அதை துரத்தி அடித்து கொண்டு இருந்தது...
பாலத்தின் மேலே.. முதலுதவிக்கான வண்டி மற்றும் வசதிகள்..

இதோ அந்த நடை...

பாலத்தின் மேல் ஏறியவுடன் அம்மணியின் அலைபேசி பனி நிமித்தமாக அலற.. அடியேன் வீடியோ எடுக்க தயாரானேன்.

நீங்களும் கண்டு களியுங்கள்.


இந்த பாலத்தில் இரண்டு உணவு விடுதிகள் அமைந்துள்ளது. இதில் போய் சாப்பிட வேண்டுமென்றால் வீட்டை எழுதி வைக்க வேண்டும் . என்னைக்காவது ஒரு நாள் இதுக்குள்ள போய் சாப்பிடலாம்னு அங்கே ஏக்கத்தோடு பார்க்கையில்.. உள்ள இரண்டுதெரிந்த முகங்கள் போல இருந்தது. கண்டிப்பா அது மதுரை தமிழனும்.. பரதேசியும் தான்னு   நினைக்கின்றேன்.

உள்ளே இருப்பது மதுரையும் பரதேசியுமா? 

6 கருத்துகள்:

  1. நல்ல வேளை.. என்ன நீங்க பாக்கல..:)
    .
    .
    .
    .
    நான் அந்த பக்கம் கண்ணாடி வழியா உள்ள பார்த்துட்டு இருந்தத சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அந்த மூனாவது ஆள் நீங்க தான? சொல்லவே இல்லை?

      நீக்கு
  2. விசு இந்த மாதிரி ஒரு பாலம் கடலில் பாலம் நா எவ்வளவு வேணாளும் நடக்கலாம்...அழகு அழகு!! ரொம்ப அழ்கா இருக்கு! வீடியோவுலயே ஐ லவ் திஸ் ப்ளேஸ்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. என்னடாது பரதேசிக்கு வந்த சோதனை , எங்க போனாலும் ஒரு ப்ரைவசியே இல்லை ?ஓடவும் முடியலை ஒளியவும் முடியலை .

    பதிலளிநீக்கு