சனி, 4 நவம்பர், 2017

அம்மணியை கவர...கவிழ்க்க ஒரு ஐடியா!

அம்மணியின் பிறந்தநாள் நாளைக்கு... ரெண்டு ராசாதிக்களும் ரகசியமா பிறந்த நாள் பரிசு வாங்கிட்டாளுங்க.. என்ன பரிசுன்னு கேட்டேன் ... "இட்ஸ் எ சீக்ரட்ன்னு" சொல்லி தொரத்திட்டாளுங்க.

கடந்த சில வருடங்களாகவே நம்ம வாங்கி கொடுத்த ஒன்னும் வேலைக்கு ஆகல, அதனால் இந்த வருஷம்.. என்ன வேணும்னு நேராவே கேட்டுட்டேன்.

நல்ல வேளை.. கேட்டீங்க.. நீங்க பாட்டுக்கு ஏதாவது வாங்கினு வந்துடுவீங்களோன்னு பயந்தேன்..

நல்ல மாட்டுக்கு நாலு சூடு.. சொல்லு.. வானவில்லை வளைக்கட்டும்மா.. இல்லாட்டி ....



அதெல்லாம் வேணாம்.. வாய்க்கு ருசியா இன்னிக்கு சமைச்சி போடுங்க.. நான் ஒரு ஆறு மணிநேரம் கான்பரென்ஸ் போகணும் .. சாயங்காலம் பசியோட வருவேன். தேங்க்ஸ்..

அட பாவி.. கரும்பு தின்ன கூலியா.. சூப்பர் என்று.. நினைக்கையில்..

டாடா.... அம்மாக்கு பிரியாணியா.. காய்கறி...

நீங்க ரெண்டு பேரும் இந்த விளையாட்டுக்கு வராதீங்க.. "சிட் பேக் அண்ட் என்சாய்" என்று சொல்லிவிட்டு...

அருகில் இருந்த கொரியன் கடைக்கு வண்டியை விட்டேன்..

அம்மணி .. யாழ்பாணமாச்சே.. அவங்களுக்கு நிற்பன நடப்பன பரப்பன விட  நீந்துவன தான் ரொம்ப பிடிக்கும்.. அதனால் .. நேராக அங்கே இருக்கு மீன்  இடத்திற்கு சென்றேன்.

அம்மணிக்கு மிகவும் பிடித்தது.. நான் அடிக்கடி செய்யாதது.. ஆவி மீன் (Steam  Fish ).. என்ன நிறைய முறை கேப்பாங்க.. அதுக்கு கொஞ்சம் லேபர் ஜாஸ்தின்னு செய்ய மாட்டேன். சரி .. இன்னைக்கு செய்யலாம்னு...

ரெண்டு Red Snapper ரெண்டு Sea Bass. எடுத்து அது சுத்தம் செய்யுறவரிடம் கொடுத்து எப்படி செய்யணும்னு ரெண்டு நிமிஷம் சொல்லி முடிக்கையில்.. நோ இங்கிலீஷ் .. என்று மேலே உள்ள ஒரு பலகையை காட்ட.. அதில் ஐந்தாம்  முறையான சுத்தத்தை கேட்டு கொண்டேன்.
அந்த ஐந்தாம் ரகம்..

அம்மணிக்கு பிடித்த இன்னொரு விஷயம் இறால். சரி அதையும் கொஞ்சம் வாங்கிக்கலாம்னு போய் பார்த்த நான் .. பேய் அறைந்தது போல் ஆனேன் (பேய் அறைந்த கதையை இன்னொரு நாள் சொல்றேன்) .. Tiger Prawns ஒரு பவுண்ட் 23.99 டாலர்.. நாம என்ன டிஜிட்டல் இந்தியாவிலா இருக்கோம், இல்லாட்டி கிழக்கு சீமை ஜமீன்தார் மதுர தமிழனா?  இது நமக்கு தேறாதுன்னு சொல்லிட்டு பக்கத்துல இருந்த 9 . 99  (என்னமோ பாட்டா செருப்பு பாணியில் விலை) கொஞ்சம் வாங்கி கொண்டு..
மதுர மரிக்கொளுந்துக்கு மட்டும் தான் வாய்க்கும்...

பக்கத்தில் இருந்த காய்கறி பக்கம் போய்.. வெண்டைக்காய் - பீர்க்கங்காய் - கத்திரிக்காய் - கொத்தமல்லி - ரோஸ்மேரி  இலை -வெங்காய இலை - கொத்தமல்லி - பச்சை மிளகாய் - பப்பாயா பழம் வாங்கி கொண்டு வீட்டை வந்து சேர்ந்தேன்.

RoseMary

வந்த உடனே... அடுப்பில் கடாய் வைத்து.. அந்த கத்திரிக்காயை குறுக்கும் நெடுக்குமா கீறி.. எண்ணெய் கொஞ்சம் ஊத்தி... மஞ்சள் - மிளகாய் - தனியா - உப்பு மட்டும் போட்டு கொஞ்சோடு சூட்டில் வைத்து .. மூடிய போட்டு..

ஒரு பெரிய பாத்திரம் எடுத்து கொண்டு.. முதலில் ஒரு பத்து பல் பூண்டை தட்டி போட்டேன். அடுத்து வெங்காய இலையை (இந்த ஐட்டத்துக்கு வெங்காயம் போடக்கூடாது அதுதான் ) நறுக்கி  போட்டு.. பின்னர் பீர்கங்காய தோல்சீவி நீள நீளமா போட்டேன். பின்னர் வெண்டைக்காய நடுவில் கீறி அதில் போட்டேன். அப்புறம் ரோஸ் மேரி, மற்றும் கொத்தமல்லி.. மற்றும் பச்சை மிளகாய். அது கூட கொஞ்சம் பட்டரை லேசா சூடு பண்ணி ஊத்தி.. தேவையான உப்பு போட்டு கலக்கி .... பாதி விஷயம் தயார்.

கத்திரிக்காய்.. அதுபாட்டுக்கு வெந்து கொண்டு  இருக்க.. வாங்கி வந்த மீனை ஒரு முறை அலசி.. ரெண்டு பக்கமும் ரெண்டு கீறல் போட்டு.. கொஞ்சம் சீரக
தூள் - உப்பு - மஞ்சள் போட்டு .. மீனும் தயார்.


வெளிய இருக்க பார் பி குயூவை ஆன் பண்ணி அது சூடாகும் போது.. Silver Wrapper எடுத்து .. அதில் மீனையும் கலக்கி வைச்ச காய்களையும் போட்டு காத்து கூட வெளிய வராத மாதிரி மூடி, நாலு மீனையும் அதில் போட்டுட்டு.. உள்ளே ஓடி வந்து கத்திரிகாய  நிதானமா உடையாம திருப்பி விட்டு..

இறால் பக்கம் போனேன்.. ஒவ்வொவொன்றையும் எடுத்து முதுகை மட்டும் கீறி அழுக்கை எடுத்து விட்டு..எண்ணையை சூடு பண்ணி.. அதில் சர்ர்...என்ற சத்தத்தோடு பொறிக்க ஆரம்பித்தேன்..

எல்லாம் தயாராகி கொண்டு இருக்க..

என்னங்க.. இன்னும் 15  நிமிசத்தில் இருப்பேன், ரொம்ப பசி...

நேரா வா.. எல்லாம் தாயாருன்னு ஒரு பொய்ய சொல்லி...

பக்கத்துல இருந்த பப்பாயாவை தோலை சீவி பாதி பாத்தியா வெட்டி.. (இந்த Steam Fish ஜமைக்கா ஸ்பெஷல் .. அங்கே இதுக்கு சைட் டிஷ் மாதிரி பப்பாயா தருவாங்க) ஒரு பாத்திரத்தில் போட்டு..

கத்தரிக்காயை இன்னொரு பாத்திரத்தில் போட்டு.. பொரித்து இருந்த இறாலை  கத்திரிக்காய் வறுத்த கடாயில் போட்டு அந்த மீதி மசாலாவை இறாலில் ஏத்தி .. இறாலையும்.. மேசையில் வைத்தாயிற்று.

அடியேனின் இல்லத்தில்.. வாரத்துக்கு ஒரு முறையோ சோறு செஞ்சா பெரிய காரியம்.. (டயபடீஸாம்). எப்பவோ செஞ்ச சோறை நாலு கரண்டி எடுத்து சூடு பண்ணி அதையும் மேசையில் வைக்க..

நாலு பேருக்கு தட்டையும் தண்ணியையும் ராசாத்திங்க வைக்க.. அம்மணி வந்து அமர..

என்னங்க சாப்பாடு..

Steam Fish..
சும்மா சொல்ல கூடாது.. நல்லாவே இருந்தது.. 

முகமே மலர்ந்தது.. முதல் முதலா நான் பொண்ணு பாக்க போய் இருந்தேனே அதே சிரிப்பு.. "பார் பி குயூ"வில் இருந்த மீனை எடுதுன்னு வந்த நாலு பேருக்கும் ஆளுக்கு ஒன்னு வைக்க..

முதலில்.. பிரேயர்ன்னு அம்மணி அதட்ட..

ஆண்டவனே.. அம்புட்டும் அறிந்தவனே.. அடியேனுக்கு அவளை விட்டால் வேற யாரும் செட் ஆகாதுன்னு அக்கரையில் இருந்து அக்கறையா எனக்கு கொடுத்தீயே.. இந்த அம்மணி இன்னும் பல பிறந்தநாளை பாக்கணும்.. நன்றின்னு

சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிக்கையில்..

இளையவளோ..

"டாடா.. ஐ நெவெர் க்நொவ் யு கேன் குக்" என்று சொல்ல..

அட பாவி.. மதியம் கூட முட்டை தோசை செஞ்சி கொடுத்தேனே என்று நான் அலற..

ஐயோ... நான் சொல்லவந்தது.. உங்களுக்கு Steam Fish பண்ண தெரியும்னு எனக்கு தெரியாது...

என்று சொல்ல..

"ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பிவைச்சான்" கதை தான் போங்க..

9 கருத்துகள்:


  1. உங்கவீட்டு அம்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்தை என் சார்பாக சொல்லிடுங்க...

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் உங்களை மாதிரி என் மனைவிக்கும் பிறந்த நாள் அன்று சமைச்சு போட ஆசை ஆனால் என்ன தினசரி சமைச்சு போடுவதால் பிறந்தநாள் அன்றும் சமைப்பதால் அசத்த முடியாது என்பதால் பேசமால் ஹோட்டலுக்கு போய் சாப்பிடுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவுல உன் விஷயம் ஒன்னை சொன்னேன்.. அதை அப்படியே கண்டுக்காம விட்ட பார் .. அங்கே தான் நீ நிக்குற மதுர..

      நீக்கு
    2. கிழக்கு சீமை ஜமின்தார் மதுரைத்தமிழனா என்றது யாரையோ சொல்றீங்க என நினைச்சுட்டேன். இனிமே ஈஸ்ட் கோஸ்ட் தமிழன் என்று சுத்தமான தமிழில் எழுதுங்க அப்பத்தான் சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து வந்த தமிழனுக்கு புரியும்

      ஜமின் தார்ன்னா தன்னை சுற்றி நாலு பெண்கள் நிற்க அதில் இரண்டு பெண்கள் ஜமிந்தாருக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைக்கும் ஜமிந்தாரைத்தானே சொல்லுறீங்க ஹீஹீ அப்படின்னா நான் ஜமின் தாராக இருக்க ரெடி

      நீக்கு
    3. இதுதான் மதுர லொள்ளு ந்றது!!

      கீதா

      நீக்கு
  3. very interesting....

    சுவையான சமையல்....உங்க வீட்டு அம்மணிக்கு எனது வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  4. சிறப்பு... மிகச்சிறப்பு... கொடுத்த வைத்த குடும்பம்.

    பதிலளிநீக்கு
  5. what's your daughters' gift? you did not tell anything about it?suspend suspense .
    eagerly,
    karthik amma.
    My birthday wishes to your sweetheart.
    karthik amma

    பதிலளிநீக்கு
  6. ஸாரி விசு பதிவ மிஸ் பண்ணிருக்கோம்...பிலேட்டட் விஷஸ் உங்கள் மனைவிக்கு. எல்லா நாளும் பிறந்த நாளே! எங்கள் வாழ்த்துகள் சொல்லிடுங்க..

    பதிலளிநீக்கு