ஞாயிறு, 26 நவம்பர், 2017

தக்காளி ... என்கிட்டயேவா?

ஏங்க...

சொல்லுங்க..

மதியம் சாப்பாட்டுக்கு மாதவன் குடும்பத்தை கூப்பிட்டு இருக்கேன்..

சந்தோசம்...நைஸ் கப்பில்.. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் அம்புட்டு படிச்சி அம்புட்டு பெரிய வேலையில் இருந்தாலும் என்னே ஒரு தாழ்மை.. என்னே ஒரு பொறுமை.. மேன் மக்கள் மேன் மக்களே..

சூப்பரா சொன்னீங்க.. எனக்கு ஒரு சந்தேகம்?

சொல்லு..

கோச்சிக்க மாட்டீங்களே..

சரி வேணாம் விடு..

இல்ல சொல்றேன்..

சொல்லு..

இப்ப அவங்க ரெண்டு பேரை அம்புட்டு நல்லவங்குன்னு  இம்புட்டு பாராட்டினீங்களே.. நம்மளை யாராவது அப்படி சொல்லுவாங்களா?



சந்தேகமே வேண்டாம். நம்மளை சொல்ல மாட்டாங்க.. வேணும்னா நீ தனியா போனா சொல்லுவாங்க.

உங்கள்ட்ட கேட்டேன் பாருங்க...

நான் தான் வேணாம்னு சொன்னேனே..

சரி.. கொஞ்சம் கடைக்கு கிளம்புங்க..

என்ன விஷயம்?

மாதவன் சுத்த சைவம் அம்மணி வெட்டு குத்து..அம்மணிக்கு வேண்டிய ஐட்டம் எல்லாம் இருக்கு.. மாதவனுக்கு..

அவருக்கு சேப்பங்கிழங்கை வேக வைச்சி கொடுத்தாலே வீடை எழுதி கொடுத்துடுவாரே..

கொஞ்சம் சீக்கிரம் போய் வங்கின்னு வாங்க..கூடவே.. சில ஐட்டம்.. ஒரு பேப்பரில் எழுதிக்குங்க..

பரவாயில்லை சொல்லு...

ஒரு பேப்பரில் எழுதிக்குங்க..

கையில் பேப்பரையும் பேனாவையும் திணிக்க ..


கடைக்கு சென்றேன்..

சேப்பங்கிழங்கு..ஓகே

இந்தியன் - இத்தாலியன் கத்திரிக்காய்... ஓகே

வெங்காயம் ரெண்டு  பவுண்ட் .. அல்லது 8  வெங்காயம் போல்...ஓகே

தக்காளி.. 4  (அட பாவி.. 4  பவுண்டா அல்லது 4  தக்காளியா?)

கொத்தமல்லி ரெண்டு கட்டு

உருளை கிழங்கு 6  பவுண்ட்.


தக்காளியை தவிர எல்லாவற்றையும் சீராக வாங்கிவிட்டு.. தக்காளி 4  பவுண்டா? அல்லது 4  தக்காளியா? என்னவாக இருக்கும்? இப்ப என்ன செய்வது என்று கை கால் புரியாமல் இருக்கையில்..

அலை பேசி அலறியது...

வாத்தியாரே..

தண்டம்...

என்ன குரல் தடுமாறுது .. வாத்தியாரே...

ஒன்னும் இல்ல சொல்லு..

நான் சொல்றது இருக்கட்டும்.. என்ன தப்ப பண்ண சொல்லு..

தப்ப இன்னும் பண்ணல, பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு...

அதுதானே பார்த்தேன், கண்டின்யு ..

அம்மணி சில ஐட்டம் வாங்கி வர சொன்னாங்க..

கடையிலா இருக்க?

ஹ்ம்ம்...

அதுல என்ன தப்பு... எல்லாத்தையும் எழுதின்னு தானே வந்து இருப்ப?

எல்லாம் ஓகே.. தக்காளி மட்டும் 4  தக்காளியா இல்ல 4  பவுண்டானு தெரியல..

ஓ.. பிரச்சனை தான்.. ஆனா சமாளிக்கலாம்..

எப்படி...

மாத்தி யோசி வாத்தியாரே..

சொல்லு..

வேற என்ன என்ன வாங்கினு வரசொன்னாங்கன்னு பாரு,. அதை வைச்சி என்ன சமைக்க போறாங்கன்னு தெரியும்.. அதுல இருந்து நாலு தக்காளியா இல்ல நாலு பவுண்டானு கண்டுபிடிச்சிடலாம்..

சேப்பங்கிழங்கு..

அதுக்கு தக்காளி வேணாம்.. நெக்ஸ்ட்...

கத்திரிக்காய்...

ஓ.. ஒரு வேளை சாம்பாருன்னு ரெண்டு தகக்காளி தேவை படலாம்.. பொரியல்னா வேண்டாம் .. நெக்ஸ்ட்..

வெங்காயம்..

வெங்காயம்  போடுற அம்புட்டு விஷயத்துக்கும் தக்காளி  தேவை படும். நெக்ஸ்ட்...

உருளை கிழங்கு..

ஒரு வேளை மசாலா இல்ல பொடிமாஸ் செய்யுறதுன்னா தக்காளி தேவை படும்..

இப்ப சொல்லு.. நாலு தக்காளியா? நாலு பவுண்டா?

நாட் சுவர் ..வாத்தியாரே.. பேசாமே அம்மணியிட்ட போன் பண்ணி கேட்டுடு...

அது முடியாது தண்டம்.. தான் பேசும் போது நான் கவனிக்கிறது இல்லேன்னு நேத்து கூட மீன் கடையில் புலம்பினாங்க.. நான் பாத்துக்குறேன். தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப். நீ எதுக்கு போன் பண்ண?

அது முக்கியம் இல்ல.. வீட்டுல போய் எப்படி சமாளிச்சேன்னு சொல்லு..

தக்காளியும் வாங்கி கொண்டு இல்லம் செல்ல..

அம்மணி...

வாங்க வாங்க.. ஏன் இம்புட்டு நேரம்?

என்று சொல்லி..

ஏங்க..தக்காளி...

தக்காளி... அதுக்கு என்ன இப்ப?

ஏன் ஒவ்வொன்னும் தர்பூசணி போல இம்புட்டு பெருசா இருக்கு?

அது ஒன்னு தான் இருந்தது...

நாலு தானே வாங்கினு வர சொன்னேன்...

நாலு தான் வங்கின்னு வந்தேன்..

நான் கேட்டது நாலு பவுண்ட்..

அதுவும் நாலு பவுண்டு தான் .. ஒவ்வொரு தக்காளியும் ஒரு பவுண்ட்..

ஐயோ.. இப்படி தெரிஞ்சி இருந்து இருந்தா.. ரெண்டே ரெண்டு வாங்கி வர சொல்லி இருப்பேனே?

அடுத்த முறை..கொஞ்சம் ஜாக்கிரதையா   விளக்கமா சொல்லு..

சரிங்க..



3 கருத்துகள்:

  1. காய்கறி வாங்குறதுல உங்க மாப்ளைய மிஞ்சிடுவீங்க போல...

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா....விசு பேக் டு ஃபார்ம் போல!!! அழையபடி தண்டம்....வீட்டம்மானு களைகட்டுதே!!!

    வீட்டம்மாக்கள் 4 வாங்கிட்டு வரச் சொன்னா அத நாலுபேர்கிட்ட கேக்கக் கூடாது....அவங்க மனசுல என்னனு நினைச்சு சொல்லிருப்பாங்கனு தெரிஞ்சுருக்கணுமாக்கும்....

    வீட்டுக்கு வீடு வாசப்படி!!!!!

    பதிலளிநீக்கு