ஞாயிறு, 26 நவம்பர், 2017

தூங்காதே விசு தூங்காதே..

இவரு இப்ப எல்லாம் ரொம்ப சோம்பேறி ஆகிட்டார்..

நன்றி திருவிழா கொண்டாட்டத்தில் தோழி  ஒருவரிடம் அம்மணி முணுமுறுத்தார்.

என்ன சொல்றீங்க?

ரொம்ப சோம்பேறி ஆகிட்டார்.

அப்படினா.. நீங்க தவறிட்டிங்கன்னு  தான் சொல்லணும்...

நான் எங்கே தவறினேன்... அவரு தான் சோம்பேறி ஆகிட்டாரு..

அவரை சோம்பேறி ஆக்க விட்டது நீங்க தானே..

எப்படி?

ஒரு நிமிஷம் உக்கார விடாம தொடர்ந்து வேலை கொடுத்தா எப்படி சோம்பேறி ஆவார்?

புரியல? தொடர்ந்து வேலை? எப்படி? உதாரணத்தோடு சொல்லு..

சனி கிழமை காலையில் எழுந்தவுடன்..

எழுந்தவுடன்...


இல்லை இல்ல.. வெள்ளி இரவில் தூங்க போகும் போதே...

போதே..

நாளைக்கு நிறைய வேலை இருக்கு.. சீக்கிரம் தூங்க போங்கன்னு ஒரு பிட் போடணும்..

அதை தான் தினமும் சொல்றேனே..மேலே சொல்லு..

தூங்க வரவர்ட்ட.. ஏங்க.. காலையில் பசங்க எழுறதுக்கு முன்னால துணி மொத்தத்தையும் துவைச்சு மடிச்சிடுங்கன்னு சொல்லு...

அப்படி தான் போன வெள்ளியும் சொன்னேன். அது வேலைக்கு ஆகல..

ஏன்?

காலையில் எதுக்கு... இப்பவே பன்றேன்னு ஓடி போய் 11  மணிக்கு முன்னால  அம்புட்டையும் துவைச்சு அடுக்கி வைச்சிட்டு வந்தார்.

ஒவ்வொரு சனியும் முழு வீட்டையும் பெருக்கி துடைச்சு எடுக்கணும்னு சொல்லுங்க?

வாரத்துக்கு நாலு  முறை எதுக்கு சுத்தம்?

புரியல?

திங்கள் - புதன் - வியாழன் அவரே சுத்தம் பண்ணிடுறாரே..

ஓ.. அப்படினா?  சனி காலையில் தோட்டத்து வேலை..

சனி காலையிலா..? இவரை விட்டா தினந்தோறும் காலையில் தோட்டத்து வேலைக்கு போயிடுவாரு.

ஏழு நாளும் காலையில் ஆறரைற்கு  ஏழனும்னு சொல்லுங்க..

ஏன் ? அவரு ஒரு மணி நேரம் கூடுதலா தூங்குறதுல என்ன ஆகிட போது?

புரியல..

தினந்தோறும் அஞ்சு மணிக்கு எழுந்து இளையவளை பள்ளிக்கூடத்துல விட்டுட்டு ஆறுக்கு எல்லாம் வேலைக்கு போயிடுவாரு?

ஆட்டம் பாட்டம்ன்னு குழந்தைகளை வெளியே கூட்டினு போக சொல்லுங்க..

நீ ஒன்னு.. ஆட்டம் பாட்டம்னு வெளியே இருக்க இந்த மூணு பேரையும் இவங்கள வூட்டுக்குள்ள வர வைக்க நான் படர பாடு எனக்கு தான்..

சனி கிழமை 10  மணிக்கு எல்லாரோட காரையும் சுத்தம் பண்ண சொல்லுங்க..

காரை எங்க அழுக்காக விட்டார். அதை ரெகுலரா சுத்தம் பண்ணி எடுத்துனு வந்துடுவார்.

பசங்க வீட்டுப்பாடம்...

அவளுங்களே பாத்துக்குறாளுங்க.. இவரே சொல்லி கொடுக்குறேன்னு உக்காந்தாலும் வேணாமாம் ..இவர் ரொம்ப  டார்ச்சராம்.

கராஜ்... சுத்தம்..

வேணாம்.. அதுல இருக்குறது எல்லாம் நான் சேர்த்து வைச்சது. ஒன்னும் ஒண்ணுத்துக்கும் உதவாது.. அங்கே போனாருன்னா என் பேரு ரிப்பேர்.

சனி கிழமை 11  மணிக்கு மளிகை சாமான்..

அதை தான் கொஞ்சம் அவாய்ட் பண்ணுவாரு.. நான் கடைக்கு போறேன் நீங்க அம்புட்டு பாத்திரத்தையும் இன்னொரு முறை கழுவி வைச்சிடுங்கன்னு சொன்னா கடைக்கு கிளம்பிடுவாரு? வேற  சொல்லு..

வேற என்னத்த சொல்றது?அம்புட்டையும் அவரே செய்யுறாரே.. நீங்க என்ன செய்யுறீங்க..

சூப்பர்விஷன்.. முன்ன பின்ன நான் பார்த்துனே இருக்கணும்.. இல்லாட்டி சொதப்பிடுவாரு..

ஒரு நிமிஷம் இருங்க, வரேன்..

எங்க..

எங்க வூட்டுகார்ட்ட நாலு வார்த்தை கேக்கணும்..

ஏன்..?

எப்ப என்ன வேலை சொன்னாலும்.. விசுவ பாரு..  வூட்டுல ஒண்ணுமே செய்யுறது இல்ல.. எப்ப பாரு பேஸ் புக்.. பிளாக் ன்னு இருக்காரு..  என்னை மட்டும் ஏன் இப்படி வேலை வாங்குறேன்னு புலம்புறாரு.

அதுதான் எனக்கு புரியல.. இம்புட்டு வேலை வாங்கியும்.. அவருக்கு எப்படி நேரம் இருக்கு? பேசாம.. இவரை வீடு வீடா போய் அம்புட்டு வூட்டையும் சுத்தம் பண்ணிட்டு வாங்கன்னு அனுப்பிடலாம்னு இருக்கேன்.

பின்குறிப்பு :

சில நாட்களாகவே நிறைய பேர்.. என்ன விசு. உனக்கு எப்படி இம்புட்டு நேரம் கிடைக்குதுன்னு புலம்பல்..

ஒன்னும் இல்லீங்க.. Its called Priorities. ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்குள் பிடித்த ஒரு விஷயம் இருக்கும். அதை செய்ய எப்படியாவது நேரத்தை ஒதுக்கி விடுவான் . எழுதுவது எனக்கு பிடிக்கும். அதற்கு  தடையாக எது வந்தாலும் அந்த தடையை முதலில் நிவர்த்தி செய்துவிட்டு, மீண்டும் அந்த தடை வராமல் பார்த்து கொள்வேன்.

நேரம் கிடைப்பதற்கு இன்னொரு காரியம். சினிமாக்களில் நேரத்தை செலவிடமாட்டேன். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு.. அதுவும் ராசாத்திகளோடு  சென்று ... ஒரு குறட்டை விட்டு தூக்கம்.

2 கருத்துகள்:

  1. ஹாஹாஹா

    அதானே விசு எங்க சோம்பேறியானார்?!!!!

    உண்மைதான் நேர மேலாண்மை என்பது நம் கடமைகளை, விருப்பங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரிப்பது..

    பதிலளிநீக்கு
  2. மிகவும் ரசித்துப் படித்தேன், விசு அவர்களே! ஆம், Priorities - சூப்பராக சொன்னீங்க! :) 😊

    பதிலளிநீக்கு