செவ்வாய், 23 மே, 2017

உல்லாச பறவைகள்...

என்னடியமா? 12 ம் வகுப்பு கடைசி ரெண்டுவாரம்.. நீ புக்ஸ தொட்டே நான் பாக்கலையே... இன்னும் ஸ்கூல் முடியல ராசாத்தி..

புலம்பி கொண்டே ஆரம்பித்தேன் ..

எனக்கு இன்னைக்கு நேரம் இல்ல.. சாயங்காலம் வந்து பேசுறேன் ..

பை டாடி..

அடித்து பிடித்து கிளம்பினாள்..

ட்ரைவ் சேப் ...

என்று சொல்லி 5 நிமிடமாகவில்லை..

டாடி.. ஒரு முக்கியமான விஷயம் மறந்துட்டேன்...

ஏதாவது பரீட்சையா? வயித்துல நெருப்பை  கொட்டாத மகள்..

வெயிட்.. 9  மணிக்கு ஸ்கூலுக்கு போன் பண்ணி .. நான் இன்னைக்கு வர மாட்டனேனு சொல்லிடுங்க..

மகள்.. நீ அப்ப ஸ்கூலுக்கு போகலையா..?

நோ..

காலையில் எழுந்து அடிச்சி பிடிச்சி எங்க போற...?

டிஸ்னி லேண்ட்..

சொல்லவே இல்லையே..

அம்மாட்ட சொல்லிட்டேன்..

ஓ.. சாமியே வரம் கொடுத்தாச்சே.. நம்ம பூஜாரி தானே...

ஜாக்கிரதையா இரு, ராசாத்தி...

ஓகே..

வெயிட் .. அம்மாட்ட காசு வாங்கிக்கினீய?

மறந்துட்டேன்.. அவங்களும் வேலைக்கு போய்ட்டாங்க..

பணத்துக்கு என்ன பண்ணுவ?

டோன்ட் ஓரி .. உங்க க்ரெடிட் கார்ட் எடுத்துனு வந்துட்டேன்...

எப்ப வருவ...?

நாளைக்கு..

நாளைக்கா? நோ..

ஜஸ்ட் கிட்டிங் ... டாடி.. பனிரெண்டரைக்கு...

நாளைக்கு தான்..

இல்ல டாடி.. டிஸ்னி முடிஞ்சிட்டு நாங்க எல்லாரும் சாப்பிட்டு போறோம்..

நீங்க எல்லாரும்னா யாரு..

மொத்த 12  வகுப்பும்...

ஏழரை போல் இளையவளை  அழைத்து கொண்டு...பள்ளிக்கு போகும் போது..

இன்னைக்கு அவ கிட்டத்தட்ட 200  டாலர் செலவு வச்சி இருக்கா...என்
 இருநூறு டாலரை .. காசா கொடுக்குறீங்களா? இல்லை ஏதாவது வாங்கி தர போறீங்களா?

என்ன சொல்ற? அது ஸ்கூல் ப்ரோக்ராம்..நாளைக்கு நீ கூட 12  வருவ.  அப்ப யார் செலவு பண்றது?

இந்த நாளைக்கு கதை எல்லாம் வேணாம்.. சரி விடுங்க.. 200  டாலர் வேணாம்.. மதியம் வந்து சாப்பாட்டுக்கு எங்கேயாவது கூட்டின்னு போங்க..

சரி.. ஹெட்டுக்கு வந்தது ஹெல்மட்டோட போச்சினு சந்தோஷத்தில்..
பள்ளியை அடைந்தேன். ஒட்டு மொத்த பார்க்கிங்கும் காலியாக இருந்தது.

என்ன ராசாத்தி.. இப்படி இருக்கு..

டாடி.. இங்கே பார்க் பண்றவங்க எல்லாம் 12 வது படிக்கிறவங்க.. அவங்க எல்லாரும் தான் டிஸ்னி போய்ட்டாங்களே..

சரி.. நீ கிளம்பு..

மறந்துடாதீங்க.. லன்ச்.. மறந்தா.. 200  டாலர்..

தொலைபேசியில் அழைப்பதற்கு பதில் நேராகவே சொல்லிவிடலாம் என்று நினைத்து , பள்ளி அலுவலகத்தில் நுழைந்தால் ...

12  ஸ்டாண்டர்ட்.. பர்சனல் ரீசன்ஸ்..

என்று அவர்களே சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள்.

வெளியே வந்து இன்னொருவரிடம் விசாரிக்கையில்.. இது வருடாவருடம் நடக்கும் நிகழ்ச்சி. பள்ளியின்  இறுதி ஆண்டில்.. கடைசி ரெண்டு வாரம்.. இப்படி தான்.. இருப்பார்கள்..

பனிரெண்டு வருடம் பள்ளி வீட்டுப்பாடம்.. அது இதுன்னு இருந்தாங்க இல்ல.. அதனால் கடைசியா பள்ளியை விட்டு பிரியும் போது சந்தோசமா போகணும்.. அது தான்.

அட பாவிகளா... நான் படிக்கும் போது எங்க பள்ளியில் கடைசி ரெண்டு வாரம் தானே.. எண்ணை கூட ஊத்தாம தாளிப்பீங்க..

என்று நொந்து கொண்டே வரும் போது ...இந்த வருடத்திற்கான பள்ளி புத்தகம் வந்து இருக்கின்றது, என்று ஒரு பலகை சொல்ல..

அதுக்கும் 150  டாலர் அழுது  இருக்கேனே என்று சொல்லி கொண்டே ஒரு காப்பி பெற்று கொண்டேன்  கொண்டேன்..

ஆபிசுக்கு கொஞ்சம் லேட் தான் இருந்தாலும்.. ஒரு சராசரி மனிதன் என்னுள் நுழைந்து ஆபிஸ் எல்லாம் இருக்கட்டும்.. நீ முதலில் ராசாத்திங்க புத்தகத்தை பிரட்டி பார் என்று சொல்ல...

கிட்ட தட்ட.. 400  பக்கம்.. இதுல இவளுகள எங்கே தேடுவேன்னு யோசித்து..சரி விளையாட்டு பக்கத்தில் கண்டிப்பா இருப்பாங்கன்னு  தேடி போய் பார்த்தேன்...


செலவு பண்ண செலவு  பண்ண போற அம்புட்டு பணத்துக்கும் ஒரு திருப்தி ...அங்கே இருந்த ஒரு கேள்வி பதில்..

What is your Best Match Memory :
Being able to play with my Sister...
இந்திய இலங்கை கூட்டு தயாரிப்புகள் எது என்று நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்..

பின் குறிப்பு :

சாயங்காலம் போன் ..

டாடி.. நான் வர வரைக்கும் முழிக்க வேணா..

சரி..

எனக்கு ஒரு உதவி பண்ணுங்க..

என்ன..

காலையில் நீங்க வேலைக்கு போகும் போது என்ன எழுப்பி விட்டு போங்க..

ஏன்..

ஹாலிவுட்  பாக்க போறோம்..

ஹாலிவுடா.. சொல்லவே இல்லை..

திரும்பவும் திரும்பவும் சொல்லவே இல்லைனு சொல்லாதீங்க.. அம்மாட்ட சொல்லிட்டேன்..

குட் நைட்..


7 கருத்துகள்:

  1. //சாமியே வரம் கொடுத்தாச்சே.. நம்ம பூஜாரி தானே///

    எந்த சாமியுமே பூசாரிய மதிக்கிறதுல்லண்ணா.

    பதிலளிநீக்கு
  2. இந்திய இலங்கை கூட்டு தயாரிப்பை நான் சொல்லிட்டேன்
    எங்கேன்னு கேக்குறீங்களா?!
    அண்ணிக்கிட்ட

    பதிலளிநீக்கு
  3. எங்க வீடு போலத்தான்
    உங்க வீடும் போல
    இரண்டு பெண்கள் மட்டும் என்பதில்
    மட்டும் இல்லை

    அவர்களது ஒவ்வொரு செயலையும்
    ஆர்வமாய் இரசித்துமகிழ்வதில் மட்டும் இல்லை
    இன்னும் வீட்டு நிர்வாகத்தில்
    தேவையற்ற அதிகாரத்தை
    வைத்துக் கொண்டு
    அவஸ்தைப்படாமல் இருப்பதிலும்
    (அப்படி இருந்தால் எப்போதும்
    தலைக்கு வந்தது ஹெல்மெட்டோடப்
    போகும்தானே )

    மனம்கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹஹ....ரசனை...

    உங்கள் ராசாத்திகளைக் கண்டோமே.....

    நம் தலைமுறையின் இளம் வயது..மட்டுமில்லை..இப்போதைய தலைமுறையும் ...இங்கு 12ல் லொல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்....பெற்றோரும்தான்....

    இளம் வயது...லேட் தெம் என்ஜாய்...அவர்கள் உல்லாசப்பரவைகளாய்....பறக்கட்டு ம்...வாழ்வில் பல உயரங்களைத் தொடட்டும்...வாழ்த்துகிறோம் மனதார!!!!!

    பதிலளிநீக்கு
  5. எப்போதும் சிரிப்பும் மகிழ்ச்சி கிண்டல். அருமையான கலகல குடும்பம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பரே.. அணைத்து குடும்பத்திலும் வரும் பிரச்சனை சிறு சிறு வாதங்கள் அனைத்தும் இங்கே உண்டு.. அவைகளை உப்பை போல் அளவோடு நிறுத்தி கொள்ள நாற்று கொண்டோம்..

      நீக்கு