செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

முடவனின் கொம்புத்தேன்....

என்ன விசு? இந்த காவேரி ஆற்று படுகையில் மீத்தேன் எடுப்பதை பற்றி உன் அபிப்ராயம் என்ன?

தேவை இல்லா கேள்வியை கேட்டான் நண்பன் பாணி...

பாணி, என்னத்த சொல்ல இருக்கு?
நிதானமா யோசித்து சட்டு புட்டுன்னு சொல்லு..

எடுக்கலாமா, வேண்டாமா? ஒரே வார்த்தை ப்ளீஸ்..

பாணி.. இது நிதானமா யோசித்து செய்ய வேண்டிய வேலை. சட்டுபுட்டுனு சொல்ல முடியாது?

சரி.. நிதானமா யோசித்து சட்டு புட்டுன்னு பதிலை சொல்லுன்னு தன்
 பாணியில் குழப்பி விட்டு கிளம்பினான், தண்டபாணி.


காவேரி படுகையில்  மீத்தேன்...?

காவேரி படுகை.. என்னை பொறுத்தவரை தமிழகத்தின் அடிவயிறு. அதில் அடிக்கலாமா? அந்த வழியை தான் நம்மால் தாங்கி கொள்ள முடியுமா? அதனால் என்ன பயன்?

ஏற்கனவே வருட கணக்கில் மணல் கொள்ளையால் ஆறுகள் வறண்டு  ( நான் ஒரு போதும் காவேரி நீரை கர்நாடகா தரவில்லை என்று குறை கூற மாட்டேன்) போய் நஞ்சை நிலங்கள் தரிசாக மாறி கொண்டு  இருக்கின்றன.

இந்த பகல் கொள்ளையின் நிமித்தம் இன்னும் ஐந்து வருடங்களுக்குள் இந்த நிலம் மொத்தமாக தரிசாக மாறும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

சரி, தரிசாகும் நிலத்தில் இருந்து மீத்தேனையாவது எடுத்து பிழைத்து கொள்ளலாமே?

நல்ல கேள்வி..

இந்த நிலம் தரிசாகுவது என்பது முற்றிலும் உண்மை. இருந்தாலும் மனதில் ஒரு நப்பாசை. அடுத்த சில வருடங்களுக்குள் தமிழகத்தில் யாராவது ஒரு நல்ல பொறுப்பான அரசியல்வாதி வந்து ஆறுகளை தூர் வார்த்து மழை  நீரை பாதுகாத்து இந்நிலம் மீண்டும் நஞ்சையாக செய்வாரோ என்ற நப்பாசை.

அதனால் சற்று பொறுக்கலாம்.

முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படலாமா? தமிழ் நாட்டின் அரசியலில் இப்படி ஒருவர் வர முடியுமா?

நல்ல கேள்வி.

சரி.. இப்படி நிலம் தரங்கெட்டு தரிசாக போவதை விட மீத்தேன் எடுத்து இந்தியாவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தலாமே..

இங்கே தான் மீத்தேன் எடுக்கும் வாதம் அடிவாங்குகிறது.

எந்த ஒரு கனிம வளத்தினால்  - இந்தியாவின்  மக்கள் பயனடைந்தார்கள் ?

மணல் கொள்ளை.. யார்  பயனடைந்தார்கள் ?
குவாரி - மலை கொள்ளை யார்  பயனடைந்தார்கள் ?
நிலக்கரி கொள்ளை யார்  பயனடைந்தார்கள் ?
2 G (காற்றும் நாடு வளம் தானே) யார்  பயனடைந்தார்கள் ?
கருவறையில் இருந்து கல்லறை வரை எல்லாவற்றிலும் ஊழல்...

இப்படி அடிக்கி கொண்டே போகலாம்.

இந்த மீத்தேன் எடுப்பதில் மூலம் லட்சக்கணக்கான கோடிகள்  லாபம் வரும் என்பது உண்மை தான். ஆனால் அது ஒருக்காலும் அந்த நிலத்தை பறி கொடுத்த விவசாயிகளுக்கோ .. அல்லது தமிழர்களுக்கோ போகாது.

அம்பானிகளும் - அடானிகளும் - மல்லையாக்களும்- மாறன்களும் - கரன்களும்  ஒரு வட்ட மேசையில் அமர்ந்து கேடு கெட்ட அரசியவாதிகளுக்கு பிச்சை ஊழல் கொடுத்து  பெற்ற தாயை விலைக்கு பேசி .. ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்து கொள்வார்கள்.

மக்களுக்கு ஒரு பெரிய பூஜ்யம்.

இந்த மீத்தேன் எடுப்பதால் சராசரி தமிழனுக்கோ இந்தியனுக்கோ ஒரு நயா பைசா நன்மை வராது. அனைத்தும் சில வியாபாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான்.

அதற்க்கு பதிலாக.. நிலம் தரிசானாலும், நாளை மழை வரும்.. விவசாயம் செய்யலாம் என்ற கனவோடு இருப்பதே நலம்.

மற்றும்...

இதில் விபத்து என்று ஏற்பட்டால்.. வாளியை வைத்தா அணைக்க முடியும்?

கல்யாண மண்டபத்திலும் சரி.. ஆரம்ப பள்ளியிலும் சரி நடக்கும் தீவிபத்தையே தவிர்க்க இயலாமல் தடுக்க இயலாமல் பிள்ளைகளை பறி கொடுத்த நம்மால், இந்த விபத்தை சமாளிக்க முடியுமா?

விவசாயமும் இல்லை.. மீத்தேனும் இல்லை .. விவசாயி குடும்பம் எப்படி பிழைக்கும் ...?

இப்படி செய்யலாமே..

இந்த மீத்தேனுக்காக நிலம் தரும் விவசாயி ஒவ்வொருவரையும் அந்த மீத்தேன் நிறுவனத்தின் பங்குதாளராகுங்கள். நிலத்தின் கீழே நீங்கள் மீத்தேன் எடுத்து கொள்ளுங்கள். மேலே அவன் விவசாயம் செய்யட்டும். ஒரு வேளை, விவசாயம் செய்ய முடியாவிடில், மீத்தேன் நிறுவனத்தின் இலாபத்தில் பங்குதாரர் என்ற முறையில் அவனுக்கு பணம் கிட்டும்.

எப்படி ? செய்வீர்களா? செய்வீர்களா?



2 கருத்துகள்:

  1. இது நடக்குமா? என்றாலும் மீத்தேனை விட நீங்கள் முதலில் சொல்லியிருப்பது போல் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும்! அதுதான் நல்லது என்றே தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு