ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

கோபத்தில் மனைவி கத்தியை கையில் எடுத்தால்….

நீள வார இறுதி... திங்களுக்காக ஒரு மீள் பதிவு...

கணவன்மார்களே  (“ஜாக்கிரதை” – வெண்ணிறாடை மூர்த்தி ஸ்டைல்). எப்போதுமே வீட்டில் பேச்சு- வாக்குவாதம் என்று   வரும் போது உடனடியாக சமையல் அறையில் இருந்து வெளியே வந்து விடுவது புத்திசாலித்தனம். இதனால் பல நன்மைகள் உண்டு.
இந்த மாதிரி சண்டை சச்சரவுகள் வரும் போது, கணவன்மார்கள் உடனடியாக தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம், இது “ஓர் முனை போராட்டம்”. நாம் என்ன செய்தாலும் – சொல்லினாலும் இந்த வாக்குவாதத்தில் வெற்றி பெற முடியாது என்று அறிந்த கொண்டீர்கள் என்றால், இதனால் வரும் “நாளைய பாதிப்பு” சிறுக வாய்ப்புள்ளது.
அதை விட்டு விட்டு, எதோ ஒரு அசட்டு தைரியத்தில் நான் தான் வெற்றி பெறுகிறேன் என்று நினைத்தால் அது தான் தங்களின் முதல் தோல்வி.
“நீ சொல்வது தான் சரி என்று கூருபவனே வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஆண்”.
சரி இப்போது தலைப்பிற்கு வருவோம்.  வாக்குவாதம் ஆரம்பித்து விட்டது. தெரிந்தோ தெரியாமலோ சமையல் அறையில் ஆரம்பித்துவிட்டது. மனைவி கோபத்தோடு கையில் கத்தி எடுத்து விட்டாள். இப்போது என்ன செய்வது?
முதல் காரியம் பதர கூடாது. கணவன் மார்களே ஒன்றை மட்டும் நினைவு வைத்து கொள்ளுங்கள். என்னதான் மனைவி கோபபட்டாலும், என்ன தான் கூச்சல் போட்டாலும், மனைவியும் ஒரு பெண் தானே. பெண்களுக்கே உரித்தான ” மென்மை, பாசம், பரிவு” அவர்களுக்கும் இருக்கும் அல்லவா? அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
தங்கள் மனைவி கோவத்தில் கத்தியை கையில் எடுத்தால், நீங்கள் உடனே செய்ய வேண்டிய காரியம்.
தாங்கள் அசைவ உணவு பிரியராக இருந்தால், உடனே உங்கள் ப்ரிட்ஜ்க்கு சென்று உள்ளே இருந்து ஒரு கோழி எடுத்து வாருங்கள். தம் மனைவி அதை பார்த்தவுடனே, பெண்களுக்கே உள்ள “அன்பு -பராமரிப்பு” குணத்தினால் சண்டையெல்லாம் மறந்து, தமக்கு, “கோழி கரி குருமா” வைத்து தருவார்கள். சைவ உணவு  பிரியர்கள் கோழிக்கு பதிலாக உருளை கிழங்கு எடுத்து வந்தால், அவர்களுக்கு அன்று புதிதாக செய்யபட்ட “சிப்ஸ்” கிடைக்கும்.
 கோழி- உருளை கிழங்கு இல்லாத நேரத்தில் ஒரு “ஆப்பிள் அல்ல மாம்பழம்” இருந்தால் அதை அவர்களிடம் கொடுங்கள். அதன் தோலைசீவி உங்களுக்கு பழத்தை வெட்டி தருவார்கள்.
நினைவு கொள்ளுங்கள். தங்கள் மனைவியும் ஒரு பெண் தான். என்னதான் அவள் கோபபட்டாலும், இயற்கை அவளுக்கு அளித்த “மென்மை- அன்பு-பராமரிப்பு-விருந்தோம்பலை” அவளால் மறக்க, எதிர்க்க இயலாது.
நீங்கள் சரியாக, செயல் பட்டால்… உங்களுக்கு “கோழி கரி குருமா” அல்ல “சிப்ஸ்”. நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் “திட்டும், வெட்டும்” தான் மிச்சம்.
மறந்து விடாதீர்கள்,  அவளும் பெண் தான்…

3 கருத்துகள்:

  1. நீங்கள் சரியாக, செயல் பட்டால்… உங்களுக்கு “கோழி கரி குருமா” அல்ல “சிப்ஸ்”. நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் “திட்டும், வெட்டும்” தான் மிச்சம்.//
    கத்திக்கு நிச்சயம் ஆண்கள் அனைவரும்
    எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய
    யுக்தி
    சொல்லிச் சென்ற விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  2. BRO THERE IS NO USE IN JUST TAKING KOZHI OR POTATO FROM THE FRIDGE
    INSTEAD YOU SHOULD HELP HER IN KITCHEN WORK...
    UNDERSTAND

    பதிலளிநீக்கு
  3. அது சரி விசு காய், கோழிக்குப் பதில் நீங்கள் கேடயத்தைத் தூக்கினால், கேரளத்துக் களரி போல ஆகிடும்ல!!! ஜஸ்ட் இமாஜின் பண்ணிப் பார்த்து சிரித்து.....

    பதிலளிநீக்கு