சனி, 20 ஆகஸ்ட், 2016

ரியோ டு டோக்கியோ .....! எனக்கு வர கோவத்துக்கு .....!

இந்த முட்டாள்களை திருத்தவே முடியாதா?


இன்று காலையில் படித்த செய்தி ...

//பி.வி.சிந்துக்கு 5 கோடி பரிசு - தெலுங்கானா அரசு அறிவிப்பு .
ரூ.2 கோடி பரிசு : டில்லி அரசு அறிவிப்பு .
சிந்துவுக்கு ரூ3 கோடி பரிசு, வீடு, அரசு பணி-ஆந்திரா அரசு அறிவிப்பு //


இந்தியாவிற்கு வெள்ளி பெற்று தந்த சிந்துவும் சரி அல்ல வெண்கலம் பெற்ற சாக்ஷியும் சரி.... அவர்களின் விடா முயற்சியினால் பதக்கத்தை அடைந்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே.

இவர்கள் இருவரும் பதக்கத்தை பெற்றவுடன் நாம் அரசாங்கம் மற்றும் பல துறையினர் போட்டி போட்டு கொண்டு பரிசு அளிக்கின்றனர்.

டேய்.. ஆஃப்ரண்டிஸ்களா ..

உங்களை திருத்தவே முடியாதா ?



இந்த மாதிரி காசை கொடுத்து செல்பி எடுக்குறத விட்டுட்டு, அடுத்த ஒலிம்பிக்ஸ் போகும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ஒழுங்கா ஏதாவது பண்ணுங்கடா.. மர மண்டை புடிச்ச சனியங்களா.

கொஞ்சம் யோசித்து பாருங்க...

டூட்டி சந்த் என்ற இருபது வயது பெண். ஒரிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். அடிப்படை வசதி என்று ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து தன்  சொந்த முயற்சியே பயிற்சி எடுத்து கொண்டு ஒலிம்பிக் பந்தயத்தில் 100 மீட்டர் ஓடுவதற்கு தகுதியானார்.


இவர் ஒரிசாவில் இருந்து ஹைதெராபாத் சென்று அங்கு இருந்து  விமானத்தில் ரியோ சென்றார். 36 மணி நேர பயணம்.

முதலாவதாக.. இந்த 36 மணி நேர பயணத்தில் இவருக்கு சாதாரண வகுப்பு டிக்கட் எடுக்க பட்டு இருந்தது. விமான இருக்கையில் விடுமுறைக்கு சென்று வரும் போதே ... பயணம் முடிந்தவுடன் " சனி கிழமை சாவுற பீலிங் (ஜெட் லெக் என்று படிக்கவும்) . பாவம் இந்த வீராங்கனை... 36 மணி நேரம் இருக்கையில் அமர்ந்து கொண்டு ... பின்னர் அங்கே போட்டி போட வேண்டும்.

படித்தவுடன் கோவம் வருதா? வெயிட் எ நிமிட்.. மேலே படித்து விட்டு காரி துப்புங்கள்.

இதே விமானத்தில் இந்த வீராங்கனையோடு ரியோ ஒலிம்பிக் சென்ற அதிகாரிகள் .மற்றும் இந்த வீராங்கனையை ஊக்குவிக்க வைப்பாட்டியோடு சென்ற அரசியல்வாதிகள், அனைவருக்கும் முதல் வகுப்பு. 36 மணி நேரம் அந்த வீராங்கனை அங்கே உறக்கமில்லாமல் போட்டியை பற்றி யோசித்து கொண்டு இருக்கையில்...

இந்த சனியங்களுக்கு இங்கே... அன்  லிமிடேட் சோம பானம், ஆடம்பரமான உணவு.. மற்றும், குடித்தவுடன் சோர்ந்து விடுவார்கள் அல்லவா. அதனால் படுக்கையாக மாறும் இருக்கை..

ஒரே நிமிடம் நம்மை அந்த வீராங்கனையின் இடத்தில வைத்து பாருங்கள்.
 என்ன ஒரு வயித்தெரிச்சல். இந்த சனியங்களுக்கு ஒரு மனசாட்சி இல்ல?

சரி.. நீங்க தான் வெக்கம் சூடு சொரணை இல்லாத ஜென்மங்கள். அடுத்தவன் பணத்தில் அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். உங்களை திருத்த முடியாது.

அட்லீஸ்ட்.. அந்த பிள்ளைக்கு வசதியா இருக்கிற மாதிரி ஒரு சீட் வாங்கி கொடுத்துட்டு உங்க திருட்ட நடத்த வேண்டியது தானே.

இது ஒரு கதை..

அடுத்த கதை..

கூட்டம் கூட்டமா.. நம்ம அல்லக்கைகள் .. நம்ம செலுத்திய வரிப்பணத்தில் வீரர்களை உற்சாகப்படுத்த ரியோ போறாங்களாம்.

டேய்.. எனக்கு வர கோவத்துக்கு..

அந்த ஜிம்னாஸ்டிக் பொண்ணு தீபா ... பாவம்.. அடிப்படை வசதி ஒன்னும் இல்லாம.. ஓடி வந்து கை வச்சி வானத்திலே குட்டி கரணம் போட்டு "கரணம் தப்பினா மரணம்ன்னு " எப்படி பயிற்சி எடுத்திச்சி தெரியுமா?

அவங்க அப்பாவுடைய பழுது அடைந்த ஸ்கூட்டரை நிக்க வைச்சி ஓடி  வந்து அந்த சீட்டு மேலே கை வைச்சி ...குதிச்சி..

இப்ப ஊக்கு விக்க போற நீங்க அப்ப எங்கே ஆணிய புடுங்கினு இருந்தீங்க?

இன்னும் கோவம் வரலியா ?  மேலே படியுங்க...

இந்த 100 மீட்டர் பந்தயத்துக்கு வந்த வீராங்கனை இடத்துல உங்கள வைச்சிக்குங்க..  இப்ப படியுங்க..

36 மணி நேரம் ... முடிந்து.. கை கால் வலியோடு.. போட்டியை நினைச்சினே விமானத்தை விட்டு இறங்கும் போது.. அருகில் இருந்த அல்லக்கைகள்..

36 மணி நேரம் எப்படி போச்சினே தெரியலை இல்ல..? என்னா தான் சொல்லு பாரின் சரக்கே சரக்கு தான்..

அடுத்த ஒலிம்பிக்ஸ்க்கு  ஒரு ஐம்பது மணி நேரம் எடுக்குற மாதிரியான விமானத்துல டிக்கட் போட சொல்லணும் ...

என்ற நினைப்போடு...

அப்படியே வாங்க.. ஒலிம்பிக் ஸ்டேடியம்..

100 மீட்டர்.. துவக்க கோட்டில்.. அவள் நின்று கொண்டு இருக்கையில்! நீண்ட பயணம் .. சோர்வு.. உறக்கமின்மை.. என்று பல சோதனைகள்.. இருந்தாலும்.. நாட்டிற்காகவும்.. மற்றும்.. பெற்றோர்கள் செய்த தியாகத்திற்காகவும் கஷ்டத்தையெல்லாம் மறந்து ஓட தயாராகும் நேரத்தில்...மனதில் ஒரு சுமை.

அய்யகோ.. இதை பார்க்க .. என்னை பெற்று வளர்த்த என் பெற்றோர்கள் இங்கே இல்லையே..இதை ரசிக்க என்னை தயார் செய்த கோச் இங்கே இல்லையே.. சரி.. தொலைக்காட்சியிலாவது பார்ப்பார்கள் என்று நம்புவோம் என்று நினைக்கையில் இமை ஓரத்தில் ஒரு காட்சி..

பார்வையாளர்கள் அமரும் இடத்தில்.. இந்த வீராங்கனையை ஊக்குவிக்க வந்த அல்லக்கை சனியன்கள்.. ஆளுக்கொரு கேமராவுடன் செல்பி எடுத்து கொண்டு...

ஆன் யுவர் மார்க்..

அறிவிப்பாளரின் சத்தம் கேட்க... இவள் மனதிலோ ... இந்த சனியன்கள் இங்கேயும் வந்து இந்த நேரத்திலும் என் மனதை நோக அடிக்க வேண்டுமா? ஹோட்டலில் தங்கி ஜாலியாக இருக்க வேண்டியது தானே...

உற்சாகம் பண்ண வந்தேன்னு சொல்லிட்டு.. எங்களை ஒன்னும் இல்லாமல் பண்ணுறாங்களே..

என்று நினைக்கையில் ....போட்டியே முடிவு  அடைந்தது.


இவ்வளவு கஷ்டத்திலேயும் யாராவது வெற்றி பெற்றால்.. உடனே அவங்களுக்கு பணத்தை தரங்களாம்.

என்னாது இன்னும் கோவம் வரலையா?

அப்ப இதை படிங்க..

இந்திய அணியின் மருத்துவ குழு தலைவராக போனது "கம்பவுண்டராம்".
அவருடைய சித்தப்பா தான் ஒலிம்பிக் சங்க தலைவராம். அதனால இந்த பதவிக்கு டாக்டர் படிப்பு எல்லாம் வேண்டாம், கம்போண்டெர் போதும்னு முடிவு பன்னங்களாம்.

இன்னும் கோவம் வரல..?

கடைசியா ...

ஆறு  வருஷம் இருக்கும்.. நம்ம ஊர் ஒலிம்பிக் சங்கத்தில் நடக்கும் அநியாயத்தை பார்த்து சர்வேதேச ஒலிம்பிக் சங்கம் இந்தியாவை "சஸ்பெண்ட் " பண்ணுச்சி. இதுக்கு காரணமா இருந்த அந்த காலத்து சங்க தலைவர் மேலே ஏக பட்ட புகார்.. ஊழல்.. பாலியல் .. சுய நலம்னு. இந்த ஒரு புறம்போக்குனால நம்ம நாடு மானமே போச்சே.

ஓ ..அவர் இப்ப எங்கேன்னு கேக்குறீங்களா ? எங்கே.. இருப்பார்.. அவருக்கும் நம்ம அரசாங்கம்... முதல்வகுப்பு டிக்கட் போட்டு .. சோம பானம் எல்லாத்தையும் வாங்கி கொடுத்து வீரர்களை ஊக்குவிக்க ரியோ அனுப்பி வைச்சு இருக்கு.

ஆனா இவரு கொஞ்சம் வித்தியாசமான  ஆளாம். மத்த   புறம் போக்குங்க மாதிரி செல்பி எடுக்கலையாம். ஆமா.. எப்ப பாரு ஒரு கையில் குடி.. இன்னொரு கையில் சிகரெட்.. (எல்லாம் நம்ம பணம்தான்... ப்ளீஸ் கோவ படுங்களேன் )

இவ்வளவு படிச்சும் பின்னூட்டத்தில் வந்து உங்க கருத்தை கோவமா சொல்லலே.. 1?

அடுத்த ஒலிம்பிக்ஸ் ஜப்பானில் நடக்குது இல்ல.. அதுக்கு வீரர்களை ஊக்கு விக்க உங்களுக்கு ஒரு டிக்கட்..

நெஞ்சு பொறுக்குதில்லையே..

9 கருத்துகள்:

  1. என்னவே காறித் துப்பச்சொல்லுதீரு. அதுக்குக் கூட இவனுவளுக்கு அருகத இல்லவே.

    பதிலளிநீக்கு
  2. தண்ணிய குடிங்க... தண்ணிய குடிங்க...

    இன்னைக்கு நியூஸ் மோடியோட கோட்டு ஏலம் போனது கின்னஸ் ரெக்கார்டாம்...
    இஸ்டார்ட் மீசிக்

    பதிலளிநீக்கு
  3. நெஞ்சு பொறுக்குதில்லையே..... காலம் காலமாக அரசியல் வியாதிகள் தான் இந்த விளையாட்டுத் துறை தலைவர்களாக இருந்து கெட்டுக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.....

    பதிலளிநீக்கு
  4. இவர்கள் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை கொடுத்து தங்கள் கடமையை கைகழுவி விடுகிறார்கள். இவர்கள் வென்றவர்களை மட்டுமே பார்க்கிறார்கள். எந்த வசதியும் இல்லாமல், பணமும் இல்லாமல் கஷ்டப்பட்டு உழைத்தும் மயிரிழையில் தோற்றவர்களுக்கு இந்த நாடு என்ன செய்தது/ செய்யப்போகிறது. இன்னும் நாலுவருடத்திற்கு நாம் பேச மாட்டோம். அடுத்த ஒலிம்பிக்கிலும் ஏதாவது கிடைக்காதா என்று நாக்கைத் தொங்கப்போட்டு தேச பக்தியோடு காத்திருப்போம். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதிலும் இல்லாமல் செவ்வாய்க்கு ராக்கட் விட்டு என்ன செய்யப் போகிறோம். கேரளாவுல முன்னால் முதல்வர் பஸ்ல போறார். பேர சொல்லி ஒரு சின்ன பாப்பா கூப்பிடுது. தமிழ்நாட்ல பேர சொல்லக் கூடாதாம். என்ன கொடும சரவணா. நமக்கு உடனடியாக வேண்டியது 'இந்தியன்கள், ரமணாக்கள்'. அதிலும் முக்கியமா தமிழ்நாட்டிற்கு. அடுத்த ஒலிம்புக்குக்கு இதெ மாதிரி தான் புலம்புவோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன்
    விஜயன்.

    பதிலளிநீக்கு
  5. ivvalavu naala nanum ungala romba nallavrnu nambirundhen. aana neenga ippadi oru desa virodhiya iruppeenganu konjamkooda edhirpakkala?

    பதிலளிநீக்கு
  6. கோபம் கொப்பளித்துக் கொண்டுதான்
    வருகிறது தங்கள் பதிவைப்படிக்கையில்

    ஆனால் எந்தத் திசை பார்த்துத் துப்புவது

    இந்தியாவில் எந்தத் திசையுமே
    துப்புவதற்கேற்றதாய் இருக்கையில்

    பதிலளிநீக்கு
  7. இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கூண்டோடு கலைக்க வேண்டும்! அரசியல் வியாதிகளை விளையாட்டை விட்டு விரட்ட வேண்டும்!

    பதிலளிநீக்கு
  8. கோபம் வரலை! இதுதானே காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது! புதுசா இருந்த கோபம் பொங்கிவிடும்...இது இப்படியே ஆகிப் போனதால் அட போங்கப்பா இவ்வளவுதானா...புதுசா இருந்தா சொல்லுங்கப்பா நு கேட்கத் தோன்றுகிறது...இதுவும் ஒருவிதமான.கோபம் தான் இல்லையா

    பதிலளிநீக்கு