வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

பட்டு வரவும்.. சாரி! பற்றும் வரவும் ....

எதை படித்தாலும் முதல்  சில வரிகளில் ஒரு புன்னகையாவது வராவிடில் என்னால் அதை தொடர்ந்து படிப்பது கஷ்டம்.

மனிதனுக்குள் அடங்கியுள்ள அதனை உணர்வுகளிலும் எனக்கு மிகவும் பிடித்தது நகைச்சுவையே! பசி  - தாகம்- கோபம்- சோகம் - காமம்  என்ற உணர்வுகள் எல்லா உயிரினங்களுக்கும் இருந்தாலும் இந்த நகைச்சுவை என்பது "Unique to Human Beings"

இந்த பதிவுலகத்தில் கூட என்னை நான் அறியாமலே புழுதி போல் தலையில் வாரி போட்டு கொண்டது  "நகைச்சுவை பதிவர்" என்ற அளிக்கபடாத பட்டம்.

சென்ற வாரம், கோபமாக உணர்ச்சி பொங்க ஒரு பதிவை போட்டேன். முதல் பின்னூட்டத்தில் நெல்லை தமிழன்..



எங்களுக்கு இரத்த  அழுத்தத்தை  தருவதில் உமக்கு என்ன சந்தோசம்?மீண்டும் நகைச்சுவை பக்கம் போங்க...

என்று அன்பு கட்டளையிட்டார்.



நகைச்சுவையை  எழுதுவதை விட படிப்பதை விரும்புபவன் அடியேன். இப்படி தேடி தேடி படித்து கொண்டு இருக்கும் போது முகநூல் நண்பர் பிரகாஷ் ராமசாமி அவர்களின் ஸ்டேட்டஸில்



//அடுத்த நண்பி Geetha Chandra..

நகைச்சுவையும், சுய எள்ளலும்.. இயல்பாய்.. இவர் மட்டும் தினப்படி எழுதினால்.. ஒரு வார விழா கொண்டாடி விடுவேன். தினம் இவரின் எழுத்தை வைத்து..

இதைப்படியுங்கள்.. உங்கள் சிரிப்புக்கு நான் கியாரண்டி//

எழுதி இருந்தார்.

வெறும் வாயிலே பபுள் விடும் எனக்கு சோப்பு தண்ணில செஞ்ச சூப் குடிச்ச மாதிரி ஆயிடிச்சு.

போய் படித்தேன். பிரகாஷ் சொன்னது 100 க்கு 100 உண்மை. என்னமா எழுதுறாங்க இந்த அம்மணி.

வாக்கியத்துக்கு வாக்கியம் காமெடிய அள்ளி வீசுறாங்க. வடிவேலுக்கு அப்புறம் காமெடின்னு சொல்லிட்டு தமிழ் திரையில் யார் யாரோ எழுதின்னு இருக்கும் போது .. .இந்த மாதிரி அம்மணி ஏன் இங்கே வந்தாங்கன்னு தெரியல.

நீங்களும் படித்து பாருங்களேன்... சிரிப்புக்கு நான் கேரண்ட்டி.

ஒரு சோற்று பானைக்கு பதம் ஒரு பானை சாதம் (பழமொழி சொன்னா ரசிக்கணும், ஆராய கூடாது. )


"என்ன பேசறாய்ய்ங்ங்ங்ங்ங்கன்னே புரியல " என்று அதி மதுரமான மதுரைத் தமிழில் சொன்னபடி புத்தகப்பையுடன் தலை தெறிக்க வீட்டுக்குள் ஓடியது வடிவேலுவோ, கஞ்சா கருப்போ இல்லை... அமெரிக்காவில் முதல் நாள் பள்ளி முடிந்து திரும்பிய என் 6 வயது மகன் ...தூக்கி வாரி போட்டது...ஆஹ்ஹா பயலுக்கு ஒரு வரி கூட இங்கிலிஷ் புரியல. அமெரிக்காவில் குடியேறும் முடிவுடன் நான் காமா சோமாவென CA CPA , Y2k, Y not 2k என்று வெந்ததையும் வேகாததையும் படிக்கும் மும்முரத்தில் பாவம் அவன் A B C D சரியாய் படித்தானா என்று கவனிக்கவில்லை... கரெக்ட்....நாய்க்கு பேரு வெச்சியே, சோறு வெக்கலியா என்று நீங்கள் கேட்பது புரிகிறது..
என்னடா இது.. அவனவன் இந்தியா ல அம்பிளிகள் கார்டை cut பண்ணினதும் I I T கோச்சிங் ல போட்டுடறானுகள் ...நாம இப்படி மதுரை ல இருந்து ஒரு மன்னாரை மன்ஹாட்டன் கூட்ட்டி வந்து மாடு மேய்க்க விட்டுவிடுவோமோ என்ற கழிவிரக்கம் மேலோங்கியது.. .... இனி இந்த அய்யனாரை ஐன்ஸ்டீன் ஆக்காமல் விடுவதில்லை என்ற என் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் இறங்கினேன்.
பயலுக்கு என்னுடைய இந்த திடீர் அவதாரம் புதிதாய் இருந்தது ... இந்தியாவில் இருந்த வரை என்னத்தையோ சோற்றைப் போட்டுவிட்டு இவள் பாட்டுக்கு T V சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாளே..."என்னாச்சு" ---நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோமென்று முழித்தான்….எனக்குள் பல விதமான கதட்டம் கலந்த புழப்பங்கள்..சாரி பதட்டம் கலந்த குழப்பங்கள்.. என் கண்முன்னே பானையாய் உருவாக ரெடி யாக என் பச்சை களிமண் உட்கார்ந்து இருக்கிறான்.... இவனை என்ன செய்யப் போகிறேன் . இன்ஜினியரிங் படிக்க வைத்து வித்யாசமாக வெடெர்னரி டாக்டர் ஆக்கலாமா , இல்லை கொண்ட கடலையில் இருந்து petrol தயாரிப்பது பற்றி பி ஹெச் டி வாங்க வைக்கலாமா..இல்லை டாக்டர் ஆ...அட அட அட என்னல்லாமோ பண்ணலாமே.. இந்த சாத்தியக்கூறுகள் என்னை உற்சாகப்படுத்த கௌண்டமணி மாதிரி குஷியாக.." I likings this ya” என்றபடி ஒண்ணாம் கிளாஸ் பாடத்தை ஆரம்பித்தேன்... wait அ மினிட் ...துப்பறியும் ஷாம்பூக்களே...கமெண்ட் லைனில் வந்து..ஒண்ணாங் கிளாஸ் சிலபஸ்ல இந்த பாடம் இல்லையே...அப்ப நாலாங் கிளஸ்ஸா, அமெரிக்கால எப்படி காக்கா கத்தும் என்றெல்லாம் வி எஸ் ராகவன் ஸ்டைலில் கேள்வி கேக்கப்டாது.. கதை சொன்னா ஆராய கூடாது..
... சோசியல் ஸ்டடிஸ் பாடத்தில் அடுத்த நாள் பரீட்சை.. கேள்வி பதில்களுக்கு அவனை தயார் படுத்தினேன்
கேள்வி: “ what did the native Americans teach the Cristian Missionaries?” பதில்:” The native Americans taught the Christian missionaries, 1)fishing, 2)weaving, 3)pottery, 4)plant the 3 sister crops, and 5)dry indigenous meat”
நான் பயலை I A S பரீட்சைக்கு தயார் செய்வது போல் .."பாரு செல்லம்..எக்ஸாமினேர் எப்பவும் புல்லெட் பாய்ண்ட்ஸுக்கு தான் மார்க் குடுப்பாங்க… நீ மறக்காம இந்த 5 பாயின்டையும் எழுதணும்”---O K .. எங்க சொல்லு பாப்போம்..என்று நிறுத்தி...” Fishing…”என்று ஒவ்வொன்றாய் சொல்ல அவனும் வாயில் இட்டலியை குதப்பியபடி ரகு தாத்தா பாணியில் "பிபிங்" என்று சொல்ல பி பி எகிறியது... இட்லியை துப்பு..சாப்பாடு இல்லைனா பரவா இல்ல ..திரும்ப 5 bullet points சொல்லு இரவெல்லாம்.. bullet points bullet points சொல்லு சொல்லு என்று பினாத்தி தூங்கினேன். தூக்கத்தில் ஒரே கலக்கம்...என்னடா ஒரு சின்ன கேள்வியை சொல்லிக் கொடுக்க இத்தனை ப்ரயத்தனப் படுகிறோமே ...இவன் வளரும் போது எப்படி இவனுக்கு trigonometry புரிய வைப்போம் என்ற கழிவிரக்கம் என்னை வாட்டியது..காலையில் திரும்பவும் அந்த பாயிண்டுகளை குளிப்பாட்டும் போது, ட்ரெஸ் செய்து விடும் போது , சாப்பாடு ஊட்டும் போது அவனுக்கு ஊட்டினேன்…..
அடுத்த வாரம் பரீட்சை பேப்பர் திருத்தி வந்தது வீட்டுக்கு,,,,அட நான் சொல்லிக் குடுத்த அந்த கேள்வி…..” what did the native Americans teach the Cristian Missionaries?””
அதன் கீழ் நம்ம பயல் எழுதிய பதில் "The native Americans taught the Cristiana Missionaries what they did not know before”…. பக்கத்தில் டீச்சர் கொடுத்த "5 out of 5" பக்கத்தில் இருந்த ஸ்மைலி என்னைப் பார்த்து சிரித்தது...
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பகவத்கீதா
***********************************************************************************
பி : கு: அப்படியே அந்த பேப்பரை பத்திரப்படுத்தி இருக்க வேண்டும். இவனை வருங்காலத்தில் மணக்க முன்வரும் பெண்ணிடம் அதைக் காட்ட.." பெண்ணே..இந்த மாதிரி "street smart " பயலுடன் நீ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...அசந்தால் தூக்கி சாப்பிட்டுவிடுவான்கள்



மேலே உள்ள பின் குறிப்பு கீதா அவர்களின் பின் குறிப்பு.  நான் தான் பின் குறிப்புன்னா மின் கம்பத்தை பாத்த நாய் போல ஓடுவனே.. இதோ என் பின் குறிப்பு :

அம்மணியும்  அடியேனை போல் கணக்கு பிள்ளைதான். கணக்கியல் படிக்கும் போதே    வாத்தியார்.. திரும்பி திரும்பி சொல்லி கொடுத்தது.. Dont be Creative!  என் கெட்ட ராசி 10 வதில் 40% கூட எட்ட முடியல அதனால அறிவியல் உன் அறிவுக்கு அப்பாற்பட்டதுன்னு சொல்லி எங்கேயாவது போய் கணக்கு எழுதி புழைச்சிக்கோன்னு யாரோ ஒரு புண்ணியவான் சொன்னதுல நான் தப்பிச்சேன்.

Geetha Ma'm.. From One kanakku pillai to another one.. " Salutes" and keep writing

5 கருத்துகள்:

  1. ஹஹஹஹ் மிகவும் ரசித்தோம் கீதாசந்த்ரா அவர்களின் எழுத்தை...செமையா எழுதறாங்க....உங்கள் பின் குறிப்பும் செம

    பதிலளிநீக்கு
  2. 'நகைச்சுவையை ரசிக்கிறவர்கள்தான் நகைச்சுவையாக எழுதவும் முடியும். (இனிப்பை விரும்பிச் சாப்பிடுபவர்தான் இனிப்பு மாஸ்டராக ஆகமுடியும் என்பதைப்போல). உங்கள் பதிவுகளில் நிறைய எழுத்துப்பிழை இருக்கும். ஆனால் அதுவும் நீங்கள் நகைச்சுவையாக எழுதுவதில் அடிபட்டுப்போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல நகைச்சுவை. கொஞ்சம் இணைப்பு சுட்டியை போடுங்க பாஸ்.
    விஜயன்

    பதிலளிநீக்கு