வியாழன், 9 ஜூன், 2016

குற்றம் புரிந்தவன்.. வாழ்க்கையில்...

நேற்று எழுதிய  "தூக்கம் போச்சிடி" யம்மா... வில்

"ஒரு வேளை.. ஒரு வேளை.. ன்னு முனவி கொண்டே தூங்க முயன்றேன்"
தூக்கம் போனதிற்கான காரணத்தை படிக்காதவர்கள் அந்த பதிவை ஒரு முறை இங்கே சொடுக்கி படித்து பின்பு இங்கே வந்து தொடருமாறு.. பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

"கெட் அவுட்" என்று மூத்தவள் வேற சொல்லிவிட்டாளே..

அடே டே..

நம்ம ரொம்ப சுயநலவாதியா மாறித்தான் இருக்கோம். இதுல என்ன விசேஷம்னா நம்ம சுயநலவாதியா மாறினத கூட அறியாம இருந்து இருக்கோமே.. என்று எண்ணி கொண்டே இருக்கையில்.. இளையவள் வந்தாள்..

ப்ளீஸ் டெல் மீ, யு டின்ட்  செ தட்...

ஒ... மூத்தவள் இவளிடம் போட்டு கொடுத்து இருக்கா போல ..

இருக்கே..மனதில் சொல்லி கொண்டே.. ஒன்றும் அறியாதவன் போல்..

மகள்..என்ன ஆச்சி.. தூங்கல?

பேச்ச  மாத்தாதீங்க..

நீங்க தண்டபாணி மாமாவை ஏமாத்திட்டு.. அதையெல்லாம் மறந்துட்டு.. கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாமல்.... ஒரு வேளை, அவர் உங்கள ஏமாத்தி இருப்பாரோன்னு யோசித்திங்கலாமே...

மனதில்.. போட்டு கொடுத்தாளா.. சின்னவ அவங்க அம்மா மாதிரி.. இப்ப ஒரு வழி பண்ணிடுவாளே..

சாரி மகள்.. ஏதோ தெரியாமல் நடந்துடிச்சி..

தெரிஞ்சி தான் நடந்துடிச்சி.. கால் ஹிம் அண்ட்  அப்பாலஜைஸ்....

இப்ப... மணி 10 கிட்ட ஆச்சி.. தூங்கி இருப்பான். நாளைக்கு சொல்றேன்.
டாடி.. அமெரிக்காவிலே சனி கிழமை 10 மணிக்கு படுக்கைக்கு போற ஒரே இந்திய குடும்பம் நம்ம தான்.. கால் ஹிம்...

பாணி..

என்ன வாத்தியாரே.. எல்லாம் ஓகே..தானே..

டேய்.. ஏன் பதறுற..

உனக்கு சனிகிழமைனா 9 மணிக்கு நடு ராத்திரி ஆச்சே.. என்ன அவசரம்..

பாணி...

சொல்லு..

எனக்கே தெரியாம ஒரு தப்பு நடந்துடிச்சி..

உனக்கே தெரியாம நடந்திருக்கு, அப்ப அதை தப்புன்னு நீ எப்படி முடிவு பண்ணுவ..?

ஒ.. ஆமா. கொஞ்சம் இடிக்குது இல்ல,   ஒரு  தப்பு நடந்துடிச்சி..

மதியம் எக்ஸ்சேஞ் பண்ணுமே. ஸ்போர்ட்ஸ் கூட்ஸ் .. ?

வாத்தியரே..அதுக்கு என்ன இப்ப?

கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு சில ஐட்டத்தை உனக்கு கொடுக்காம இங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்..

ஒ.. அதை தான் தெரியாமல் செஞ்சிட்டியே..விடு வாத்தியாரே.. இது என்ன தலை போற விஷயமா?

தலை போதோ இலையோ.. தூக்கம் போச்சி தண்டம்.

சரி விடு.. இப்பதான் பாரத்தை இறக்கி வச்சிட்ட இல்ல.. நிம்மதியா தூங்கு போ..
குட் நைட்.

அலை பேசியை அணைத்து விட்டு.. மகளை பார்த்தேன்..பேசி முடிக்கும் முன்பு மூத்தவளும் வந்து சேர்ந்தாள்..

"வி ஆர் ப்ரௌட் ஆப்  யு டாடி". இப்ப போய் நிம்மதியா தூங்குங்க..

சாரி மகழ்ஸ் .. ஐ அம் வெறி சாரி..

திஸ் டைம் இட் இஸ் ஓகே டாடி.. டோன்ட் மேக் இட் எ ஹபிட்.... குட் நைட்.

இம்முறை கொட்டாவி தானாக வந்தது.

நன்றாக தூங்கினேன்.. சூரிய வெளிச்சம் சன்னல் வழியாக தெரிய ... வார இறுதியில் அம்மணிக்கு நம்ம தானே டீ போட வேண்டும் என்று எழுகையில்...
வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

என்னடா இது.. ஞாயிறும் அதுவுமாய்.. காலையில் 6 மணிக்கே.. யாராக இருக்கும். கதவை திறந்தேன்..  தண்டபாணியும் அவனின் 14 வயது ராசாத்தியும்..

தண்டம், என்ன இவ்வளவு காலையில்.. அப்பாவும்  பொண்ணும் மீன் வாங்க பீச் பக்கம் கிளம்பிடீங்களா?

இல்ல வாத்தியாரே.. நேத்து ராத்திரி  நீ சொன்ன இல்ல... அந்த ஸ்போர்ட்ஸ்  கூட்ஸ்.. ?

அட பாவி.. அது தான் நான் மன்னிப்பு கேட்டுட்டு இன்னைக்கு எடுத்துன்னு வரேன்னு சொன்னேனே.. அவ்வளவு பொறுமை இல்லையா? இல்ல என் மேல் நம்பிக்கை இல்லையா?

இல்ல வாத்தியாரே.. எனக்கே தெரியாம ஒரு தப்பு நடந்துடிச்சி...

டேய். உனக்கே தெரியாம நட....வெயிட் எ நிமிட்.. பாணி.. நீயுமா?

அவன் சொல்லும் போதே , பாணியின் ராசாத்தி பேச ஆரம்பித்தாள்..

மாமா..இவரு கொஞ்சம் கோல்ப் திங்க்ஸ வீட்டிலே மறைச்சி வச்சிட்டாரு.. இது தெரிஞ்சவுடன் நான் ரொம்ப தப்புன்னு சத்தம்  போட்டேன்...

ஏண்டியம்மா.. இதுகெல்லாம அப்பாவை சத்தம் போடுவ ..

என்று என் மூத்தவளுக்கு கேட்கும் படி நான் சத்தமாக சொன்னேன்.

இல்ல மாமா.. திஸ் இஸ் லைக் பேக் ஸ்டெபிங்..திஸ் இஸ் வ்ராங், எவ்ரிபடி மேக்ஸ் மிஸ்டேக்ஸ். பட் அது தப்புன்னு தெரிஞ்சவுடன் அதை சரி பண்ணிடனும்.

வாத்தியாரே..நேத்து நீ போனை வைச்சவுடன்.. விசு மாமாவ அப்படி பண்ணாரு? அவரு பண்ணி   இருந்தா அவரோடவே இருக்கிற நீங்க எப்படி இந்த வேலைய பண்ணாம இருப்பீங்கன்னு போய் செக் பனா. அங்கே நான் எடுத்து வைச்சி இருந்த சாமானத்த பாத்துடா. ஒரு சத்தம்..

இவ போட்ட சத்தத்தில .. ராத்திரி ஒரு குற்ற உணர்ச்சி.. சுத்தமா தூக்கமே இல்லே..

எனக்கும் அப்படி தான் ஆச்சி பாணி.

அது சரி வாத்தியாரே .. இந்த மாதிரி தப்பு பண்ணா ஏன் தூக்கம் போது ?

குற்றம் உள்ள நெஞ்சு ..,.அம்பதிலேயும் வளையாது பாணி..
பழமொழிய சொதப்புரன்னு   நினைக்கிறேன்.. சரி இந்தா   உன் சாமான்க. எங்க நீ மறந்து வச்சிட்டு வந்தது.?

இதோ.. இந்தா..

சரி, பாக்கலாம் பாணி.

சரி...

சொல்லி  முடிக்கையில்.. பாணியின் ராசாத்தி பாணியை நோக்கி..

ஐ அம் ப்ரௌட் ஆப் யு டாடி..யு ஆர் எ குட் மேன் ...
என்று சொல்ல.. பாணியும்.. தங்க் யு என்று சொல்லிவிட்டு...

என்னை நோக்கி..

வாத்தியாரே.. என்னமோ தெரியல .. உண்மைய சொன்னவுடன் ஒரு பெரிய பளுவை இறக்கி வச்ச மாதிரி தெரியுது.. நேத்து ராத்திரி முழுக்க  தூக்கம் இல்ல.. இப்ப வீட்டில போய் நிம்மதியா தூங்க போறேன்..

ஓகே.. பாணி..

வாத்தியாரே.. கடைசியா ஒரு விஷயம்..

சொல்லு..

இன்னிக்கு எங்கேயாவது போறியா இல்லாட்டி வீட்டில் தான் இருப்பியா?

வீட்டுல தான்.ஏன்..

ஒன்னும் இல்ல.. இப்ப வீட்டுல போய் நிம்மதியா தூங்க போறேன்.. ஒரு வேளை இன்னைக்கும் தூக்கம் வராட்டி.. மறைச்சு வைச்சு இருந்த மீதி சாமானத்தையும் எடுத்துனு வந்து தரேன்.. ஓகே..

என்று உளற அவன் ராசாத்தியோ..

ஐ ஹேட் யு என்று அவன் கழுதை நோக்கி பாய்ந்தாள்

5 கருத்துகள்:

  1. அம்மாவைப் பற்றிய பதிவு படித்தபின் இதைப் படித்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். கடைசி சில பாராக்கள் உங்கள் பாணிதான் (தண்டபாணியில்லை). கொஞ்சம் எழுத்துப் பிழைகளைப் படித்துச் சரிசெய்தால் இன்னும் நன்றாக இருக்கும். கொஞ்சம் effort எடுத்துக்கோங்க. ஆனால், நடை வெகு இயல்பாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹஹஹ அதானே பார்த்தேன் பாணி அப்படிச் சொன்னதாக முடிக்காமல் எங்கேனும் விசு அப்படியெ முடித்துவிடுவாரோனு நினைச்சுக்கிட்டே வந்தேன்...ஹப்ப்பா இப்பதான் அது தண்ட"பாணி" தண்டத்தின் பாணி!!!!

    கீதா

    பதிலளிநீக்கு