வெள்ளி, 17 ஜூன், 2016

ஏடறியேன் .. எழுத்தறியேன்...

குஜராத் மாநில போக்குவரத்து அமைச்சர் சங்கர் "செலத்திரி" (தவறாக எழுத்தை உபயோக படுத்தியதற்கு மன்னிக்கவும், இது என்ன பெரிய தவறா, ஒரு எழுத்து பிழை தானே என்று என்னும் அன்பர்களே .. இந்த பதிவே எழுத்துப்பிழை பற்றியது தான்)  செளத்ரி... அவர்கள் சொந்த செலவில்  சூனியம் வைத்து கொண்டு தானாக நம்முன் ஆஜார் ஆகியுள்ளார்.

இவரின்  படிப்பு MBA . நம் அருமை பிரதமர் மோடி அவர்கள், மற்றும் கல்வி துறை அமைச்சர்  இராணி அவர்களை போலவே இவரின் படிப்பும் பொய்யே என்று நீதி மன்ற வளாகத்தில்  வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது.

இவர்   இந்த வாரம் ஒரு நடுநிலை பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்ற போது.. "Elephant " என்ற வார்த்தையை .. "Elephent " என்று எழுதி பாடம் நடத்தி உள்ளார்.

அதை இவருக்கு அதிகம் வேண்டிய இன்னொருவர் காணொளியாக  வெளியிட .. இவரோ..

அட பாவிகளே.. எனக்கு என்ன இதற்கு கூடவா ஸ்பெல்லிங்  தெரியாது?

நான் வேண்டுமென்றே தவராகே எழுதி மாணவர்கள் யாராவது கண்டு பிடிகின்றார்களா என்று சோதனை செய்தேன் ..

என்று ஒரு பதிலை தந்து இருகின்றார்.

ஒரு காலத்தில் நானும் ஆசிரியன் தானே.

 சில மாணவர்களை சமாளிப்பது கடினம். நம்ம உயிரை எடுக்க வேண்டுமென்ற .. "அவுட் ஆப்  சிலபஸில்" ஏதாவது படித்து விட்டு வந்து நம்ம கொடுமை படுத்துவான். இந்த மாதிரி நாட்களில்.. நான் ...
.
அருமையான கேள்வி.. இது தான் இன்றைக்கான வீடு பாடம். அனைவரும் .. நூலகம் சென்று இதற்கான பதிலை நாளை எடுத்து வர வேண்டும் என்று சொல்லி... சமாளித்து.. இவர்களுக்கும் முன்னே  நூலகம் சென்று பதிலை படித்து அறிந்து அடுத்த நாள் சமாளிப்பேன் (என்கிட்டயேவா!?)

ஒரு எழுத்து தானே .. இதற்கு ஒரு பதிவா? நல்ல கேள்வி..

இவர் போக்குவரத்து துறை அமைச்சர். ஒரே எழுத்தில் நம்மை பங்களூருக்கு பதிலாக மங்களூருக்கும்.. வேலூருக்கு பதிலாக மேலூருக்கும் அல்லவா அனுப்பிவிடுவார்.

ஜோக்ஸ் அப்பார்ட்..விஷயத்திற்கு வருவோம்.

இந்த மாதிரியான படிப்பு சம்பந்தமான பொய்கள் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளிடம் இல்லை. நம்மூர் அரசியல்வாதிகள் மருந்திற்கும் பள்ளி போனது இல்லை என்பதை  பெருமையாக சொல்லி கொள்வார்கள்.

காமராஜ் காலத்தில் பரவாயில்லை. இந்த காலத்தில் அனைவருக்கும் படிக்க வசதி இருக்கும் போது.. எப்படி நம் நாட்டை ஆளுபவர்கள்.. நமக்காக கோடிகணக்கான மதிப்பு கொண்ட முடிவுகளை எடுப்பவர்கள் ..தேநீர்  (மோடி பக்தர்கள் கவனிப்பிற்கு.... நான் நம்ம தற்காலிக முதல்வரை பற்றி பேசுகிறேன்)  கடை  வைத்தவர்களும்.. சினிமா கதை எழுதியவர்களும், கூத்தாடிகளும் ..  

நெஞ்சு பொறுக்குதில்லையே..

சரி.. நம்ம ஆட்களை விடுங்கள். வட இந்தியா போகலாம். எவனை பாரு ..நான்  BA . MA ... MBA ன்னு சொல்லின்னு..

சரி எங்கடா படிச்சிங்கன்னு கேட்டா, பதில் இல்ல..

 இங்கே என் சொந்த அனுபவத்தை வைத்து ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். எனக்கு இப்போது ஐம்பது வயது.

நான் 1970ல் ஒன்றாவது படித்தேன். நாற்பது ஐந்து வருடத்திற்கு முன். சென்ற வருடம் இந்தியாவிற்கு சென்ற போது ... என்னுடைய முதல் வகுப்பு தலைமை ஆசிரியரை பார்க்க சென்றேன். முதலில் அடையாளம் கண்டு பிடிக்காதவர் இன்னாரின் பிள்ளை என்றதும்,  தழுவி..

டேய்.. ரொம்ப சந்தோசம் டா.. நீ அமெரிக்காவில் இருக்கேன்னு கேள்வி பட்டேன்.. எப்படியும் இந்த பக்கம் வந்தா என்னை பார்க்க வருவேன்னு தெரியும்..

என்றார்.

இதை ஏன் இப்போது சொல்கிறேனா? விசு நீ ஒன்னாவது கூட படிக்கவில்லை என்று எந்த "அப்பரன்டிஸ்" சொன்னாலும்.. நேராக அவனை அந்த தலைமை ஆசிரியரிடம் அழைத்து செல்வேன்.

அதே போல்.. ஒன்றாவது முதல்.. முதுகலை வரை.. என்னோடு படித்தவர்கள், ஆசிரியர்கள்.. பள்ளி கல்லூரி   நிர்வாகிகள்.. நண்பர்களின் பெற்றோர்கள்.. என்று எத்தனை ஆயிரம் பேர் .. என் வாழ்வையும் படிப்பையும் அறிந்து இருப்பார்கள்.

சென்ற வருடம் என் புத்தக வெளியீட்டிற்கு வந்த நண்பர்கள் இதற்கு அத்தாட்சி. அடியேன் முதுகலை படித்து முடித்து 25 வருடத்திற்கும் மேலாகியது. நான் படித்த  அதே கல்லூரியில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இவர்களில் யாரை வேண்டுமானால் என் படிப்பை பற்றியும் .. இவர்களின் படிப்பை பற்றி என்னிடம் கேட்டாலும் சரியான பதில் கிடைக்கும்.

ஒருவன் என் படிப்பின் மேல் சந்தேகம் பட்டால்.. அவனை நேராக என் ஆசிரியர்கள் அல்லது கூட படித்தவர்களிடம் அனுப்புவேன். அப்படியும் அவர்களுக்கு சந்தேகம் தீராவிடில்.. இல்லத்திற்கு அழைத்து.. 75ல் இருந்து இன்றுவரை படித்த அனைத்து சான்றிதழையும் காண்பித்து.. அதன் நகலை அவர்களுக்கு அளித்து ..எந்த பரிசோதனைக்கும் நான் தயார் என்பேன்.  

ஆனால் நம் பிரதமும் சரி.. கல்வி துறை அமைச்சரும் சரி..  .. இப்போது சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட "செலதிரியும்" சரி.. ஏன் இப்படி செய்ய கூடாது?

ஒரு வேளை  இவர்கள் படிக்கும் போது அந்த பள்ளி - கல்லூரியில்  வேறு எந்த மாணவர்களும் படிக்கவில்லையா? அல்ல ... இந்த நிறுவனங்களில் எந்த ஒரு ஆசிரியரும் பணி புரியவில்லையா? அல்ல இவர்கள் உண்மையாகவே படிக்கவில்லையா?

மீண்டும் சொல்கிறேன்.. படிக்காதவர்கள் பதவிக்கு வருவதை நான் எதிர்ப்பவன் அல்ல. படிக்காதவன் "படித்தேன்" என்று பொய் சொல்லி வருவதை மட்டுமே எதிர்ப்பவன்.

படித்தவன் என்று சொல்லி "கூட்டணி தர்மத்தில்" நடந்த கேடுகளை நான் அறிவேன். இக்கேடுகளுக்கு காரணம் படிப்பு அல்ல .. வளர்ப்பு.

பின் குறிப்பு :

சரி..ஒரு வேளை செலத்திரி  உண்மையாகவே பிள்ளைகளை சோதிக்க இப்படி எழுதி இருந்தால், என்று உங்களில் அநேகர் கேட்பது சரியே..

சரி.. பிள்ளைகளை சோதிக்கவே அப்படி செய்தீர்கள் என்று வைத்து கொள்ளவும்.. இதை சரியாக எழுதி காட்டுங்கள் என்ற கேட்டதற்கு , "செலத்திரி " சற்றும் தயங்காமல் எழுதி காட்டினார்.

"Yelifend "

3 கருத்துகள்:

  1. கேடுகெட்ட அரசியல்வியாதிகளிடம் சிக்கி தவிக்கிறது இந்தியா!

    பதிலளிநீக்கு
  2. விசு நல்ல பதிவு. இது போன்ற அரசியல்வாதிகள் நம்மை ஆளவது என்பது காலத்தின் கோலம் . விதியாகிப் போனதோ என்று தோன்ற வைக்கிறது. இதை வேறொரு கோணத்தில்

    இந்தப் பிரச்சனை ஏன் வருகிறது என்று சற்றுக் கூர்ந்து பார்த்தால் நம் நாட்டில் நிலவும் மொழிகள், உச்சரிப்பு என்று பல சொல்லலாம். நாட்டிற்கு ஒரு பொது மொழி தேவை. அல்லது பொது மொழி என்று நம்மூரில் கொண்டு வருவது பல இடர்பாடுகளைச் சந்திக்கும் என்பதால், நாடு முழுவதுமே தங்கள் தாய் மொழியுடன் ஒரு பொது மொழியைச் சரிவர கற்க வேண்டும் என்பது முக்கியமாகிப் போனது. தற்போது ஆங்கிலம் தான் பொது மொழியாகக் கொள்ள முடியும்.

    உங்களுக்கே தெரியும் நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் ஆங்கிலம் கற்றாலும் சரிவரக் கற்காததால், தங்கள் தாய் மொழியின் உச்சரிப்பை அதில் கொண்டு வருகின்றார்கள். ஒவ்வொரு மாந்லத்தவரையும் அவர்கள் பேசும் ஆங்கிலத்தை வைத்து அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெகு எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். இங்கு உதாரணங்கள் என்னால் தர முடியும் என்றாலும் அது பிரச்சனையைக் கிளப்பும் என்பதால் தரவில்லை. மட்டுமல்ல எல்லா மாநிலங்களை விட நம் தமிழ்நாடு இந்த விஷயத்தில் ஃபார் ஃபார் பெட்டர் என்பதையும் இங்கு நாம் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

    இந்த எலிஃபெண்ட் வார்த்தை கூட அப்படி ஸ்பெல் செய்யப்பட்டதுதான். அதாவது நம் தாய் மொழியில் ஆங்கிலத்தை எப்படிச் சொல்லிப் பேசுவோமோ அப்படியே. இவர் மட்டுமல்ல பல ஆசிரியர்களின் நிலைமையும் இப்படித்தான். என் மகனுடன் படித்த பல வட இந்திய மாணவர்கள் இப்படித்தான். சிபிஎஸ்சி சிலபசில் படித்தவர்கள் மட்டுமே ஓரளவிற்குத் தேவலாம்.

    நம் நாட்டின் கல்வி முறை மாறியே ஆக வேண்டும். கல்வியின் சட்ட திட்டங்கள் மாற வேண்டும், எப்படிப்பட்ட அறிவுள்ளவர்கள் நம்மை ஆள வேண்டும் என்பதும் வேண்டும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...

    பதிலளிநீக்கு
  3. விசு நல்ல பதிவு. இது போன்ற அரசியல்வாதிகள் நம்மை ஆளவது என்பது காலத்தின் கோலம் . விதியாகிப் போனதோ என்று தோன்ற வைக்கிறது. இதை வேறொரு கோணத்தில்

    கீதா

    பதிலளிநீக்கு