வெள்ளி, 27 மே, 2016

ஒண்ணுமே தெரியாம இருக்கீங்களே.. : இனியவள் - இளையவளின் ஒப்பாரி.

உங்களுக்கு இந்தியா பத்தி எதுவுமே தெரியல டாடி...

இரண்டு வாரம் இந்தியாவிற்கு சென்று திரும்பிய என் இளைய ராசாத்தி வீம்பாக பேச்சை ஆரம்பித்தாள்....

என்னது? எனக்கு இந்தியா பத்தி எதுவும் தெரியாதா? மகளே.. கலிபோர்னியாவில், ஏன் ? அமெரிக்காவிலே யாருக்கும் இந்தியாவை பத்தி என்னை போல் தெரியாது. ஒவ்வொரு தொகுதியையும் விலாவாரியா தெரியும்.

சும்மா பேசுங்க! ஆனா உண்மைய சொல்ல போனா உங்களுக்கு இந்தியா பத்தி ஒன்னும் தெரியாது..

ஏன் அப்படி சொல்ற..?

ஓகே.. ஒருவேளை அரசியல் கொஞ்சம் தெரியும்.. தமிழில் கொஞ்சம்  எழுத தெரியும் .. கொஞ்சம் மேடை பேச்சு தெரியும் .. மத்த படி எதுவும் தெரியாது.

எனக்கு எதுவும் தெரியாதுன்னு உங்க  அம்மா மாதிரி பொதுவா சொல்ல கூடாது. என்ன தெரியாதுன்னு சரியா சொல்லணும்.

சரி, விஷயத்துக்கு நேர வரேன். உங்களுக்கு இந்திய உணவை பத்தி ஒன்னும் தெரியாது.

அட பாவி மகளே.. நான் மட்டும் கணக்கு பிள்ளையாகி இல்லாட்டி சமையல் காரன் தான்னு ஊரெல்லாம் பெருமையா சொல்லினு வரேன். நீ என் வீட்டுக்குளே இருந்தே என்னை இப்படி பேசிட்டியே.. உனக்கு இந்திய சாப்பாடு என்ன வேனும்ம்னு சொல்லு, அடுத்த அரை மணி நேரத்தில் செஞ்சி எடுத்துன்னு வரேன்.


சமையல் எல்லாம் செய்வீங்க.. ஆனால் உங்களுக்கு இந்திய இனிப்பு வகைய பத்தி ஒண்ணுமே தெரியாது.

இனிப்பா.. அது நமக்கு செய்ய வராது.. இருந்தாலும் என்ன வேணும்னு சொல்லு வாங்கி தரேன்.

இந்த முறை பெரியம்மா ஒரு இனிப்பு வாங்கி தந்தாங்க.. அந்த மாதிரி இனிப்பை நான் இது வரை சாப்பிட்டதே இல்லை.

திங்கள், 23 மே, 2016

நாக்குல தூக்கு போட்டுன்னு...

வா தண்டம்... எப்ப வந்த?

நேத்து தான் வாத்தியார..

இந்தியா ட்ரிப் எப்படி இருந்தது...

சூப்பர் வாத்தியாரே.. கிட்ட தட்ட 20 வருஷம் கழிச்சு தமிழ் நாட்டில் தேர்தல் நேரத்தில் போய் இருந்தேன், ஒரு வித்தியாசமான அனுபவம்.

சரி, வோட்ட யாருக்கு போட்ட?

நான் எங்க போட்டேன் ...எனக்கு பதிலா எந்த படுபாவியோ போட்டு இருக்கான்.

ஐயோ பாவம்..  நீ ஊருல இல்லன்னு தெரிஞ்சிட்டு உனக்காக நல்ல காரியம் செஞ்சி இருக்காங்க.. அதுக்கு நன்றியா இல்லாம...

சரி.. மீண்டும் அம்மா வந்துட்டாங்களே.. அதை பத்தி..

வாத்தியாரே.. உனக்கே தெரியும் நான் எந்த கட்சியையும் சேராதவன்..

டேய்..நீ தி மு க வா?

ஏன் அப்படி கேக்குற?

எப்பவுமே, தோத்தவங்க தான் "நான் எந்த கட்சியையும் சாராதவங்கன்னு' சொல்லுவாங்க.

இல்ல வாத்தியாரே. நான் ஊற விட்டு வந்து 20 வருஷம் ஆச்சி.. கட்சி கொடி லொட்டு லொசுக்குன்னு ஒன்னும் கிடையாது.



புதன், 18 மே, 2016

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்... சுட சுட...

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்... சுட சுட...

வாக்காள பெருமக்கழே....

தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. இதோ அதன் முடிவுகள். ஆயுத எழுத்து நேர்பட பேசு நீயா நானா என்ற நிகழ்ச்சிகளை எல்லாம் தள்ளி விட்டு .. இதோ அந்த முடிவுகள்..




தொகுத்து அளிப்பவர் ....



விசுAwesome

திங்கள், 16 மே, 2016

சாப்பாட்டை தவிர எதுக்கும் வாயை..!?

"தயவு செய்து நான் பக்கத்துல இல்லாதபோது சாப்பாட்டை தவிர எதுக்கும் வாய திறக்காதிங்க...!"

அன்பான  சர்வாதிகாரத்துடன்  அம்மணி அருகில் வந்து காதை கடித்தார்கள்.

"அதுக்கு கூட ஏன் வாயை திறக்கனும். உங்கள் ஹாஸ்பிடல் ஆபெரசன் ரூமுக்கு  வரேன். உன் கையாலே தொண்டையில் ஒரு ஓட்டை போட்டு "டுயுப்" வைச்சி  சாப்பாட்டை அரைச்சி ஊத்திடுங்க.."

"நான் எவ்வளவு சீரியஸா பேசின்னு இருக்கேன். உங்களுக்கு எல்லாமே விளையாட்டு"?

"இப்ப நான் யாரிடம் என்ன பேசிட்டேன் ...இப்படி கொந்தளிக்கிற ?"


"நீங்க என்ன தப்பா பேசினீங்கன்னு உங்களுக்கு தெரியாது ?"

"உண்மையா தெரியாது .. நீயே சொல்லு.!!!"

"ஒரு ரெண்டு காரியம் தப்பா பேசினா எது தப்புன்னு தெரியும்.. வாய திறந்தா வரது எல்லாமே தப்பா இருந்தா எப்படி தெரியும்?"

ஞாயிறு, 15 மே, 2016

தங்கமணி தங்கமணி.. வா வா நீ..

ரெண்டு வாரம் இந்தியா சென்ற அம்மணி மீண்டும் திரும்பும் நாள்.இல்லத்தில் உள்ள வாகனம் முதல் குண்டூசி வரை சீராக வைத்து பழகியவர்கள்.இந்தியா செல்லும் போதே.. வீட்டை கொஞ்சம் கவனமா பாத்துக்குங்கோன்னு ஒரு அன்பான எச்சரிக்கை விட்டு தான் சென்றார்கள்.

இரண்டு வாரம் அது இது அங்கு இங்கு இருந்தாலும் அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்னால் வாகனம் முதல் குண்டூசி வரை சீராக வைக்க முயற்சி செய்தேன்.

கிட்ட தட்ட நான்கு மணி நேரம் இடையில்லாமல் வேலை செய்து அனைத்தையும் சீர் படுத்தி விட்டு அடுத்த நாள் அம்மணி வரும் விமான நேரத்தை உறுதி செய்து விட்டு ( பல வருடங்களுக்கு முன் தவறான விமானநிலையத்தில் தவறான நேரத்தில் காத்து இருந்து அவர்களை தவற விட்டது என் நினைவில் இருந்து தவறாது)  உறங்க சென்றேன்.

இரவு 11 மணிக்கு நினைவு வந்தது.. ஐயகோ.. சென்ற வியாழன் குப்பை போடும் நாளன்று குப்பையை வெளியே வைக்க மறந்துவிட்டேனே.. இப்போது என்ன செய்வது...