சனி, 2 ஏப்ரல், 2016

ஆம்லெட்டும் அப்பளமும்...

பயணங்கள் முடிவதில்லை... ஆமாங்கோ...



இந்த பதிவை படிக்கும்முன் பயணங்கள் முடிவதில்லை .. ஆமாங்கோ என்ற தலைப்பில் வந்த என் முந்தைய பதிவை படித்து விட்டு வாருங்கள். அதை படித்து விட்டு வந்தால் இது ஒரு மாலையாக மாறும். இல்லாவிடில் இது ஒரு மொட்டாக மட்டுமே தெரியும்.


திரும்பி வர 40 பேருக்கும் டிக்கட் எடுத்துடிங்களா ?

ஏன்.. டாடி.. இந்த டிக்கட்டை பத்தியே பேசுறிங்க.. எனி ப்ராப்ளம்?

தஞ்சாவூரில் இருந்து சீர்காழிக்கு திரும்ப வருகையில் ரயிலில் நடந்த அசம்பாவிதத்தை அவளிடம் சொல்லவா முடியும் ?

இப்படி தான் அந்த பதிவு முடிந்தது..

சனி இரவு..

என்னங்க இவ்வளவு சீக்கிரம் ..

தூங்க போறேனா?

அதே தான்..

காலையில் 4 மணிக்கு எல்லாம் எழனும் இல்ல, அதுதான்?


4 மணிக்கு ஏன்?

நாளைக்கு ஞாயிறு தானே.. மூத்தவ சீயாட்டில் (Seattle) நிகழ்சிகள் முடிந்து வரா  இல்ல, விமான நிலையம் போய் கூட்டினு வரணும்.. அதுதான்.

எல்லாம் சரி.. அஞ்சு மணிக்கு வர விமானத்துக்கு ஏன் 4 மணிக்கு போறீங்க.

போற வழியில் ஒரு காபி வாங்கின்னு போக சரியா இருக்கும்.

காலையில் 4 மணிக்கு .. காலையில்  நாலு மணிக்கு நீங்க கிளம்பி போனா.. காபிக்கு மட்டும் இல்ல. நாஸ்டா, 10:30 டிப்பன், 1 மணிக்கு லஞ்ச் ,, சாயங்காலம் 3 மணிக்கு டீ எல்லாத்துக்கும் நேரம் இருக்கும்.

பொடி  வச்சி பேசுறே...புரியல..

ஆமா. இப்ப எல்லாரும் தட்டுல் தோசைய வச்சினு இருக்கீங்க தானே..  பொடி வச்சி பேச?

புரியல.



ஏங்க.. அவ விமானம் சாயங்காலம் 5 மணிக்கு.

ஒ.. அப்படியா.. நல்ல வேலை சொன்ன. இல்லாட்டி ஏன் நிலமைய பாரு.

சரி .. குட் நைட்.

இப்ப தான் சாயங்காலம்னு தெரிஞ்சது இல்ல.. அப்புறம் ஏன் சீக்கிரம் தூங்க போறீங்க?

ஆமா இல்ல..

என்று சொல்லி கொண்டே. ..கண்ணினியை திறந்து வலைப்பக்கம்  சென்றேன்.

பின்னூட்டங்கள் சில உள்ளன என்ற செய்தியை படித்து யார் என்ன சொல்லி இருப்பார்கள் என்ற ஆவலோடு படிக்க ஆரம்பித்தேன்.

அதில் ஒன்று.... கீதா அவர்களிடம் இருந்து ஒரு பின்னூட்ட்டம்..

//ஹஹஹஹ் சீர்காழி நினைப்பு... ட்ரெய்னா என்ன பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுக்க....ஃப்ளைட்டு...

சரி, திரும்ப வரும்போது என்னாச்சு..அது தனிப்பதிவா??!!!

ரசித்தேன் பதிவை..ரொம்பவே//

அதை படித்தவுடன்.. மனதோ மீண்டும் பல்லாயிரம் மைல் தாண்டி சென்றது.. அந்த ரயில் பிரயாணத்தில் திரும்ப வரும் போது .. நடந்தது என்ன? நடந்தது என்ன? ..

போகும் போது ரிச்சர்டின் தந்திரந்தினால் தஞ்சாவூரை அடைந்த நாங்கள்   பிளாட்பாரம் பக்கம் இறங்காமல் தண்டவாளம் பகுதியில் இறங்கி ரயில்  நிலையத்தின் பின் புறம் வெளியே வந்தோம்.

அங்கே இருந்து நேராக  எங்களிடம் இருந்து விலாசத்தை அடைந்து "பாட்டு ஆட்டம் போட்டி" எல்லாவற்றையும் முடித்து விட்டு அடுத்தநாள் மீண்டும் சீர்காழி பயணம். போகும் வழியில்..

ரிச்சர்ட்.. டிக்கட் எப்படி?

வரும் போது பண்ண மாதிரியே தான். ஒரு டிக்கட் போதும்.

அதை கூட ஏன் வாங்கணும் ரிச்சர்ட்?

விசு, ஒரு வேளை TTR வந்து கேட்டா, கழிவறையில் ஒருத்தர் மறைஞ்சினு இன்னொருத்தர் கொடுத்து சாமாளிக்கலாமே.

நீ கொடுத்த டிக்கட்டை தான் அவரு வாங்கி பாக்காமலே போயிட்டாரே.

ஆமா, அதுக்கு இப்ப என்ன?

டிக்கட்டே வாங்காத ?

அப்ப அவரு கேட்கும்  போது என்ன காட்டுவோம்.

வரும் போது வாங்குனுமே, அந்த டிக்கட்ட ..ஜாக்கிரதையா வைச்சு இருக்கேன் .. அதை காட்டு. அது போதும்.

விசு.. நீ எங்கேயோ போய்ட்ட.. நல்ல வேளை, இந்த டிக்கட்ட பத்திரமா வைச்ச.

இருவரும் ரயிலில் ஏற வண்டி புறப்பட்டது.

எப்படி.. ரிச்சர்ட் .. டிக்கட் வாங்கமோ போகும் போது கொஞ்சம் கூட பயம் இல்லாமல் போற?

முதலில் இப்படி தான் இருக்கும் விசு.. அப்புறம் பழகிடும் பார்.. நீ வேணும்னா பாரு.. இனிமேல்  நீ வாழ்க்கையிலே டிக்கட் வாங்கமாட்ட!

என்னமோ போ..

மாயவரம் வந்தது..

ரிச்சர்ட்.. அய்யய்யோ..

என்ன விசு?

TTR .. வரும் போது வந்தாரே .. அவரே..

ஓடு.. பாத்ரூமுக்கு.

டே .. திரும்பவும் நீ பாத்ரூமில் இருந்து டிக்கட்ட காட்டுனா  அவரு நீ தான்னு
 கண்டு பிடிச்சிட மாட்டாரா ?

சரியா சொன்ன .. இந்த முறை நான் ஒளிஞ்சிகிறேன் .நீ அதுல உக்காந்து டிக்கட்டை கொடு.

நானா? வரும் போதாவது கால்சட்டை போட்டுன்னு இருந்தோம். இப்ப முழு பேன்ட் வேற.. கஷ்டமாச்சே ..

இப்ப இதுதான் ரொம்ப முக்கியம் ... கால்சட்டையும் .. பேண்ட்டும் ..சீக்கிரம் வா..

என்று இருவரும் பாத்ரூம் ஓடினால் ..அங்கே..இருந்த இரண்டு பாத்ரூம் கதவும் உள்பக்கம் பூட்டி இருந்தது..

என்ன செய்யறது ரிச்சர்ட் .. என்று நான் கேட்கையில்..

எதிரில் TTR ..

டிக்கட்...

விசு.. டிக்கட்ட சாரிடம் கொடு..

நீ தானே வாங்கினே.. உன்னிடம் தான் இருக்கு.

இல்ல விசு.. வாங்குனது நான் தான், என் பாக்கெட்டில் ஓட்டைன்னு உன் பாக்கெட்டில் வைக்க சொன்னேன்..

இரண்டு பாக்கெட்டிலும் கையை விட்டு நான் தேட..

TTR .. ரிச்சர்டை பார்த்து..

உன்னை எங்கேயோ பாத்து இருக்கேனே ..நீ எந்த ஊர்?

பாத்து இருக்க மாட்டீங்க சார்..

சரி நீ எந்த ஊர் ?

சீர்காழி..

சீர்காழியா? உன்னை எங்கேயோ பாத்து இருக்கேனே ...உன் முகம் அப்படியே நினைவில் இருக்கு.

இருக்காது சார்.

சரி.. ரெண்டு பெரும் சேர்ந்து பொய் சொல்றீங்களா.. டிக்கட் எங்கே...

வாங்கினோம் சார்.. ஆனா  துலைச்சிட்டோம்..

பொய் சொல்றீங்களா..

இல்ல சார்.. வாங்குனோம்..

என்னோட வாங்க, என்று இருவரின் தோளையும் பிடித்த படியே அவர் இருக்கையை நோக்கி செல்ல, ரயிலோ பிரகதீஸ்வரன் கோயில் நிலையத்தை அடைந்தது.

உன் பேர் என்ன?

ரிச்சர்ட்..

உன்ன எங்கேயோ பாத்து இருக்கேனே..

இருக்காது சார்.

இல்ல, உன்ன கண்டிப்பா எங்கேயோ பார்த்து இருக்கேன்.. நல்லா  நினைவில் இருக்கு. உன் முகம் அப்படியே., நினைவில் இருக்கு..

இருக்காது சார்..

என்று ரிச்சர்ட் சொல்லும் போது.. இன்னொரு ரயில் தொழிலாளி எங்கள் பெட்டியில் வந்து ..

சார்.. வீட்ல இருந்து சாப்பாடு

என்று ஒரு அடுக்கு டிப்பனை TTRரிடம் கொடுத்து விட்டு இறங்கினார்.

ஆறு அடுக்கு டிப்பன்.. எங்களுக்கோ பசி.. அடுக்கு டிப்பனில் இருந்து வாசனை வேறு மூக்கை துளைத்தது.


சார்...

என்ன..

நாங்க சீர்காழிக்கு தான் டிக்கட் எடுத்தோம். அங்கே தான் இறங்கவேண்டும். எங்கள் பள்ளி கூடம் அங்கே தான்.

உன்னை எங்கேயோ பாத்து இருக்கேனே.. நல்ல நினவில் இருக்கே..

இருக்காது சார்.. எங்களை  அனுப்புடிங்க  சார், ப்ளீஸ்.

சீர்காழியில் அங்கே இருக்க ரயில்வே ஸ்டேசன்  மாஸ்டரிடம் உங்களை ஒப்படைக்கணும். நீங்க அவரிடம் உங்க ஸ்கூல் பத்தி சொல்லி அபராதம் கட்டிட்டு போங்க.

சார்.?

என்று நான் கேஞ்சுகையில்.. TTR அடுக்கு டிப்பனை திறக்க ஆரம்பித்தார்.

முதல் பெட்டியில்..

ஒரு ஊறுகாய் பொட்டலம். கொஞ்சம் உப்பு தூள், மடித்து வைக்க பட்ட வெத்தலை பாக்கு, .மற்றும் சுருட்டி வைக்க பட்ட இரண்டு சப்பாத்தி.

அடுத்த பெட்டியில் ..

தயிருமாய் இல்லாமல் மோர் போலவும் இல்லாமல் இரண்டும் சேர்ந்தார் போல் ஒன்று.. கடுகு வெங்காயம் கருவேப்பிலை போட்டு தாளிக்க பட்டு இருந்தது.

மூன்றாவது பெட்டியில் ..

பருப்பு ரசம்....

நான்காவதில்..

வெங்காயம் போட்ட டபுள் ஆம்லெட், மற்றும் இரண்டு அப்பளம்.

ஐந்தாவதில்..

மீன் குழம்பு .. மிளகாய் தூளின் சிவப்பு நிறத்தில் எண்ணையோடு.. சில கெளுத்தி மீன்கள்.. "என்னை பார் என் அழகை பார்" என்று என்னோடு உறவாடியது.

கடைசி பெட்டியில் "சீராக வடிக்க பட்ட சீரக சாம்பா சாதம்", மற்றும் ரசம் செய்யும்  முன்பு தனியாய எடுத்து வைக்க பட்ட கெட்டி பருப்பு.

வாயில் எச்சில் ஊற.. TTR ரிடம், சார்.. சீர்காழி வர போது.. நாங்க இறங்கனும்.

உன்னை எங்கேயோ பாத்து இருக்கேனே..

இருக்காது சார்.

இல்ல கண்டிப்பாக பார்த்து இருக்கேன்...

என்று சொல்லி கொண்டே அவர் கை கழுவ சென்றார்.

ரிச்சர்ட்.. வரும் போது நீ பாத்ரூமில் இருந்தத, அவர் கண்டுபிடிச்சுடுவார் போல் இருக்கு. அதை மத்தும் கண்டு பிடிச்சிட்டாரு.. நமக்கு தீபாவளி தான்.

கவலையே படாத விசு.. ஒரு ஐடியா.. அவர் கை கழுவிட்டு வந்தவுடனே நம்மை உடனே ரெண்டு பேரும் எழுந்து ஓடுங்கடான்னு சொல்ல வைக்கிறேன் பாரு.

எப்படி..?

இரு அவரு வரட்டும்.

"பயம்-பசி- வாசனை"! ரயில் வேகம் குறைந்து சீர்காழி நிலையத்தில் நுழைய.. TTR கை முகம் கழுவி விட்டு கை குட்டையினால் தன முகத்தை துடைத்து கொண்டே வந்து சாப்பாட்டின் எதிரில் அமர்ந்தார்.

மீண்டும் ரிச்சர்டை நோக்கி.. உன் முகத்த என்னால மறக்க முடியாது, உன்னை எங்கேயோ பாத்து இருக்கேன்..

என்று சொல்லி கொண்டே ..

சிறிது "கெட்டி பருப்பை" ருசி பார்த்த படியே சப்பாத்தியை எடுக்கையில்..

ரிச்சர்டோ..

சார்...

என்ன ..?

அவசரமா என்று சொல்லி ... தன் கையில் இரண்டு விரல்களை காட்ட.. சப்பாத்தியை மீன் குழம்பில் தொட்டு வாயில் நுழைக்க இருந்த TTR ..

அட பாவி..அது நீயே தான். ரெண்டு நாளைக்கு முன் பாத்ரூமில் உக்காந்துனே .. டிக்கட்டை கொடுத்தியே..ஐயோ . சாப்பிடும் போது..நினைவிற்கு வந்துடிச்சே..நிம்மதியா சாப்பிட உடுங்கடா. என் முகத்திலே நிக்காதிங்க.. ஒடுங்க..

என்று அலற

நாங்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு ஓடினோம்...பின்னர் வழியில்..

என்னமோ போ.. ரிச்சர்ட்.. எப்படியோ தப்பிச்சோம். இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப பசிக்குது வேற..

என்ன பசியா?

ஆமா  ரிச்சர்ட்..

கவலையே படாத. நீ இதுவரை ஆம்லெட்டும் அப்பளமும் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டு இருக்கியா?

ஆம்லெட்டும் - அப்பளமும்.. வித்தியாசமா இருக்கே. ஏன் கேக்குற..?

வா சாப்பிடலாம்னு சொல்லி அவன் பையில் இருந்து மூடி இல்லாமல் இருந்த நான்காவது அடுக்கு டிப்பன் பெட்டியை எடுக்க .. அதில் ஆம்லெட் மற்றும் அப்பளம்.

டேய்.. அவரு அப்பளமும் ஆம்லெட்டும் இல்லாத கண்டு பிடிச்சா?

ஏன் விசு ..ஆறு பேர் சாப்பிட  வேண்டிய சாப்பாடை   ஆறு அடுக்கில் எடுத்து வந்த தனியா ஆற அமர  சாப்பிடறாரே.. கண்டிப்பாக கண்டு பிடிக்க மாட்டாரு..

"டபிள்" ஆம்லெட்டை "சிங்கி"ளாக பிரித்து ஆளுக்கொரு அப்பளத்தையும் எடுத்து கொண்டு சாப்பிட்டு கொண்டே பள்ளி  கூடத்தை நோக்கி ஓடிய நாங்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டோம்.


பின் குறிப்பு :

அடுத்த நாள் பள்ளி கூடம்,

விசு .. ரிச்சர்ட்.. உங்களை தலைமை ஆசிரியர் உடனே கூட்டினு வர சொன்னார்.

ஏன்.. யாரோ ஒருத்தர் ... கோட்டும் சூட்டுமா உங்களை பாக்க வந்து இருக்காரு.

கோட்டும் .. சூட்டுமா ? யாரா இருக்கும்?

ரிச்சர்ட் உனக்கு தான் வெளிநாட்டில் நிறைய சொந்தகாரங்க இருக்காங்க.. ஆனால் அதுக்கு என்னையும் ஏன் கூப்பிடனும் ..

என்று சொல்லி கொண்டே அறையை அடைய .. அங்கே தலைமை ஆசிரியரின் எதிரில் அதே கருப்பு கோட் வெள்ளை பேண்ட்டோடு  TTR ...

அமர்ந்து இருக்க என் முகமோ பேய் அறைந்தது போல் மாறியது. (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்).


எங்கே எப்படி கண்டு பிடித்து இருப்பார் என்பதை பின்னோட்டத்தில் சொல்லுங்கள் பார்ப்போம் .

11 கருத்துகள்:

  1. செம பதிவு விசு எனக்கும் அவர்தான் பள்ளிக்கு வந்தவர் என்று தெரிந்துவிட்டது ஆனால் எப்படி என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  2. செம பதிவு விசு எனக்கும் அவர்தான் பள்ளிக்கு வந்தவர் என்று தெரிந்துவிட்டது ஆனால் எப்படி என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆங்க் இப்படித்தான் இருக்கும். அவர் நிச்சயமாக உங்களைத் தேடி வந்திருக்கமாட்டார். அவர் உங்கள் தலைமை ஆசிரியரின் நண்பராக இருக்கலாம்...வேறு விஷயமாக-உதவி கேட்டோ எதற்காகவோ ...வந்திருக்கலாம் அது உங்கள் இருவராலும் செய்யப்படுவதாக இருக்கலாம்....இப்போது உங்களைப் பார்த்ததும் டிடிஆரும் பேய் அறைந்ததைப் போல ஆகியிருப்பார். ( பேய் அறைந்த கதையை இன்னுரு நாள் சொல்லுகின்றேன்) அங்கு நடந்திருக்கும் காட்சிகள் மனதில் ஓடுகின்றது....இப்போது இது மற்றொரு பதிவு!!!!?ஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி அடுத்த பதிவு அடுத்த பதிவுன்னு என்னை உசுப்பேத்திவிட்டு என் ரகசியம் எல்லாம் வெளியே வர வச்சிடுறீங்க. முதலில் அவரு எப்படி கண்டு பிடிச்சாருன்னு கவனமா படிச்சு சொல்லுங்க. அங்கே என்ன நடந்ததுன்னு நான் அப்புறம் சொல்றேன்..

      மைண்ட் வாய்ஸ் : வேண்டாம் விசு, அங்கே நடந்தத மட்டும் சொல்லிடாத ..

      நீக்கு
  4. எப்படி கண்டுபிடித்தார் என்பது பற்றி இன்று வரை உங்களுக்கு தெரியாததால் அதி எங்கள் மூலம் தெரிஞ்சு கொள்ளதானே இப்படி கேள்விகள் கேட்டு பதிவை முடித்து வைத்திருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழா..

      அவர் எப்படி கண்டுபிடித்து வந்தார் என்பதை அவர் வருவதற்கும் முன்பே ரிச்சர்டிடம் சொல்லிவிட்டேன். இந்த இரண்டாம் பதிவை கவனித்து படித்தால் அவர் எப்படி வந்தார் என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.

      நீக்கு
  5. TTR உங்க சர்ச்சில் உள்ளவர். உங்களை சர்ச்சிலும் மற்றும் ஸ்கூல் இலும் பார்த்திருப்பார். ரிச்சர்ட் என்ற பெயர் வேறு அவருக்கு தெரியுமே.

    அந்தக் காலத்தில் TTR டிக்கெட் என்பது உண்டே. அதிலே போயிருக்கலாம். அதாவது TTR காசு வாங்கிட்டு ஒரு டோக்கன் தருவார். அது போதும்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JK .. என்னது... TTR டிக்கட்டா? நீங்க முதல் பதிவை படிக்காமல் இங்கே வந்துடீங்க போல இருக்கு. டிக்கட்டுக்கு காசுக்கு எங்கே போவோம்? அவருக்கு ரிச்சர்ட் என்ற பெயர் தெரியும், நாங்கள் சீர்காழியில் படிகின்றோம் என்றும் தெரியும், அது சரி.. எப்படியும் கண்டு பிடிச்சி வந்துடலாம்.

      என் கேள்வியே.. அவ்வளவு சாப்டாடு இருந்தும் முட்டையும் அப்பளமும் எப்படி காணாமல் போச்சுன்னு அவர் கண்டு பிடிச்சார். திரும்பவும் ஒரு முறை படிங்க. நீங்க கண்டி பிடிக்கலாம்.

      நீக்கு
    2. ஆம்லெட்டையும் அப்பளத்தையும் மட்டுமா ஆட்டய போட்டீங்க. ஒரு டிபன் பாக்ஸ் அடுக்கையும் சேர்த்து ஆட்டய போட்டுடீங்களே.

      நீக்கு
  6. 'சீர்காழியில் அங்கே இருக்க ரயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் உங்களை ஒப்படைக்கணும். நீங்க அவரிடம் உங்க ஸ்கூல் பத்தி சொல்லி அபராதம் கட்டிட்டு போங்க'.

    பதிலளிநீக்கு
  7. காணமால் போன நான்காவது அடுக்கு டிப்பன் பெட்டியை கேட்டு வந்த்திருப்பார்

    பதிலளிநீக்கு