செவ்வாய், 29 மார்ச், 2016

பெண்களின் கூந்தலில் .....

டாடி..அஞ்சு மணி அடிச்சாசி.. எங்கே ஆளே  காணோம் ..

என்று இளையவள் அலை பேசியில்  அதட்ட அருகில் நேரத்தை பார்த்தேன் 5:00:34.

ஒரு ஆணின் வாழ்க்கை தான் எவ்வளவு சோகமானது. பிறந்ததில் இருந்து பாட்டி- அம்மாவின் அதிகாரம், வளருகையில் அக்கா-தங்கச்சி அதிகாரம், வளர்ந்தபின் காதலி-மனைவியின் அதிகாரம், அது முடிந்தவுடன் பெத்த மகளின் அதிகாரம், இதிலேயும் சில நல்ல ராசிகாரர்களுக்கு ...அம்மா -மனைவி-மகள் என்ற மூவரின் அதிகாரமும் ஒன்றாய் வரும், நம்ம அந்த ராசி தானே என்று நொந்து கொண்டே...

இப்ப தான ராசாத்தி அஞ்சு ஆச்சி, வரேன்..

சீக்கிரம் கிளம்புங்க டாடி..வந்தவுடன் என்னை வெளியே கூட்டினு போகணும்.

எங்க?

பீயுட்டி  பார்லர் .



ஐயகோ.. இவளையும் கெடுத்து விட்டார்களே. இப்ப தான் 13 வயது. இதுக்குள்ள ஏன் இந்த மோகம்?

இதையெல்லாம் விடுங்க. இந்த காலத்தில் அதுவும் நான் வசிக்கும் இடத்தில் இந்த மாதிரி கடைக்கு சென்றால் வீட்டை எழுதி வைக்க சொல்லுவாங்களே.. என்னடா நமக்கு வந்த சோதனை என்று எண்ணி கொண்டே..

அங்கே எதுக்கு ராசாத்தி.. அவங்க ரொம்ப கெமிகல்ஸ்  போடுவாங்க. உன் முகமே கெட்டு  போயிடும்..

என்று நான் சொல்கையிலே. அவளோ என்னை நிறுத்தி...

ஆமா. அப்புறம் அழகே கெட்டுடும், பின்னர் முகத்தில் தோல் பிரச்சனை வரும். கண் பார்வை கூட மங்கிடும்.

என்று தொடர..

மகள்.. இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?

"பீயுட்டி பார்லர்" போகனும்ம்னு உங்களிடம் சொன்னவுடம் நீங்க இதையெல்லாம் சொல்லுவிங்கன்னு உங்க மூத்த பொண்ணு சொன்னா?

என் மூத்த பொண்ணா?

அவளே தான்!

ஏன், உங்க அக்கானு சொல்றது தானே.

எனக்கு அக்கா ஆகும் முன்னாலே அவ உங்களுக்கு மூத்த பொண்   இல்ல , அப்படியே இருக்கட்டும். சரி, டோன்ட் வேஸ்ட் மை டைம் .சீக்கிரம் கிளம்பி வாங்க..

வரேன் .. இருந்தாலும், அந்த ரசாயன பொருட்கள் ... உன் முகத்தை..

டாடி.. முகத்துக்கு ஒன்னும் போடல..

பின்ன எதுக்கு அங்கே போகனும்னு அடம் பிடிக்கிற ....

முடி வெட்ட போறேன்..

அவள் சொன்னது தான்.. நான் பேய் அறைந்தவன் போலானேன்  ( பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்).

என்னது..?

முடி வெட்ட போறேன்.

யு ஆர் ஜோகிங், ரைட் !

இல்ல டாடி.. I அம் சீரியஸ். சீக்கிரம் வாங்க.

சரி, இதோ கிளம்பிட்டேன், ஆனா ஒன்னும் முடிவு பண்ணிடாதிங்க. ஐ நீட் டு டாக் டு யு.

எல்லாம் முடிவு பண்ணியாச்சி. சீக்கிரம் வாங்க.

வண்டியில் ஏறினேன்.. அடேடே .. "பெண்களின் கூந்தலில் வாசனை உள்ளதா என்றோர் ஆராய்ச்சி" என்ற பாடலை கேட்டதில் இருந்தே அழகிய  கூந்தலின் அடிமையாயிற்றே அடியேன். அதுவும் .. இளையவளின் கூந்தல் எம்புட்டு நீளம். அதை அவள் எப்போதும் வெட்ட கூடாதுன்னு தினந்தோறும் பாராட்டி பேசுவேனே.. எங்கே தவறினேன்..எங்கே தவறினேன்.. என்று நொந்து கொண்டு வீட்டை அடைந்தேன்.

வண்டியை பார்த்தவுடன் அடித்து பிடித்து வந்து ஏறி கொண்டாள்.

அழகு முடி ராசாத்தி.. ஏன் அதை வெட்டுற.. உன் அழகே போயிடும்.

ரொம்ப செல்பிஷ் டாடி நீங்க..

ஏன்..

நான் மட்டும் நீள கூந்தல் வைச்சின்னு அழகா இருந்தா போதுமா? மத்த பிள்ளைகள்..

புரியல.

டாடி.. இன்னைக்கு எங்க பள்ளி கூடத்தில் புற்று நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு எப்படி எப்படி எல்லாம் உதவி செய்யலாம்  என்று விளக்கி சொன்னார்கள்.

மனதோ .. இந்த கொடிய நோயினால் இறைவனடி சேர்ந்த என் அருமை தங்கையின் நினைவு வந்தது.

சரி, அதுக்கும் இதுக்கும் என்ன?

டாடி.. புற்று நோய் மருந்து எடுக்கும் போது.. உடனடியாக தலை முடி எல்லாம் கொட்டிடும்.

ஆமா மகள். என் தங்கச்சிக்கு கூட.. அவ்வளவு நல்ல கூந்தல். இந்த "கீமோ தெரப்பி"கொடுக்குறேன்னு சொல்லிட்டு அவ்வளவு முடியும் ரெண்டே நாளில் கொட்டிடிச்சி. அவ்வளவு அழகு பிள்ளை என் தங்கச்சி. முடியெல்லாம் கொட்டி.. ..

இந்த மாதிரி ஆட்களுக்கு ஒரு நிறுவனம் இலவசமா விக் செஞ்சி கொடுக்குறாங்க.

சரி...

அதுக்கு அவங்களுக்கு நீளமான முடி வேணுமாம்.

ஒ..

பொதுவாக ஒரு விக் செய்ய 7-10 பேர் முடி தேவை படுமாம். ஆனால் என் முடியை பார்த்தவுடன் அங்க வந்தவங்க, இதை வைச்சி ஒரு விக் செஞ்சிடலாம்னு சொன்னாங்க.

ஆமா. .நல்ல நீளம் இல்ல..

அதனால நான் அவங்களுக்கு  சரி சொல்லிட்டேன். சீக்கிரம் போங்க.. கடை மூடுறதுக்குள்ள..

எந்த கடை..

நீங்க போவீங்களே அதே தான்.

மனதில் அட பாவி.. ஐந்து வாரத்துக்கு ஒரு முறை எனக்கு முடி வெட்டறேன் சொல்லி 25 டாலர் மொய் வாங்குவாங்களே.. இத்துனூண்டு இருக்கிற என் முடிக்கே 25 பொற்காசுகள் நான் .. இவ முடிக்கு .. என்று நினைத்து ...கொண்டே கடையை அடைந்தேன்.

சிறிய வயதில் ஒரு கல்லின் மேல் அமர வைத்து ஒரு மஷின்  எடுத்து ஒரே நிமிடத்தில்  ஒரு சுத்து வந்து .. எட்டணா வாங்கி கொண்டவர் நினைவு வந்து.

அது அந்த காலம். ஒவ்வொரு முறை இந்த கடையில் 25 டாலர் அழுதுவிட்டு வரும் போது   எதிரில்  வரும் வழுக்கை தலைகளை பார்த்து பொறாமை படும் நாட்கள் அல்லவா இவை.

ஹாய் வெல்கம்.

தேங்க்ஸ்..

என்ன போன வாரம் தானே வந்திங்க..

எனக்கு இல்ல.. இவளுக்கு..

வாவ்.. சச் எ லவ்லி ஹேர்.

தேங்க்ஸ்..

சோ , வாட் டூ யு வான்ட்?

அவளுக்கு இந்த புற்று நோய் "விக்" அவங்களுக்கு தரணுமாம்.

வாவ்.. தட்ஸ் சோ கூல் ..உட்க்காரு. பொதுவா இதுக்கு குறைந்த பட்சம் 10 அங்குலமாவது வேணும். வாட் டூ யு சே?

பத்து எடுத்துகுங்க..

நோ டாடி.. 12 எடுங்க... அப்பா தான் ஒரு முழு விக் செய்ய முடியும்.

அழகாக அவள் தலையை சீவி அங்கே அங்கே ரப்பர் பேண்ட்  போட்டு ஒரு மிசினை எடுத்து நறுக்கினாள் அந்த சீமாட்டி.

குதிரைவாலை போல் குதித்து கொண்டு இருந்த அந்த கூந்தல் உருட்டி போட்ட ஆமை போல் ஒரு இடத்தில அசையாமல் இருந்தது. மனதில் விசனம் கொஞ்சம் இருந்தாலும் கூடவே ஒரு சந்தோசம். மறைந்த என் அருமை தங்கை என்னை அறியாமலே அழகிய கூந்தலோடு நினைவில் வந்து சென்றாள்.

வெட்டிய முடியை ஓரத்தில் வைத்து விட்டு ...சரி.. இப்ப என்ன ஸ்டைல் வேண்டும் என்று ராசாத்தியை கேட்க , இவளும் எனக்கு "பிரியாத" ஆங்கிலத்தில் சொல்ல ... சிறித்து கொண்டே அவளை அழைத்து கொண்டு.. தலையில் என்ன என்னமோ போட்டு ஏதேதோ செய்து .. ஒரு மாற்றத்தோடு முடித்து வைத்தாள்.

ராசாத்தி.. குறைந்த கூந்தலில் கூட உன் அழகு அப்படியே இருக்கு..

நான் பெற்றவளாயிற்றே.. மனதை அறிந்து கொண்டு..

டோன்ட் வொர்ரி டாடி.. ஆறு மாதத்தில் வளர்ந்து விடும்.

என்று அவள் சொல்கையில்.. கல்லா பெட்டி அருகில் சென்றேன்.

எவ்வளவு..

ஒ.. இது இலவசம்.

வாட் ?

இந்த சிறிய வயதில் அவளுக்கே புற்று நோய் பட்டவர்கள் மேல் இவ்வளவு கரிசனை இருக்கும் போது.. நாங்க எவ்வளவு காட்ட வேண்டும். இது இலவசம்.

அடே டே என்ன ஒரு யோசனை. "இவர்கள் வழியே தனி வழி" என்று நினைத்து கொண்டே.. நன்றியும் கூறிவிட்டு .. வண்டியில் ஏறினோம்.

வண்டியை ஓட்டும் முன்..

மகள்.. ஒரே நிமிஷம் இரு.. இதோ வந்துடறேன்.

எங்க போறீங்க?

அந்த கடையில் ஒரு சின்ன சந்தேகம்..

அது எல்லாம் ஒன்னும் தேவை இல்ல நீங்க வண்டிய எடுங்க.

இரு வந்துடறேன்.

டாடி.. பி எ ஜென்டில்மென், இப்ப இது உங்களுக்கு அவசியமா?

நான் என்ன சந்தேகம் கேக்க போறேன்னு உனக்கு எப்படி தெரியும்?

உங்களை தான் 13 வருஷம் பாக்குரனே.. கண்டிப்பா தெரியும்.

எங்க சொல்லு பார்க்கலாம்.

அடுத்த முறை வரும் போது உங்கள் முடியை தந்தா உங்களுக்கும் இலவசமான்னு கேக்க போறீங்க.

சரியா சொன்ன மகள். இரு ஒரே நிமிஷம் கேட்டு வரேன்.

டாடி.. இலவசம் தான், ஆனா அதுக்கு நீங்க 20 வருஷம் வெயிட் பண்ணனும் .
ஏன்..?

உங்கள் தலையில் 10 அங்குலம் வளர எவ்வளவு நாள் ஆகும் தெரியுமா?

சரிதான் போ மகள்.. சின்ன வயசில்.. உங்க அப்பா தலைய பாத்து பொறாமை படாதவங்களே கிடையாது.

பின் குறிப்பு :

இந்த புற்று  நோய் என்பது யாருக்கும் வர கூடாது. என்ன ஒரு கொடுமையான நோய் இது. இந்த நோயை விட கொடுமை அதற்கான மருத்துவம். இவ்வாறன புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தால் அன்பாக பேசி அவர்களை உற்சாக படுத்துங்கள். அவர்களுக்க்காக பிரார்த்தனை செய்யுங்கள்.  

6 கருத்துகள்:

  1. நெகிழ்வான பதிவு...
    இங்கே சென்னையில் சென்ற வருடம் WCC யைச் சேர்ந்த சில பெண்கள் தலையை மொட்டையடித்து மயிரை தானம் செய்தனர். ஆங்காங்கே இன்னும் இதுபோல் தொடர்கிறது.
    இளையவளுக்கு எமது அன்பும் பாராட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டியின் குணம் அப்படியே பேத்திக்கும் ...வாழ்த்துக்கள் !

      நீக்கு
  2. Very nice! You create curiosity to read further.

    பதிலளிநீக்கு
  3. அடுத்த முறை வரும் போது உங்கள் முடியை தந்தா உங்களுக்கும் இலவசமான்னு கேக்க போறீங்க.// அஹஹ்ஹஹஹ் படித்துக் கொண்டே வந்த போது நான் என்ன நினைத்தேனோ அதையே ராசாத்தி கேட்டுவிட்டாள். ராசாத்தி கை கொடுங்க....

    உங்களை தான் 13 வருஷம் பாக்குரனே.. கண்டிப்பா தெரியும்.// இது ஒகே..என் மகள் சரி.... உங்களுக்கு எப்படித் தெரிந்ததுனு கேக்கறீங்களா?

    ஹிஹி அது வேற ஒண்ணும் இல்லை. நாமெல்லாம் இந்தியர்கள்!!! பாம்பின் கால் பாம்பறியும்...

    இங்கு சென்னையிலும் மகளிர் கல்லூரி மாணவிகள் கொடுத்தார்கள். இப்போதும் பலரும் கொடுக்கின்றார்கள்..பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  4. எத்தனை சோகம்....

    கூந்தல் கொடுத்தல் அபூர்வம்..
    சில பெண்கள் உயிர் கேட்டாலும் கொடுப்பார்கள் அதைத்தர மாட்டார்கள்..

    ராச்சத்திக்கு என் அன்பு...

    பதிலளிநீக்கு
  5. 🫡🫡🫡🫡🫡💜💜💜💜🫡🫡🫡🫡🫡

    பதிலளிநீக்கு