திங்கள், 18 ஜனவரி, 2016

பாடலாசிரியர் கார்கி வைரமுத்து அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

கடந்த சில நாட்களாக இணைய தளத்தில் சில பதிவர்களின் கவிதைகளை படித்தேன். யாருமே அறியாத பதிவர்கள், ஆனால் இவர்களின் கவிதையின் தரமோ அபாரம்.

இவ்வளவு சீராக ... நேர்த்தியாக அர்த்தமுடன் எழுதும் இவர்களை உலகறியவில்லையே என்ற ஏக்கம், என்னை வருத்த படசெய்தது .


சென்ற வாரம் இந்த பதிவர்களில் ஒருவரிடம் தொலை பேசியில் பேசும் வாய்ப்பு கிட்டியது.

நண்பரே... தங்கள் கவிதையை படித்தேன் .. அபாரம் .. வாழ்த்துக்கள்.

நன்றி.... படித்ததற்கும்... வாழ்த்துக்கும்.

இவ்வளவு நேர்த்தியாக எழுதுகின்றீர்களே... ஏதாவது... பத்திரிக்கையில் ... அல்ல திரையில் எழுத தங்களுக்கு தோன்றவில்லையா?

நண்பரே.. நீங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே போய் வெகு நாட்கள் ஆகி விட்டன என்று நினைக்கின்றேன். அதனால் தான் இப்படி ஒரு கேள்வி.

புரியவில்லை நண்பரே.. தவறாக ஏதாவது கேட்டு விட்டேனா?

 இல்லை .. இன்றைய நிலவரம் தெரியாமல் கேட்டுவிட்டீர்களே..

விவரமாக சொல்லுங்கள்.

நாம் என்ன எழுதுகின்றோம், எப்படி எழுதுகின்றோம் என்பது எல்லாம் முக்கியமில்லை.  நம்மை சிபாரிசு செய்ய யார் இருகின்றார்கள் என்பது தான் முக்கியம்.

என்ன ஒரு அநியாயம்? கண்ணதாசன் , வாலி கொடி கட்டி பறந்த  நேரத்தில் வடுகபட்டியார் வந்தாரே... அந்நாட்கள் போல் இல்லையா?

அதெல்லாம் அந்த காலம். அந்த வடுகபட்டியார் தன் மகனை அறிமுகபடுத்திய காட்சியை நீர் காணொளியில் கண்டீரா?

காணவில்லை.. என்ன நடந்தது ?

பழகிய எழுத்தாளர் பலர் இருக்க.. தமிழின் அடுத்தவாரிசு தன் மகன் கார்கி என்று முடிசூட்டினார்.

அது சரி,  கார்கி .. அவர் ஒரு கல்லூரியில் தானே பணி புரிகின்றார், எப்படி தமிழ் கவிதை.. கதை?

நண்பரே... "இவன் மீசை இல்லாத வைரமுத்து" என்று பாராட்டி தகப்பன் மகனுக்கு கொடுத்த சான்றிதழ் , கார்க்கியை தற்போது ஒரு முன்னணி பாடலாசிரியர் என்று முன்னேற்றி உள்ளது.

அப்படியா?

சில நாட்களுக்கு முன் வந்த பாகுபலி என்ற திரைபடத்தில் கார்கி ஒரு புது மொழியே படைத்துள்ளார் என்ற சாதனை வேறு.

நண்பரே, அடுத்தவர் அறிந்த மொழியில் படைப்பது வேறு... யாரும் அறியா மொழியில் தான் சின்னி ஜெயந்த் என்ற நகைசுவை நடிகர் பல வருடங்களுக்கு முன் பேசுவாரே, இதில் என்ன அதிசயம் ?

அதுதான் இப்போது அதிசயம் ?

வந்தி?  சுன்தா பங்கி மசூலா!

என்ன சொல்றிங்க ?

அப்படியா? என்னால நம்பவே முடியல! ன்னு இப்போதான் புதுசா ஒரு மொழியில் எழுதினேன்.

நக்கலா? நீங்க .. இதுவரைக்கும் கார்கி அவர்களின் பாடல்கள் ஏதாவது கேட்டு இருக்கீங்களா?

இல்லை..

எந்திரன் படத்தில் " இரும்பினிலே ஒரு இதயம்" என்ற பாடல் இருக்கு கேட்டு பாருங்க.

அட பாவி.. அது ரஜினி படம் தானே.. அதுல இவருக்கு எப்படி வாய்ப்பு?

அது தான் கார்கி.

சரி.. நான் அந்த பாட்டை கேக்கறது இருக்கட்டும்.. நீங்க இவரின் எழுத்தை பற்றி என்ன சொல்றீங்க?

நமக்கு பின்னே ஒரு பின்னணி இருந்தா ஒரு முன்னணி நடிகர் இயக்குனர் படத்தில் கூட சுலபமா பங்கேற்க முடியும் என்பதற்கு இதை விட ஒரு உதாரணம் தேவையா?

சரி, இப்படியே போனா, தம்மை  போல் வளரும் எழுத்தாளர்கள் நிலைமை?

வலைதளம் தான்..

வருமானம..

உங்க பாராட்டும் வாழ்த்துக்களும் தான்.

சரி நண்பரே... பிறகு சந்திப்போம்.

கார்கியின் படைப்புகளை நான் படித்து இல்லை, படிக்கும் அபிப்ராயமும் இல்லை.

ஆனால்,  பிரிக்க முடியாதது "வறுமையும் புலமையும்" என்பதை  மந்திரமாய் நம்புபவன் நான். கார்கியின் தந்தை வறுமையில் தான் புலவரானர். வறுமையில்லா புலமை பொய்யே. அதற்கு வாய்ப்பே இல்லை .

தலைப்பிற்கு வருவோம்.

கார்கி அவர்களே.. இம்மாதிரியான அபிப்பிராயங்கள் பலரிடம் உள்ளன.  இதை நிரந்தரமாக நீக்க நாம் ஒரு காரியம் செய்யலாமே.

வளரும் , யாருமறியா பாடலாசிரியர்கள் ஒரு நால்வரை நாம் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஐந்தாவதாக நீங்கள் வாருங்கள். அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ் சான்றோரை அல்ல இயக்குனரை அழைத்து அவர் கொடுக்கும் காட்சியை வைத்து நீங்கள் ஐவரும் பாடல் எழுதுங்கள். இதை நாம் ஒரு பொது இடத்தில் பொது மேடையில் வைத்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனின் கற்பனையும் வித்தியாசமாய் இருக்கும் என்பதை  அடியேன் அறிவேன். இந்த நிகழ்ச்சியில் வெற்றி தோல்வி இல்லை. ரசனை மட்டுமே.

இதனால் என்ன பயன்? நிறைய உண்டு.. உங்கள் படைப்பு நன்றாக வந்தால் ... தந்தையின் பலத்தினால் வந்தவன் என்ற வாக்கை தாம் பொய்யாக்கலாம். மற்றும் முன்னணி பாடலாசிரியர் கார்கியோடு பாடலை எழுதியவர்கள் என்ற பெயர் பெற்று, இந்த நால்வரும் கூட இந்த துறையில் முன்னேற வாய்ப்புண்டு.

பின்குறிப்பு :

சமீப காலமாக சமூக வலைதளைதில் நிறைய இடங்களில், தம் தந்தை காசு விஷயத்தில் மிகவும் கெட்டி என்று படித்த நினைவு. அது உண்மையா இல்லையா என்று அடியேனுக்கு தெரியாது  அது ஒருவேளை உண்மையாய் இருந்தால், தாங்களும் தம் தந்தையை போல் இருந்தால், இந்த பாடல் நிகழ்ச்சியில், ஒரு பாடலுக்கு தாங்கள் எவ்வளவு   மீட்டுவீர்களோ அந்த தொகையை தர நாங்கள் உத்திரவாதம்.

நாங்கள் தயார்.. நீங்கள் தயாரா?

கடைசியா ஒரு விஷயம்.
இதை படிக்கும் என் இனிய வாசகர்களுக்கு ....:
பின்னூட்டத்தில் "தம்பி விசுவிற்கு ஒரு செய்தி"ன்னு ஆரம்பிச்சு ஏதாவது சொன்னீங்கனா எனக்கு கெட்ட கோவம் வரும்.

18 கருத்துகள்:

  1. நல்ல சவால் விடுத்து இருக்கீங்க! பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  2. விசு! உண்மையான நிலவரமே இதுதான். நாங்கள் நம் வலையுலகில் எழுதும் குறிப்பாக கவிதை எழுதும் ஒரு சிலரிடம் சொன்னதுண்டு. வெள்ளித் திரையில் முயற்சி செய்யலாமே என்று. பதில் இருக்காது. ஏனென்றால் எல்லோருக்கும் நாட்டு நடப்பு நன்றாகத் தெரியும்.

    சரி அந்தப் போட்டி பொது இடத்தில் கார்கி மற்றும் நால்வர் அதில் ஒரு சிறு திருத்தம். அவர்கள் யாரென்று பொதுமக்களுக்குத் தெரியக் கூடாது. அதாவது கவிதைகள் மட்டுமே வாசிக்கப்பட வேண்டும். எந்தக் கவிதை அதிகம் ரசிக்கப்படுகின்றது என்பதையும் பிற கவிதைகளைப் பற்றிய ரசிப்பையும் அறியச் செய்தபின் யாருடைய கவிதைகள் என்பது சொல்லப்பட வேண்டும். எந்தவிதச் சார்பும் இன்றி.
    நல்ல சவால்தான். ஆனால்...

    கீதா: ஒன்றுமில்லை...நம் தொலைக்காட்சி ஊடகத்திற்கு மிகவும் திறமை வாய்ந்த நண்பர் ஒருவர் அதுவும் வேறொரு முகம் காட்டா பண்பலையில் இப்போது அதே பணியைச் செய்துவருபவர் நிறைய ரசிகர்களைப் பெற்றிருப்பவர் இப்போது தொலைக்காட்சி ஊடகத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும், அதில் தெரிந்தவர் யாரேனும் இருந்தால் நுழைவது எளிது என்ற நிலைமை...இது எப்படி இருக்கு...ஹும் இங்கு திறமைக்கு மதிப்பு இருந்தால் ஏன் நம் இளைஞர்கள் வெளி நாட்டை நோக்கி ஓட வேண்டும் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  3. பதிவில் உள்ள அனைத்தும் உண்மையே. இப்போது கலைத்துறையில் அதிகமாக வாரிசுகள்தான் நடைபோடுகிறார்கள்.
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. யாருக்கும் கோவம் வருவது மாதிரி நடப்பதே இல்லை...

    பதிலளிநீக்கு
  5. நடிப்பு துறையில் இவரை போல ஆயிரம் கார்கி இருக்கிறார்களே ? எதுக்கு வைரமுத்துவ மட்டும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாஸ்கர்..

      வறுமையும் புலமையும்.. அதுவே இந்த பதிவின் கரு... நடிப்பு துறையில் ஆயிரம் வாரிசுகள் உள்ளது என்பது உண்மையே. ஆனால் நடிப்பிற்கு ஓர் சிந்தனையாளன் தேவையில்லை. இயக்குனர் ஒருவர் சொல்லி கொடுப்பதை வாரிசு ஒருவர் நடித்து விட்டு போகின்றார். ஆனால் பாடலிலோ.. ஒரு அறிவாக்கம் தேவை படுகின்றது. சிந்தனை அதிகம். அதனால் தான் கார்க்கியை எடுத்தேன். இந்த பதிவுலேயும் வைரமுத்து போராடி தான் வந்தது போல் சொல்லி உள்ளேன். என்னுடைய கேள்வியே.. கார்கி முன்னணி பாடலாசிரியர்க்கு தகுதியானவரா?

      நீக்கு
    2. :)

      அவரின் சுயநலம் புரிகிறது. ஆனால் காலம் நல்ல கலைஞனை கண்டிப்பாக அடையாளம் காணும்.

      அதனுடன்

      1, கார்கியின் பாடலில் கம்யூட்டர் பயன்பாடு ( நல்லதா/கெட்டதா) பத்தியும் எழுதலாமே ?

      2. அவரின் தமிழ் எழுத்து சீரமைப்பு பத்தியும் எழுதலாமே ?
      http://www.thehindu.com/news/cities/chennai/a-proposal-to-simplify-the-tamil-script/article6939707.ece

      3) அவரின் ரிசர்ச் லேப் பத்தியும் எழுதலாமே ?
      http://www.karky.in/

      நீக்கு
    3. கண்டிப்பாக நண்பரே .. எழுதலாமே. ஆனால், நான் மேலே கூறியபடி கார்கியின் படைப்பை படிக்கும் அவா அடியேனுக்கு இல்லை. இவரின் இந்த படைப்புகளை பற்றி நீங்கள் எழுதுங்கள், விருப்பபட்டவர்கள் கண்டிப்பாக படிப்பார்கள்.

      மற்றும், இந்த பதிவின் குறிக்கோள், அறியா பாடலாசிர்யர்களின் குமுறலே. அவர்களை உலகிற்கு அறிமுக படுத்த கார்கி உதவலாமே, இதற்கு சம்மதம் தெரிவித்து.

      மேலும், நான் இதை விண்ணப்பமாக தான் வைத்துளேன், சவாலாக அல்ல.

      நீக்கு
    4. தம்பி விசுவிற்கு ஒரு செய்....... வேணாம் பிறகு பார்க்கலாம்.

      கோ

      நீக்கு
    5. இதைச் சொன்னது கண்டிப்பாக உங்களை குறை கூற இல்லை நண்பரே.:)

      நீக்கு
    6. அப்படியே குறை கண்டாலும் தவறு இல்லையே நண்பரே. வலைதளத்தின் அருமையே, தனி மனித சுதந்திரம் தானே.....

      நீக்கு
  6. என்னதான் சிபாரிசு செய்தாலும் அடுத்தடுத்த படைப்புகள் உண்மை முகத்தை காட்டிவிடும் சங்கர் மணிரத்தினம் போன்றோர் வாரிசுகளை களம் இறக்குவதை காணமுடியும். வைரமுத்து போன்றோர் பழமையாகிப்போக அவர்களை தள்ளிவிடுவதற்கு அவர்களது வாரிசுகளை பயன்படுத்திக் கொள்வது ஓரு உத்தி.ஒரு வேளை வாரிசுகள் திறமையாக இருப்பின் அறிமுகம் செய்த பெருமையும் கிடைக்கும்.இளைஞர்களின் ஆதரவும் கிடைக்கும். ஒர்க் அவுட் ஆக வில்லை என்றால் இரண்டுபேரையும் கழட்டி விட முடியும் . இப்படிக் கூட இருக்கும் என்று கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடே .. டே.. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் போல இருக்கே .

      நீக்கு
  7. தமிழகம் குறிப்பாக தமிழ் கலை உலகம் வாரிசுகள் அடிப்படையில் தான் செல்கிறது. மூங்கில் காற்று நண்பர் குறிப்பிட்டது போல், மணி ரத்தினம் தொடங்கி அனைவரும் வாரிசுகளுக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். நடிகர்களின் வாரிசு நாம் அறிந்தது. ஆனால் அனைத்து துறையிலும் உள்ளது சிறிது சிறிதாக தான் தெரிகிறது. இதன் மூலம் உண்மையான திறமை வஞ்சிக்கப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  8. இத்துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் இவ்வாறு முன்னுக்குக் கொண்டு வரப்படுபவர்கள் பலர் உண்டு. அவ்வாறான பல நண்பர்களை சந்தித்துள்ளேன். இவ்வாறானவர்கள் முன்னுக்கு பல நிலைகளில் கொண்டுவரப்படும்போது இயற்கையாகவே திறமை உள்ளவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  9. நல்ல சவால் ஐயா. ஆனால் எப்போதும் பின்வாசல் தான் பலரை வாழவைக்குது திறமை இருட்டடைப்பு செய்யப்படுவதே யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  10. வெறும்ன உட்கார்ந்து கதை, கவிதைன்னு எழுதினவங்களெல்லாம் வறுமையைப் பரிசாகப் பெற்றவர்கள். அவர்கள் மறைந்தபின்பு, இந்திரன் சந்திரன்னு புகழ்ந்து அதனால் பயன் பெற்றவர்கள் ஏராளம்.

    கலைத்துறை, அளவுக்கு அதிகமாகப் பணத்தைக் கொட்டக்கூடியது. 5 பாட்டுக்கு 6 லட்சம், 10 லட்சம்லாம் கொடுக்கக்கூடியது. "மானே..தேனே...பொன்மானே..புளிமானே'ன்னு போட்டு, பாட்டு சக்சஸ் ஆகிவிட்டால், ஒரே இரவில், லட்சங்கள் கொட்டும். அப்புறம் ஏன் வைரமுத்து தன் வாரிசை நுழைக்க மாட்டார்?

    இது அரசியல் அதிகாரத்திலும், கட்சி அதிகாரத்திலும் கொடிகட்டிப் பறந்து வருவதற்கு, இந்த சுலப அதிகாரம், பணம்தான் காரணம்.

    நல்ல புலமை உள்ளவன், தலையெழுத்து பெரும்பாலும் சரியாக இருக்காது. வாலியும் கொடிய வறுமையைச் சந்தித்தவர்தான்.

    பதிலளிநீக்கு