ஞாயிறு, 12 ஜூலை, 2015

எல்லா சொத்தையும் எழுதி கொடுக்கும் ரஜினிகாந்த் ….



மற்ற தளத்தில் நான் எழுதிய பதிவுகளில் ஒன்று. 

என்ன தண்டபாணி….ரஜினிகாந்த் அவர் படத்தில் தன் மொத்த சொத்தையும் எழுதிகொடுத்துட்டுஒரு லுக் விடுவாரே..அதே மாதிரி பாக்குற?
ஒன்னும் இல்ல வாத்தியாரே.
தண்டம்…சொல்லு…வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் எதையும் வைக்காதே…
சரி, சொல்லுறேன்.. அதுக்கு முன்னாலே… உன்னிடம் ஒன்னு கேக்கணும்.
என்ன ..
அது ஏன் வாத்தியாரே, ரஜினி அடிக்கடி அவர் படத்தில் சொத்து எல்லாம் எழுதி கொடுக்குறாரு?
_1395486080_SS_Music-2083
பாணி.. சினிமா ஒரு கானல் நீர் போல பாணி..
புரியல.
சின்ன வயதில் நீ யார் படத்த விரும்பி பாக்குவ?
MGR , சிவாஜி படங்கள் வாத்யாரே…
ஏன்…
நம்ம யாராலும் செய்ய முடியாததை இவர்கள் செய்றாங்களே..
நல்லா சொன்ன..
நம்ம யாராலும் செய்ய முடியாதத யாராவது செஞ்சாங்கன அதை பாத்து ரசிப்போம்.அதனால தான் ரஜினி தன் சொத்தை எல்லாம் திருப்பி திருப்பி எழுதி கொடுக்குறார்.
ஆனால்,ஒரு விஷயம் பாரு வாத்தியாரே.. எத்தனை தடவை எழுதி கொடுத்தாலும் திரும்பவும் வந்துடுதே, வாத்தியாரே..அது எப்படி வாத்தியாரே..
இப்படி பண்ணு பாணி..
எப்படி..
ஒரே பொண்ணு இருக்குற வீட்டில பொண்ணு எடுத்தா தானே யாரோ சம்பாரித்ததை நம்ம அனுபவிக்கலாம்னு கட்டின இல்ல ..
ரொம்ப முக்கியம்..விஷயத்த சொல்லு..
அந்த சொத்த எல்லாம் நீயும் எழுதி கொடுத்துடு .. திரும்பி எப்படி வருதுன்னு நம்ம ரெண்டு பேரும் ….கூர்மையா கவனித்து பார்க்கலாம் …
சோக்கா சொன்ன போ …நீ பொரி எடுத்துன்னு வா நான் கடலை எடுத்துன்னு வரேன் …ஊதி ஊதி சாப்பிடலாம்னு சொன்ன கதைபோல் இருக்கே
அது பொரி இல்ல பாணி…அவல்ன்னு நினைக்கிறேன்…
பொரியும் இல்லை, அவளும் இல்ல .. அது உம்மி
என்று சொல்லி கொண்டே நுழைந்தான் … அருமை நண்பன் சாரதி…
சாரதி..பாணிக்கு ஒரு சந்தேகம்…
ஒரே பொண்ணு இருக்குற வீட்டில பொண்ணு எடுத்தா தானே யாரோ சம்பாரித்ததை நம்ம அனுபவிக்கலாம்னு காத்து இருந்து கட்டினானே… அவனுக்கே சந்தேகமா.. .அது சொத்து விஷயமா தான் இருக்கும். சொல்லு பாணி..
விஷயத்த சொல்றதுக்கு முன்னாலா ஒரு விஷயம்…
என்ன..
நான் இந்த ஒரே பொண்ணு இருக்குற வீட்டில் நான் பொண்ணு எடுத்தத ..இந்த படையப்பா படத்தில் செந்தில் சொன்ன மாதிரி ….’மறந்துடுங்க”
சந்தேகத்த சொல்லு..
ரஜினி ஏன் அவர் படத்தில் அடிக்கடி தன் சொத்து முழுசையும் எழுதி கொடுக்குறார் …
பாணி..அது ஒரு பெரிய கதை..
கொஞ்சம் சுருக்கமா ..இடம் சூட்டி பொருள் விளக்கேன் ….
பாணி..நம்ம யாரும் செய்ய முடியாதத வேற யாராவது செஞ்சாங்கனா அதுல நமக்கு ஒருசந்தோஷம்..
புரியல…
திரும்பவும் சொல்றேன். உன் சொத்தை எல்லாம் ஒரு முறை எழுதி கொடு… அழகா புரியும்..
நான் ஏன் கொடுக்கணும் … வேணும்னா நீ எழுதி கொடு. நம்ம ரெண்டும் பேரும் ஊதி ஊதி கூர்மையா கவனிக்கலாம்
சரி நீ சொல்லவந்ததே வேறகதை..நம்ம இதை பத்தி பேச்சை மாத்திட்டோம்…விஷயத்த சொல்லு
தண்ட பாணி சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ந்தே விட்டேன்…
என்ன பாணி சொல்ற ..உண்மையாவா.
ஆமா வாத்தியாரே..
பாணி , நம்ம ஊரு பொண்ணுங்க ரொம்ப சமத்து ஆச்சே …எப்படி இந்த மாதிரி பண்ணாங்க ..
அந்த அம்மணி என்ன பண்ணார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்..
பின் குறிப்பு :
ரஜினிகாந்த் ஏன் தன் சொத்தை எல்லாம் மீண்டும் மீண்டும் எழுதிகொடுகின்றார்..யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்..

www.visuawesome.com

3 கருத்துகள்:

  1. நிஜத்தில் செய்ய இயலாததை
    நிழலிலாவது செய்யலாமே என்றுதான்
    தம 1

    பதிலளிநீக்கு
  2. நிஜத்தில் எத்தனை பேருக்கு எழுதிக்கொடுப்பார்? எல்லாம் படம் தானே! என்பதால் இருக்கும்!

    பதிலளிநீக்கு