சனி, 11 ஜூலை, 2015

புத்தம் புது காலையில் பூந்தளிர் ஆட !

மற்ற தளத்தில் நான் எழுதிய பதிவுகளில் ஒன்று. 
அலைகள் ஓய்வதில்லை – மற்றும் பன்னீர் புஷ்பங்கள் வெளிவந்த நாட்கள். இந்த இரு படத்தின் நாயகர்கள் இருவருக்கும் என் வயது தானே. அப்போது நானும் சரி, என் பள்ளியின் இறுதி ஆண்டில் படிக்கும் நண்பர்களும் சரி …கார்த்திக் அல்லது சுரேஷ் இவர்களில் இருவரில் ஒருவரில் தன்னை தானே பார்த்து கொண்டு … ஊரில் வலம் வந்த காலம் அது.
“நமக்குத்தான் யாது ஊரே யாவரும் கேளிர்” கதையாயிற்றே … பெயர் வேறு விசு.. “அலைகள் ஓய்வதில்லை” படம் வந்ததில் இருந்து பெயரை யார் கேட்டாலும் “விச்சு” என்பேன். அது என்னமோ தெரியல … நமக்கு அப்ப ஒரு ‘மேரி” அமையல ..

சரி புலம்பல விட்டுட்டு கதைக்கு வர சொல்றீங்க.. வரேன்…
இந்த இரண்டு படங்களுமே காதல் கதை கொண்டவை. படத்தில் நாயகன் நாயகி அறிமுகபடுத்த பட்டு இருந்தாலும் பிரதாப் போத்தன் – தியாகராஜன் -சில்க் ஸ்மிதா போன்ற அறிந்த முகங்களும் இருந்தன ..
இரண்டு படங்களில் அலைகள் ஒய்வதில்லை ஒரு சூப்பர் ஹிட் என்று சொல்லலாம் . பாரதிராஜா தொட்டது எல்லாம் பொன்னாகும் நேரம் அது. இளையராஜாவின் இசை, வைரமுத்துவின் பாடல்கள் மற்றும் அந்த “முட்டம்”கிராமம், இவை எல்லாம் சேர்ந்து அமைய படம் ரிலீஸ் ஆனா இடத்தில் எல்லாம் வருடத்தை தாண்டி ஓடியது.
பன்னீர் புஷ்பங்கள்  கதையே வேறு. ஊட்டியில் உள்ள ஓர் பணக்கார பள்ளிகூடத்தின் பின்னணியில் அமைந்த கதை. அலைகள் ஓய்வதிலையில் அரை கால்சட்டை அணிந்த சிறுவர்கள் ஆனால் இங்கே பேன்ட் – ஷர்ட் -டை போட்ட மாணவர்கள். அங்கே கமலா காமேஷ் குடிசையில் ஹார்மோனியம் சொல்லி தருவார். இங்கே ஷாந்தி கிருஷ்ணன் ஏ சி அறையில் பியானோ பழகுவார் .
இந்த ரெண்டு படங்களுக்கும் இசை அமைத்த இளையராஜா.. அடேங்கப்பா …
“காதல் ஓவியம்….” அதற்கு நிகராக “”கோடை கால காற்றே…”
“ஆயிரம் தாமரை மொட்டுக்களே” …அதற்கு நிகரான .. “ஆனந்த ராகம்..”
“புத்தம் புது காலை” அதற்க்கு நிகராக ” பூந்தளிர் ஆட”
மற்றும் …
“வாடி என் கெப்ப கிழங்கை”    மிஞ்சும் … “வெங்காய சாம்பாரும் வேகாத சோறும்”
இந்த இரண்டு படங்களின் பாடல்களை வைத்து கொண்டே கிட்டத்தட்ட ஒரு முழு வருடத்தை தள்ளி விட்டேன் . அன்றும் சரி.. இன்றும் சரி … இந்த பாடல்கள் செவியில் விழுந்தால் அனைத்தையும் விட்டு விட்டு காது கொடுத்து கேட்பேன்.
கார்த்திக் மற்றும் சுரேஷ் இப்போது நன்றாக தெரிந்த முகமானதால் அடுத்த படத்திற்க்காக ஆவலோடு காத்து கொண்டு இருந்த வேளை.. ஒரு நாள் தினத்தந்தியில் கடைசி பக்கத்தில்…
ராமநாரயனின் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையில் …கார்த்திக் -சுரேஷ் இணைந்து வழங்கும் … “இளஞ்சோடிகள்” ..
படித்தவுடனே … மனதில் வந்தது… “கிளிஞ்சது போ..” ராமநாராயணன் காற்றுள்ள போதே தூற்றி கொள்ள தயாராகிவிட்டார் .
இளஞ்சோடிகள் சரியாக ஓடவில்லை … பாடல்களும் மனதில் நிற்கவில்லை (“மாமி ,சிவகாமி, எங்க இளஞ்சோடிகளை காமி” என்ற ஒரு பாடல் இருந்தது.. அதுவும் அருமையான பாடல் என்று சொல்ல முடியாது .. இந்த பாடல் என் மனதில் பதிந்ததற்கு வேறு ஒரு காரணம் உண்டு.. அதை பற்றி பிறகு பார்க்கலாம்)
அதன் பின் கார்த்திக்கின் பல படங்கள் படுதோல்வியடைந்தது … அவர் சில வருடங்கள் காணாமல் போய் விட்டார் (அக்னி நட்சத்திரம் அவரை மீண்டும் அறிமுக படுத்தியது) சுரேஷை ஹீரோவாக வைத்து எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை, அதனால் அவர் ரெண்டாவது ஹீரோ போல் பாத்திரங்களை கையாண்டு பல வருடங்கள் ஓட்டினார் . நிறைய படங்களில் நடித்தார்.
unnamed (1)
இவர்களோடு வளர்ந்து விட்டதால் எப்போதுமே இவர்கள் இருவரும் இப்போது என்ன செய்து கொண்டு இருகின்றார்கள் என்று அடிக்கடி அறிந்து கொள்வேன் . கார்த்திக் இப்போது எதோ ஒரு படத்தில் அப்பா வேடம் பூண்டதாக கேள்விபட்டேன் .. தொப்பியை தைரியமாக கழட்டி விட்டாரே .. இல்ல, நமக்கு இன்னும் தொப்பி போட்டு கொண்டு இருகின்றாரா தெரியவில்லை ..விட்டாரா ? சுரேஷ் முழுவதுமாக “மொட்டை” போட்டு விட்டதை எங்கேயோ பார்த்த நினைவு .
ஏற்கனவே சொன்ன மாதிரி.. நமக்கு தான் “யாதும் ஊர் யாவரும் கேளிர்” ஆயிற்றே.. கிராமத்தில் “விச்சு” என்று கார்த்திக்கை போல் அடையாளம் காட்டி கொண்டு இருந்த நான் மெட்ராஸ் ( மன்னிக்கவும்.. நமக்கு எப்பவுமே மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தான். இந்த” சென்னை – வெண்ணை” எல்லாம் வாயில் நுழையாது) வந்த போது .. அங்கே நம் ஒன்று விட சகோ தன் தோழர் தோழிகளின் இல்லத்திற்கு அழைத்து சென்றான்..அங்கே..
Hi சத்தி, Who is this Chap?
Hello மேரி …He is my Cousin…
ஹாய் Cousin what is your name…?
(மேரி… மேரி… மேரி… Marry Me மேரி…மனதில்… ஆயிரம் தாமரை மொட்டுகளே ஆனந்த ராகத்தோடு சேர்ந்து ஓடி கொண்டு இருந்தது ….. )…
Hey.. I said, what is your name…?
My Name is “விச்சு”…அவள் வெட்கத்தினால் நாணி தலை குனித்து புன்னகைக்க போகின்றாள் என அறிந்து நான் வெட்க்க பட்டு கொண்டே சொன்னேன் ..
Strange Name… Nice meeting you .. என்று சொல்லி இடத்தை காலி பண்ணிவிட்டாள்…
இதை பார்த்து கொண்டு இருந்த சத்தி..
விசு எப்படி “விச்சு” ஆச்சி ?
அது ஒரு தனி கதை சத்தி என்று அலைகள் ஓய்வதில்லை “விச்சு -மேரி ” கதையை விளக்கினேன்.
விசு.. இந்த அலைகள் ஓய்வதில்லை கதை எல்லாம் ஊரில் வைத்து கொள் .. This is City, Man.. You gotta behave like … Prabhu…
யாரப்பா அந்த பிரபு..?
பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ஹீரோ சுரேஷின் பெயர் தான் “பிரபு..” இந்த “விச்சு – கிச்சு” எல்லாம் இங்கே வேலைக்கு ஆவாது..
மீண்டும் என் பெயர் விசு ஆனது ..
www.visuawesome.com

8 கருத்துகள்:


  1. ...புத்தகவெளியிட்டில் நீங்க பட்டு வேட்டி கட்டி வருவீங்கண்ணு பார்த்தேன் This is City, Man.. You gotta behave like … Prabhu ஓ அதுனாலதான் நீங்க ஹீரோ மாதிரி பேண்ட் சர்ட் போட்டு கலக்கினீங்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது .. பட்டு வேட்டியா? என்ன தமிழா.. நான் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா ?

      நீக்கு
    2. கடைசில பிரபு ந்ற பேரு என்னல்லாமோ யோசிக்க வைச்சுருச்சு...தமிழன் போல...அவரு அதைச் சொல்லிட்டாரு....நன்றி தமிழா...

      நீக்கு
  2. (மேரி… மேரி… மேரி… Marry Me மேரி…மனதில்… ஆயிரம் தாமரை மொட்டுகளே ஆனந்த ராகத்தோடு சேர்ந்து ஓடி கொண்டு இருந்தது ….. )…நினைச்சோம்.....அந்தப் பொண்ணு பேரு மேரின்ன உடனேயே அடுத்து இந்த லைனாதான் இருக்கும்னு நினைச்சுக்க்ட்டே , ஆயிரம் தாமரையும் நினைச்சுக்கிட்டே வந்தா அதே....ஒரு தாமரை கூட இல்லாம போச்சே...

    ஆனா பாவம் நீங்க...அந்த பொண்ணுகிட்ட செம பல்பு வாங்கினீங்கனு சொல்லுங்க.......அதுவும் ஃப்யூஸ் ஆகி...ஹஹஹஹ

    ரொம்பவே ரசிச்சோம் நண்பரே! செம...

    பதிலளிநீக்கு
  3. பட்டு வேட்டி, சட்டையில் தாங்கள் எப்படி இருப்பீர்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்
    மாப்பிள்ளை போல் இருந்திருப்பீர்கள்
    தம =1

    பதிலளிநீக்கு
  4. அந்த கால படங்களை நினைவு கூற வைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. .... This is City, Man.. You gotta behave like … Prabhu…,,// This is the highlight of the post.. ;)

    பதிலளிநீக்கு