செவ்வாய், 25 நவம்பர், 2014

பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை !

நேரம் இல்லாதா  காரணத்தினால் என் பதிவுகளில் எனக்கு பிடித்த ஒன்று.. உங்களுக்காக " மீள் பதிவு".


இது கோடை விடுமுறை, இந்தியாவில் வாழும் உங்களுக்கு அல்ல, கடல் தாண்டி இங்கே அமெரிக்காவில் வாழும் எங்களுக்கு. இந்தியாவில் கோடை விடுமுறை  மார்ச்ல் ஆரம்பித்து மே மாத கடைசியில் முடிந்து விடும். ஆனா இங்கே இந்த விடுமுறை ஜூன் இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் வரை போகும்.




கோடை விடுமுறை எப்போது என்பது முக்கியம் அல்ல, ஆனால் அதை பிள்ளைகள் எப்படி கழிக்கின்றனர் என்பது தான் முக்கியம். இந்த விஷயத்தில் இந்தியாவிலும் இங்கேயும் சிலபெரிய வித்தியாசங்களை பார்க்கின்றேன். நான் இங்கே தொடர்ந்து எழுதும் கருத்துக்கள் என் குடும்பதிலும் என்னை சார்ந்தவர்களையும் பற்றி. ஆதலால் இதை எல்லோருடைய வாழ்க்கையிலேயும் என்று எண்ணி பார்க்காதீர்கள்.

என்னை பொறுத்தவரை "விடுமுறை" என்பது, நாம் மற்ற நாட்களில் செய்யும் தினசரி காரியங்களை 'விடும் முறை". இந்நாட்களில் நாம் நன்றாக ஓய்வு பெற்று வரும் நாட்களில் ஒழுங்காக படிக்க-வேலை செய்ய நம்மை தயார் செய்து கொள்ளவேண்டும். ஆனால் நான் கண்டவரை இந்தியாவில் பள்ளி நாட்களை விட விடுமுறை நாட்களில் தான் பிள்ளைகள் மிகவும் கடினமாக படிக்கின்றனர். இந்த பிள்ளைகளை பார்கையில் மனம் நொந்து விடுகிறது. விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ், இது தேவையா? என்னை பொறுத்தவரை என் பிள்ளைகள் கோடை விடுமுறையை விளையாட்டிலேயும் இசை பயிற்சியிலும் தான் செலவு செய்வார்கள். மற்றபடி இந்த சிறப்பு வகுப்பு எல்லாம் இல்லை.

சரி இந்த வருட  கோடை விடுமுறையை எப்படி கழிக்கின்றோம் என்று இப்போது பார்ப்போம்.ஒன்றும் இல்லை, இந்த வருடம் என் வீட்டு அம்மணியும் என் இரண்டு கண்மணியும் உற்றார் உறவினரோடு பார்த்து பேசி பழக மூன்று வாரத்திற்கு இந்தியா சென்று உள்ளனர். நான் இங்கே தனியாக தான் உள்ளேன்.

நான் அவர்களை விமான நிலையத்தில் ஏற்றி விட்டு வரும் வழியிலேயே நண்பன் ஒருவனிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு.


சித்தப்பு, அது எப்படி உன்னால மட்டும் இப்படி யோசித்து காரியத்த செய்ய முடியுது?

மாப்பு, நீ என்ன சொல்ல வர என்றே புரியில்ல.

இல்ல சித்தப்பு, 4 வருஷத்திற்கு ஒரு முறை வர உலக கால்பந்து போட்டி நேரத்தில் இவ்வளவு அழகா பிளான் பண்ணி இவங்க மூணு பேரை அனுப்பி வைச்சிட்டியே, நீ படா கில்லாடி பா.

மாப்புஅப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, இது பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை போல்

என்னாது? காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை என்று தானே சொல்லுவார்கள், நீ என் மாத்தி சொல்லுர?

பழமொழி சொன்னா ரசிக்கனும், கூட கூட கேள்வி கேட்க கூடாது. இது எல்லாம் பிளான் பண்ணி பண்ற விஷயம் இல்ல மாப்பு, மனசு நல்லா வைச்சி இருந்தா இது எல்லாம் தானா நடக்கும்.

அது சரி சித்தப்பு, மூணு பெரும் எப்ப திரும்புறாங்க?

உலக கோப்பை  இறுதி ஆட்டம் முடிந்த அடுத்த நாள் .

அதை   கேட்டவுடன் அவனுக்கு பொறாமையில் மயக்கமே வந்து விட்டது.
அந்த மயக்கத்திலும் கூட அவன் 'நோ தங்கமணி என்சாய்னு' சொல்லி போனை வைச்சான்.

இதை படிச்ச நீங்களே சொல்லுங்களேன்.. நான் என்ன பிளான் பண்ணியா இவர்களை அனுப்பி வைச்சேன்?

தொடரும்...  

செலவு எட்டணா... வரவு எப்படியண்ணா?


7 கருத்துகள்:

  1. அதானே...! நடக்கும் எதுவுமே நம் கையில் இல்லை...

    பதிலளிநீக்கு
  2. நண்பர் விசு,

    பனி விழும் மலர்வனத்தில் கோடை விடுமுறையா என ஒரு கணம் தடுமாறிபோனேன்,

    தங்களின் மீள் பார்வை மீண்டும் பார்க்க வைத்தது.

    அழகு நடையில் சொல்லியிருந்தது படிக்க கோடை விடுமுறையை அனுபவித்தமாதிரி இருந்தது.

    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
  3. ஆகா
    காக்காய் உட்கார்ந்து விட்டது
    பனம்பழமும் விழுந்து விட்டது

    பதிலளிநீக்கு
  4. எப்படி எல்லாம் சமாளிச்சு இருக்கிங்க முன்னாடி.. ம்ம்
    பிளான் பண்ணி அணுப்பிட்டு, கோடை விடுமுறை, இந்திய-அமெரிக்க வேறுபாடு, குழந்தைகள் வளர்ப்பு, பனம்பழம்-காக்கா, அப்படி இப்படின்னு..
    சரி சரி..

    பதிலளிநீக்கு
  5. விடுமுறையை கோச்சிங் கிளாஸ் ஆகி வீணடிக்கின்றனர் இங்கே! அங்கேயாவது விடுமுறை விடுமுறையாக இருப்பதில் மகிழ்ச்சியே!

    பதிலளிநீக்கு
  6. ப்ப்ப்ப்ளான் பண்ணி (வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவும்) அனுப்பிட்டு சமாளிப்பு வேற..ஹாஹ்ஹாஹ்.....

    இந்தியாவில் விடுமுறையா...நெவெர் ...அப்புறம் எங்க புள்ளைங்க மூளை எல்லாம் என்னத்துக்கு ஆவுது.....அவங்க ஜெயிக்க வேண்டாமா...இங்க எலி ரேஸ் பா......பிள்ளைங்க பாவம் "விடும்" முறை வராதானு ஏங்கிக்கிட்டு இருப்பாங்க...உங்கூர் பிள்ளைங்க கொடுத்து வைச்சவங்கப்பா....வாழத்தெரிஞ்சவங்க...ஆனா இங்க இதெல்லாம் நகரத்துலதான்...கிராமத்துல எல்லாம் அவங்க உங்கூர் பிள்ளைங்க மாதிரிதான்...

    பதிலளிநீக்கு