திங்கள், 17 நவம்பர், 2014

"குடி" உயர "கோள்" உயரும், "கோள்" உயர "குற்றம்" உயரும்!

சில நாட்களுக்கு முன் நம் மதிப்பிற்குரிய மூத்த பதிவர் தருமி அவர்களின் 800 வது பதிவை பார்த்து பரவசமடைந்தேன். (மேலே போகும் முன்னால், அடி ஆத்தி, 200 தான் போட்டு முடிச்சேன், அதுக்குள்ள மண்டை காஞ்சி உள்ளே இருக்கும் யோசிக்கும் திறன் எல்லாம் வற்றி போனதே, இவர் எப்படி 800 போட்டார்ன்னு உங்களை போலவே நானும் வியந்தேன்)

 
 Picture Courtesy : Google
இந்த பதிவில் தருமி அவர்கள், டாஸ்மாக் கடைகளை விட அதன் அருகில் உள்ள பார்களை பற்றிய பிரச்சனைகளை நமக்கு முன்பாக எடுத்து வைத்துள்ளார் . உங்களில் ஏற்கனவே தெரிந்ததை தான். நான் என் தாய் திருநாட்டை விட்டு வெளியேறி கால் நூட்டாண்டிர்க்கும் மேல் ஆகிவிட்டது. அங்கே உள்ள நடவடிக்கைகளை செய்தி தாளில் படித்து அறிவேன். டாஸ்மாக் கடைகளை பற்றியும் அதன் வருமானத்தை பற்றியும் அதனால் வரும் இல்லல்களை பற்றியும் நிறைய இடத்தில படித்துள்ளேன். ஆனால் இந்த கடைக்கு அருகில் இருந்த பார்களை பற்றி இந்நாள் வரை அறிந்திறேன்.

பதிவாளர் தருமி அவர்கள் இந்த "பாரி"னால் பாரதத்திற்கு வரும் கேடுகளை இங்கே அழகாக சொல்லி இருக்கின்றார். நீங்கள் அனைவரும் அங்கே சென்று அந்த  பதிவை ஒரு முறை வாசிக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

உங்களில் சிலர், நீ என்ன யோக்கியமா? நீயும் தானே குடித்து கொண்டு இருந்தாய் என்று சொல்வத கேட்க்கின்றது. படிப்பு நாட்களில்"களவும் கற்று மற" என்று உசுப்பேத்தி விட்டு முதல் முதலாக சோமபானத்தை நண்பன் ஒருவன் வாங்கி தர அதை குடித்து  கொண்டு இருந்தவன் தான் நான்.


இருந்தாலும் கடந்த 15 வருடத்திற்கும் மேல் எந்த ஒரு சோமபானமும் சுராபானமும் என்னுள் செல்லாததினால் தைரியமாக சொல்கின்றேன், இந்த பார் வசதிகள் நாட்டிற்க்கே  கேடு.
தருமி அவர்கள் இந்த பார்களை மூட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளார். இந்த தொடர்ப்பை சொடுக்கி அதில் தங்கள் விண்ணப்பத்தையும் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றேன் .

 பார்களை மூட உங்கள் சேவை தேவை , இங்கே சொடுக்கி உங்கள் ஆதரவை தரவும்.


இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஒரு நிமிடம் கூட ஆகாது. தயவு செய்து உங்கள் ஒத்துழைப்பு தரவும் .


6 கருத்துகள்:

  1. நண்பரே! எங்கள் வலைத்தளத்தில் அழைப்பு விடுத்துள்ளோம்! நண்பர்கள் கோயில்பிள்ளைக்கும், பரதேசிக்கும் கொடுக்கின்றோம். அவர்களுக்கு னீங்களுமும் சொல்லி விடுகின்றீர்களா? மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. குற்றம் உயர கோன் தாழ்வான்...அதனால் டாஸ்மாக் கடைகளை மூட அந்த கோனார் உடனே நடவடிக்கை எடுக்கட்டும்

    பதிலளிநீக்கு
  3. பதிவர் தருமியின் தளம் சென்று ஏற்கனவே ஆதரவு தெரிவித்துவிட்டேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. கண்டிப்பாக ஆதரவு உண்டு..
    தகவலுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு