சனி, 15 நவம்பர், 2014

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....

பல வருடங்களுக்கு முன், திருமணம் ஆன புதிதில், ஒரு வார இறுதியில், காலை 9 மணிக்கு...

ஏங்க இன்னைக்கு என்ன சமைக்கட்டும்..


(Picture Courtesy : Google)



(அடே டே, இதுவரை என் வாழ்விலே என்னை யாருமே என்னை சமைக்கலாம் என்று கேட்டதிலையே, பெரிய மனதோடு)
உனக்கு என்ன பிடிக்குமோ அதை சமைக்கலாம் (நோட் தி பாயிண்ட் ... "லாம்")

இல்லை சொல்லுங்க, என்ன சமைக்கட்டும்?

வீட்டில் என்ன இருக்கோ அதை சமைக்கலாம் (வளைகுடா பகுதி,வெயில்  அதிகம், வெளியே போய் ஏதாவது வாங்கி வா என்று சொல்லி விட்டால்)...

இல்லை சொல்லுங்க, நீங்க என்ன வேண்டும் என்று சொல்லுங்க, அதையே சமைக்கின்றேன்.

யாழ்பாணத்து பாணியில் (அம்மணி ஈழம் ஆச்சே) ஒரு நெத்திலி சொதி, கொஞ்சம் இறால் வறுவல்,  ஒரு மட்டன் சாப்ஸ், கூடவே ஒரு கத்திரி - உருளை கிழங்கு பொரியல், என்ன சொல்லுற?

நீங்க சொன்ன ஒண்ணுமே இல்லை.

அப்பா இருகிறதில ஏதாவது செய்யலாமா?

சரி... என்ன சமைக்கட்டும் சொல்லுங்க?

என்ன இருக்குது?
சிக்கன் மட்டும் தான் இருக்கு.

அப்ப சிக்கன் செய்யலாமே..

சரி, நல்ல முடிவு... சிக்கனில் என்ன செய்யட்டும்?

(என்னடா வம்பா போச்சே) கொஞ்சம் குழம்பு பண்ணலாம், கொஞ்சம் "சிக்கன் 65" போல பண்ணலாமே!

குழம்பும் - 65யுமா?

வேற ஏதாவது செய்யலாமே.

சிக்கனில் வேறு என்ன செய்ய முடியும்? சிக்கன் பிரியாணி எனக்கு பிடிக்காதே?

சிக்கன் பிரியாணி உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும், அதனால தான் பிரியாணி வேண்டாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்.

எங்க இப்படி பண்ணலாமே..

எப்படி?

சோறு வடிச்சிட்டு , "செட்டிநாடு சிக்கன்" செய்யட்டா?

சூப்பர்.. அதை தான் முதலிலேயே கேட்காலாம்னு யோசித்தேன். நம்ம ரெண்டு பேருக்கு தான் என்ன ஒரு நல்ல பொருத்தம், நான் மனதில் யோசித்ததையே நீயும் சொல்ற...சூப்பர்!


பின் குறிப்பு ;

காலையில் எழுந்தவுடனே சோறு வடிச்சி செட்டிநாடு சிக்கன் பண்ணலாம்னு முடிவு பண்ணிடாங்க. இதில் நம்மை ஏன் "என்ன சமைக்கட்டும்னு" கேட்க வேண்டும். "கன்புயுசன்"!

10 கருத்துகள்:

  1. முடிவு செஞ்சிட்டு கேட்க காரணம்..... நமக்கும் மரியாதை கொடுத்திருக்காங்கன்னு மனசுல கொஞ்சம் சந்தோசப்படட்டுமேன்னுதான்....

    பதிலளிநீக்கு
  2. கேக்கவாவது செய்யறாங்களே அதை நினைச்சு சந்தோஷப்படுங்க!

    பதிலளிநீக்கு
  3. ஹாஹஹஹஹ்ஹ....ஏங்க நண்பர் விசுவிற்கா தெரியவில்லை அதில் ஒரு பிட் இருக்கின்றது என்று!!!ஹஹ்ஹ்ஹாஹ் ...

    "கன்ஃப்யூஷன் தீர்னமே....எண்டே கன்ஃபூஷன் தீர்கணமெ"

    https://www.youtube.com/watch?v=GDM4gzGZHQ4

    இந்த லிங்க் பாருங்க ...உங்க கன்ஃப்யூஷன் தீர்ந்துச்சா சொல்லுங்க...ஹஹஹஹ்ஹ

    பதிலளிநீக்கு
  4. இதற்குத்தானே ஆசைப்பட்டீர் நண்பர் விசுவே! விசுவிற்கேகுழப்பமா?!!!

    சரி இந்த் சீன் உங்களுக்குத் தெரிந்திருக்குமே.....பூரி செய்ய மாவு பிசைய வேண்டும்....அதான் தெரியுமே.....அதான் தெரியுமே....அதுவும் எங்கள் நினைவுக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
  5. சமையலாச்சும் அவுங்க செய்றாங்களே... அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க சார்....

    பதிலளிநீக்கு
  6. ""ஏங்க இன்னைக்கு என்ன சமைக்கட்டும்.."" இந்த வரி படிக்கும்போதே முடிவு கிட்டத்தட்ட இப்படி தான் இருக்கும் என நினைதேன்..
    ஆனாலும் அதை சொன்ன நடையில் நீங்கள் நின்று விட்டீர்கள்.. :)

    பதிலளிநீக்கு