வியாழன், 2 அக்டோபர், 2014

யேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்

பாடகர்  யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில் வந்த "என் இனிய பொன் நிலாவே" என்ற ஒரே பாடல் போதும். அவ்வளவு இசை ஞானம். அற்புதமான கலைஞர்.

சரி இவ்வளவு அழகாக பாடும் இந்த கலைஞரை மலையாளத்தில் நான் " யேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்! என்று கூற காரணம் என்ன?



இந்த வாரம் முழுவதும் இந்த சினிமாகாரர்களின்  தொல்லை தாங்க முடியவில்லை. முதலில் இந்த மூடர்கள், அம்மையாரின்  கைதை எதிர்த்து உண்ணாவிரதம். அதை பார்த்த சகித்து  முடியு முன் நம் பாடகர் வாயில் வந்துள்ள திருவார்த்தை.

அப்படி என்ன சொன்னார்?

"பெண்கள் ஜீன்ஸ் அணிய கூடாதாம்". பெண்கள் ஜீன்ஸ் அணியும் போது ஆண்கள் அவர்களை அந்த உடையை தாண்டி பார்க்கின்றனராம். என்ன ஒரு முட்டாள் தனமான பேச்சு இது. ஒரு பெண்ணை காம எண்ணத்துடன் பார்ப்பவன் அந்த பெண் தலை முதல் கால் வரை முழுக்க அணிந்து இருந்தாலும் அந்த பார்வையில் தான் பார்ப்பான். இதில் ஜீன்ஸ் ஆவது, சுடிஜாராவது, இல்லை  புடவையாவது?

ஒரு பெண் ஜீன்ஸ் அணிவதால் இந்த பார்வைக்கு உட்படுத்த படுகின்றாள் என்றால் அது அவள் அணிந்துள்ள ஜீன்ஸ் மேலான தவறு இல்லை. அந்த ஆணின் வளர்ப்பில் உள்ள தவறு. இப்படி பெண்கள் ஜீன்ஸ் போட கூடாது என்றால் இவரின் பார்வை சரி இல்லை என்று தான் அர்த்தம்.

இன்னொரு விஷயத்திற்கு வருவோம். தமிழ் சினிமாவில் இவர் கொடி கட்டிக்கொண்டு பறக்கும் போது, இவர் பாடும் பாடல்களில் பெண்கள் என்ன அணிந்து இருந்தார்கள் என்று கேட்டா பாடினர்.

"புதுகவிதை - வெள்ளை புறா ஒன்று" மற்றும் "ரெட்டை வால்  குருவி- ராஜா ராஜா சோழன்" இரண்டு பாட்டையும் உதாரணத் திற்கு எடுத்து  கொள்வோம். இந்த இரண்டு பாட்டும் இவருக்கு நல்ல பெயர் பெற்று தந்தது. இரண்டு பாட்டிலேயும் கதாநாயகி ஜீன்ஸ் அணிந்து  இருப்பார்கள். இவர் அன்றே இந்த கருத்தை கூறி இருந்தால் நாம் அனைவரும் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருப்போமே. இப்படி காசை மட்டும் வாங்கி வங்கியில் போட்டு விட்டு கருத்தை மட்டும் இத்தனை வருடம் கழித்துசொல்கின்றாரே? என்ன செய்வது.

மற்றும் ஒரு விஷயம்... திரு ஜேசுதாஸ் அவர்களே, கடைசியாக எப்போது கடவுளின் சொந்த நாடான (Gods own Country) கேரளா பக்கம் சென்றீர்கள்? அங்கே கேரளா நாட்டு இளம் பெண்கள் அணியும் (அணியாத) ஆடைகளை விடவா ஜீன்ஸ் மோசம்?. இந்த மாதிரி பெண்களுக்கு ஏதாவது அறிவுரை கூறுவது என்றால், முதலில் கேரளாவில் உள்ள மலையாள  பெண் குட்டிகளுக்கு  புடவை வாங்கி கொடுங்கள், அதைவிட்டு விட்டு.. ஜீன்ஸ்... அது இது என்று..

நீங்கள் எங்களுக்கு அறிவுரை தருவது இருக்கட்டும். நான் உங்களுக்கு ஒரு அறிவுரை தருகிறேன். பாடுவதற்கு மட்டும் வாயை திறங்கள். மற்ற எதற்கும் வேண்டாம். நன்றி.

சினிமாகாரர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்து கொண்டால் போதும். சில நேரங்களில் சுய நலத்திற்காக, உண்ணாவிரதம், போராட்டம், லொட்டு லொசுக்கு என்று எல்லாம் டிராமா போடுவீர்கள். அதையும் சரி போகட்டும் என்று தள்ளிவிடலாம். ஆனால் சமூதாயர்த்திர்க்கான அறிவுரையை நீங்கள் சொல்லி "சமூதாயம்" கற்று கொள்வது என்றால், அந்த சமூதாயத்திற்கு "ஐயோ".

பின் குறிப்பு:

 நான் பொதுவாக ஒரு வலை பதிவு எழுதிய பின் அதற்கு ஏற்றார் போல் ஒரு படத்தை கூகிள் தலத்தில் சென்று எடுத்து போடுவேன். இந்த பதிவிற்காக தெரியாமல் " டிரெஸ்ஸிங் ஹாபிட் ஆப் கேரளா உமன்" என்று தேடினேன். ஒரு படம் உருப்படியாக கிடைக்க வில்லை, சரி என்று ஜீன்ஸ் அணிந்த பெண்ணின் கார்டூன் படத்தை போட்டு விட்டேன். 

18 கருத்துகள்:

  1. வணக்கம்
    அண்ணா
    சபாஷ் நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்கள்... உன்னையும் உன் வழி வந்தவர்களை திருத்தும் முதலில் உலகம் தானாத் திருந்தும்.....என்ற பதத்தை பாவித்து எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    - ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அவர் பழைய ஆள். அப்படி சொன்னதில் வியப்பேதும் இல்லை. அவரது பேத்திகளைக் கூட ஜீன்ஸ் அணியக் கூடாது என்று அவரால் தடுக்க முடியாது என்பது உண்மை.
    எனக்குத் தெரிந்து ஐ.டி.யில் பணிபுரியும் ஒருவர் நீண்ட தேடுதலுக்குப்பின் ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணங்களில் ஒன்று . அந்தப் பெண் ஜீன்ஸ் போடுவதில்லை . அவரும் ஐ.டி.இல்தான் பணி புரிகிறார். இளைஞர்களின் எண்ணமே இப்படி இருக்கும்போது ஜேசுதாஸ் போன்றவர்கள் மீது எப்படி தவறு சொல் முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! வருகைக்கு நன்றி... நானும் பழைய ஆள்தான். 48 முடிய போகிறது. நான் சொல்வதெல்லாம், எய்தவன் இருக்க அம்ப நோகாதே என்பது தான். நம் மனதில் அழுக்கை வைத்து கொண்டு மற்றவர்களின் ஆடையில் குறையை கண்டு பிடிப்பது என்னமோ எனக்கு நல்லதாக படவில்லை. ஜீன்ஸ் போடாத பெண்ணை தேடி மணந்த தங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள். ஜீன்ஸ் போடாத பெண்ணை தேடி மணந்த தங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.நான் எப்போதும் ஜீன்ஸ் போடாத பெண்களை போடுங்கள் என்று சொல்லவில்லை, போடும் பெண்களை போடாதே என்று சொல்லும் உரிமை நம்மக்கு இல்லை என்று தான் சொல்கிறேன். தொடர்ந்து வந்து வந்து கருத்தை பகிருங்கள்.
      www.visuawesome.com

      நீக்கு
  3. இது போன்ற சம்பவங்கல் சினிமாகாரர்கள்இன் மதிப்பை குரைக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.



    ஒரு பெண் ஜீன்ஸ் அணிவதால் இந்த பார்வைக்கு உட்படுத்த படுகின்றாள் என்றால் அது அவள் அணிந்துள்ள ஜீன்ஸ் மேலான
    தவறு இல்லை. அந்த ஆணின் வளர்ப்பில் உள்ள தவறு./// 100% உண்மை சார்.

    பதிலளிநீக்கு
  4. Dasettan spoiled his image and reputation when he appealed in support of his brother in law Anand Jon, a fashion designer. Anand was convicted for Rape and child abuse by US justice system. I still respect KJY as an artist, but not beyond that

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. OMG.. I have never realized that pervert Anand Jon is Jesudass' brother in law. It looks like it runs in the family ... ah. I have heard from some people about how bad was that guy Anand during the Don Bosco days. Good riddance to him..
      Thanks for visiting my blog.

      நீக்கு
  5. ஜீன்ஸ் /சல்வார் பெண்களுக்கு பாதுகாப்பான உடை.அதை ஏன் தடுக்க வேண்டும்.தமிழ் நாட்டு ஆண்கள் பலரின் கருத்தே அப்படி தான் இருக்கும்.இங்கு கல்வி என்பது ஒரு கூத்து.
    குதிரைக்கு கடிவாளம் இட்டது போல் எதையும் எதிர் கேள்வி கேட்க விடாமல் சிந்திக்க விடாமல் செய்யும் அவலம். குற்றவாளியை ஜெயிலில் போடாமல் வெளியே விட வேண்டும் என்ற அளவிற்கு சிந்திக்கும் திறம் அற்று போயுள்ளது. தினமணி போன்ற பத்திரிகைகளே இதை ஆதரிக்கின்றன. இவர்கள் எதற்கு பத்திரிகை நடத்த வேண்டும். இவர்கள் பொருளை ஒருவன் திருடிவிட்டு 18 ஆண்டு இழுத்தடித்து விட்ட பின்பு அவனை விட்டு விடலாம் என்று சொல்வார்களா ? அப்படி எனில் கல்வி எதற்கு, போலீஸ் எதற்கு , நீதி மன்றம் எதற்கு. தான் எதையாவது பெற்று வாழ வேண்டும் என்று சமுதாயத்தை சீரழிக்கும் இத்தகைய பத்திரிகை ஒரு அவலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கேள்வி. ஆனால் நீங்கள் கூறிய 'தினமணி" அப்படி என்று படித்தவுடன் கொஞ்சம் அதிர்ந்து விட்டேன் அது ஓர் நடுநிலை தாளாக இருந்ததே. எப்போது மாறியது? நான் எப்போது கூறுவது போல் " A Nation Deserve its Leader". எவ்வளவு சரியான கூற்று. வருகைக்கு நன்றி...

      நீக்கு
  6. நான் பிரான்ஸ் நாட்டில் ஒரு அக்டோபர் மாதத்தில் புடவை கட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றேன். அந்த கடையின் முதலாளி “ஏன் இந்த மாதத்தில் இப்படி கவர்ச்சியாக உடை அணிந்தீருக்கிறீர்கள்?“ என்று கேட்டாள்.

    இதற்கு அன்று என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "Beautyயும் கவர்ச்சியும் is in the eyes of beholder". எனக்கு இரண்டு teenage பிள்ளைகள் உண்டு. அவர்கள் என்ன அணிய வேண்டும் என்று தகப்பானாகிய நான் சொல்கிறேன். இவர் என்ன? என்னக்கும் என் பிள்ளைகளுக்கும் நடுவில். முதலில் உன் வீட்டை சுத்தம் செய். அந்த பிரெஞ்ச் கடையில் தங்களுக்கு நடந்ததை வைத்து அந்த புடைவையின் மேல் குற்றம் சொல்ல இயலுமா? இவர் நல்ல பாடகர். நன்றாக பாடினார், சம்பாதித்தார். அத்தோடு இருந்தால் போதும்.
      இவர் ஆஸ்திரேலியாவில் பாடுகின்றேன் என்று சொல்லி ... இன்னும் கொஞ்சம் பணம் போட்டு கொடுக்கும் வரை மேடை ஏற மாட்டேன் என்று அடம் பிடித்தததை நானும் கேள்வி பட்டேன்.
      வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி, அருணா அவர்களே...

      நீக்கு
  7. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. Usually I do not learn post on blogs, but I would like to say
    that this write-up very pressured me to try and do it!
    Your writing taste has been surprised me. Thank you,
    quite nice post.

    My blog; home improvement renovation ()

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you for visiting and passing your comments as well. BTW, I just couldn't get to your blog, with the information you have given. Could you please get me the link. I would love to read your blogs. Thanks again.

      நீக்கு
  9. Hey! Do you know if they make any plugins to safeguard against hackers?
    I'm kinda paranoid about losing everything I've worked hard on. Any tips?



    Allso visit my weblog: m88

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா26 மே, 2018 அன்று 2:41 PM

    Woah! I'm really enjoying the template/theme of this blog.
    It's simple, yet effective. A lot of times it's tough to get that "perfect balance"
    between usability and visual appearance. I must say you've done a superb job with this.
    Also, the blog loads super fast for me on Internet explorer.

    Superb Blog!

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா26 மே, 2018 அன்று 11:35 PM

    Amazon present card generator no download no surveys.

    பதிலளிநீக்கு