வெள்ளி, 19 செப்டம்பர், 2014

என் சமையல் அறையில்...



அப்பா.. நீங்கள் ஏன் தணிக்கையாளர் வேலைக்கு படித்தீர்கள். உங்களுக்கு கணக்கு என்றால் ரொம்ப பிடிக்குமா?

கேட்டாளே என் மூத்த ராசாத்தி. ஒரு கேள்வி.

அவளிடம் சொல்ல முடியுமா? 10ம் வகுப்பில் அப்பா எடுத்த மதிப்பெண்ணிற்கு அறிவியல் மற்றும் கணக்கு படிக்க வக்கு இல்லை, அதனால் தான் கணிகவியல் எடுத்து படித்தேன் என்று. அதனால் யாரையும் பாதிக்காத ஒரு சின்ன பொய் ஒன்றை அவிழ்த்து விட்டேன்.



அப்படி ஒன்றும் கணக்கில் விருப்பம் இல்லை. இருந்தாலும் அறிவியல் படிக்க எனக்கு விருப்பம் இல்லை, அதனால் தான் நான் கணக்கு பிள்ளை ஆனேன்,

ஒரு வேளை கணக்கு பிள்ளை ஆகி இருக்காவிட்டால் என்னவாக ஆக விருப்ப பட்டு இருப்பீர்கள்?

இந்த காலத்து பிள்ளைகள் ஆயிற்றே, அவர்கள் கேட்டால் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தெரியிலே மகளே, அப்பா அந்த அளவிற்கு யோசித்தது இல்லை.

இல்லை அப்பா, ஒவ்வொரு மனிதனும் தன வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை ஆரம்பித்து வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தால் சில காரியங்களை வித்தியாசமாக செய்ய நினைப்பான். அப்படி உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால் என்ன செய்ய விரும்புவீர்கள்.

ஆழ்ந்த சிந்தனையில்என்னை தள்ளி விட்டாள். எதை திருத்தி மாற்றி செய்து இருப்பேன்...

+2 நாட்களில் " மூடு பனி" படத்தின் பாதிப்பால் கையில் கேமாரவுடன் தெரு தெருவாக அலைந்தேனே... ஒருவேளை.. Cameraman?

அதன் பின் பாக்கியராஜின் திரைகதை பாணியில் மயங்கி என்னை நானே மறந்து, நானும் எழுத துவங்கினனே ... Screen Play Writer?

கல்லூரி நாட்களில் பாடல்களும் சரி-பேச்சு போட்டிகளும் சரி, போட்டி போட்டு கொண்டு போய், தோல்வியுற்று வருவேனே ... Entertainer?

முதுகலை முடிந்ததும், தேர்வு முடிவுகள் வருமுன்னே மகளிர் கல்லூரியில் பேராசிரியராக வலம் வந்து... பின்.. "Lead us not into temptation" என்று எனக்கு நானே சொல்லி கொண்டு அந்த வேலையை விட்டேனே.. Professor?

கோலியும், கில்லி தண்டாலும் ஆடி கொண்டு இருந்த நான், கோல்ப் (Golf) என்னும் ஆட்டத்தில் மயங்கி, காசை கரி ஆக்கினேனே ... Golfer?

இந்தியாவில் வாழும் வரை மிகவும் கடினமான மற்றும் சற்றும் பாராட்ட படாத லாரி ஓட்டுனர்களை  பார்த்து விட்டு.. இங்கே வந்த பின்  இந்த நாட்டின் அழகை பார்த்து இங்கே மட்டும் ஒரு லாரி ஒட்டுனராக இருந்தால், வேலை நேரத்திலேயே ஒவ்வொரு ஊராக பார்க்கலாம் என்று எண்ணி (மனைவி-அம்மா-பிள்ளைகள் மூவரிடமும் இந்த விபரீத ஆசையை சொல்லி திட்டு வாங்கினேனே). பின்னர் இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 70$ என்றதும்... பரவாயிலையே என்று வியந்தேனே... Truck Driver?

என்ன ஆகியிருப்பேன்?

அப்பா, என்ன பதிலை காணோம்? என்ன ஆகி இருந்து இருப்பீர்கள்..

தெரியில மகளே... நீயே சொல்லு, அப்பா, "கணக்கு பிள்ளை" ஆகி இருக்காவிட்டால், எந்த ஒரு வேலையை நன்றாக செய்து இருப்பார்.

நான் சொல்வேன், ஆனால் நீங்க கோச்சிக்க கூடாது..

நீ சொல்லி நான் கோவிச்சி... சொல்லு..

நீங்க ஒரு நல்ல சமையல் காரன் ஆகி இருப்பிங்க டாடி...

ஆமாடா, ராசாத்தி.. அந்த வேலையை மறந்து விட்டேன் பாரு. எஸ்.. நான் மட்டும் கணக்கு பிள்ளையாக இருந்து விடாவிடில் , ஒரு நல்ல தேர்ந்த சமையல் காரன் ஆகி இருப்பேன்.

சமைப்பதில் தான் என்ன ஒரு இன்பம். நாம் சமைத்து வைத்து, அதை மற்றவர்கள் சாப்பிடுகையில் அவர்கள் முகத்தில் தெரியும் அந்த திருப்தி ... அதற்க்கு இணை..

வார இறுதியில்... மனைவியும் பிள்ளைகளும் வெளியே சென்று இருக்கையில்.. வெளியே எதுவும் சாப்பிடாதீர்கள், நேரா வீட்டிற்கு வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டு... ஒரு அடாவடி சமையலை செய்து மேசையில் வைத்து விட்டு அவர்கள் வரவுக்காக காப்பதில் தான் என்ன சுகம்..

எஸ்... ஐ வூட் பி எ குட் குக்...

www.visuawesome.com


9 கருத்துகள்:

  1. haahaa. nallaa samalichu irukkuringa ungal makal idam..

    pathivai rasichen sir.









    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு, நேரம் கிடைக்கும் போது உங்கள் சமையல் குறிப்புகளையும் எழுதுங்கள். குறிப்பாக மீன் குழம்பு, இறால் சமையல் பற்றி. -கிரிஷ்

      நீக்கு
    2. ஆட்டு கால் சூப் பார்க்க நன்று.

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி மகேஷ்.. என்றைக்கு என் மகள் என் 10வது மதிப்பெண் இதழை பார்கின்றாளோ , அன்று இருக்கு எனக்கு தீபாவளி...

      நீக்கு
    4. கண்டிப்பாக சமையல் குறிப்பை பற்றி வீடியோ பதிவு போடுகின்றேன்.வருகைக்கு நன்றி கிரிஷ்.

      நீக்கு
  2. கைவசம் இவ்ளோ வாய்ப்பு இருந்துருக்கு அப்பவே... ஹா ஹா... நன்றாக சமைப்பதும் ஒரு பெரிய கலைதான் சார்.. நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமை
    நளபாக சக்கரவர்த்திக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கரந்தை அவர்களே! நன்றி. எதோ என்னால் முடிந்ததை சமையலறையில் செய்து வருகின்றேன்.

      நீக்கு
  4. நண்பரே தங்களுக்கு கைவசம் சமையல்கலையும் இருக்கிறதோ ? சமையல் குறிப்பு படிக்க வேண்டுமா ? இம்மாத எனது பதிவு ''சூட்தண்'' படியுங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு