வியாழன், 11 செப்டம்பர், 2014

"பிரிவோம் - சந்திப்போம்" நேரமோ?

நட்புக்களே...

உங்களில் அநேகருக்கு என்னை தெரிய வாய்ப்பு இல்லை. ஜூலை 10ம் தேதி முதல் நான் எழுதி வரும் இடுகைகளை தமிழ் மணத்தில் பதிவு செய்து வருகிறேன்.

தமிழ் மணத்தின் மூலம் உங்களில் நிறையவரின் அறிமுகத்தையும் நட்ப்பையும் பெற்றேன். அதற்கு தமிழ் மணத்திற்கு நன்றி.

ஆனால், கடந்த சில நாட்களாக தமிழ் மணத்தின் உள்ளே சென்றால், மணக்கவில்லை, துர் நாற்றம் தான். எங்கே பார்த்தாலும் சில தேவையில்லாத தலைப்புக்கள்- பதிவுகள்-படங்கள். எனக்கு தெரிந்த சிலர் இங்கே வர முகம் சுளிப்பதை அறிந்தேன்.

என்னை காண இங்கு வந்து இவைகளை கண்டு நொந்தவர்களை, தயவு பண்ணி மன்னிக்க  வேண்டுகிறேன்.இந்த இடத்தில என் பதிவு தேவையா என்ற கேள்வி எனக்குள் எழுந்து உள்ளது.

தமிழ் மணத்தின் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகொள். தயவு செய்து கொஞ்சம் கண்காணியுங்கள். இல்லாவிடில், இது ஒரு "மஞ்சள் வலைதளம் போல் ஆகிவிடும்.

எனக்கு நானே நேரம் குறித்து கொண்டேன். இங்கே என்னை காணாவிடில், www.visuawesome.com வரவும். அங்கே உங்களுக்குகாக என் வார்த்தைகள் காத்து இருக்கும்.

நன்றி.


5 கருத்துகள்:

  1. தமிழ் மணப் பொறுப்பாளர்கள் உடன் கவனிப்பார்கள் என எதிர்பார்ப்போம்
    தங்கள் பதிவினைத் தொடருங்கள் நண்பரே
    தங்களின் வலைக்கு வருகிறோம்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நான் அங்கே பதிகிறேன்... ஆனால் படிப்பதெல்லாம் நட்புகளின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டு என் நட்பில் இருக்கும் பதிவுகளை மட்டுமே என்பதால் எனக்கு அது குறித்துத் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே இருக்கும் தலைப்பை பார்த்து தான் நான் என் கருத்தை வெளியிட்டேன். உள்ள சென்று படிக்க விருப்பமில்லை. நல்ல இடத்தில் நான்கு பேர் படித்தால் போதும் எழில் அவர்களே.
      தங்கள் வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி.

      நீக்கு